???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நாளை நடை திறப்பு 0 அரசியல் வெற்றிடம்: ரஜினி கருத்து கமல் ஆதரவு 0 தமிழ்நாட்டின் மீதான நம்பிக்கைத் தகர்க்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின் வேதனை 0 கர்நாடகா: பா.ஜ.க சார்பில் போட்டியிடும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் 0 ’இனி எச்சரிக்கையாக பேசுங்க ராகுல்’: உச்சநீதிமன்றம் அறிவுரை 0 ரஃபேல் மறுசீராய்வு வழக்கு தள்ளுபடி! 0 ரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 11 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன் 0 செல்போன் கண்டுபிடித்தவரை மிதிக்க வேண்டும்: அமைச்சர் பாஸ்கரன் 0 ரூ.300 கோடி வசூல் செய்த பிகில்! 0 சிலைகளை மீட்க பிரதமர் மோடியே காரணம்: தமிழக அரசு 0 எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி குறைந்தது! 0 பெண்ணியம், நாத்திகம் போன்றவை தீவிரவாத எண்ணங்கள்: சவுதி அரேபியா
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் அரசு கல்லூரி!

Posted : புதன்கிழமை,   ஜுலை   10 , 2019  22:43:28 IST

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பெயரில் இந்த ஆண்டே ராமேஸ்வரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை துவங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

உயர்கல்வித்துறை இது தொடர்பாக அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் 2019-20 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது ராமேஸ்வரத்தில் 2019-20ம் கல்வியாண்டில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பெயரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடபட்டது.

அதனை செயல்படுத்தும் வகையில் , 2019-20ம் கல்வியாண்டு முதல் ராமநாதபுரம் மாவட்டம் , ராமேஸ்வரத்தில் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பெயரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை இந்த ஆண்டு துவங்குவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்த கல்லூரியில் இளங்கலை தமிழ், ஆங்கிலம், கணிதம், பி.காம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுடன் துவக்கப்படவுள்ளது.

ராமேஸ்வரத்தில் பேய்கரும்பு பகுதியில், கலாம் நினைவிடம் அருகிலேயே இந்த அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைய உள்ளது. இந்த கல்லூரியில் சேர்வதற்கு மாணவர்களுக்கு விண்ணப்பம் விநியோகிக்கும் பணிகள் துவக்கப்பட்டு இந்த ஆண்டே மாணவர்கள் சேர்க்கப்பட்டு வகுப்புகள் செயல்பட உள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...