???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் 0 தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு 0 மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின 0 விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை 0 மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் 0 அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா? வைகோவின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம் 0 வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை இன்று கூடுகிறது! 0 தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் 0 வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது 0 பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் 0 மொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கியது திமுக 0 பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து 0 கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் Paytm ஆப்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கடத்தப்பட்ட இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அடி உதை! பாகிஸ்தானில் அநியாயம்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   16 , 2020  05:21:05 IST


Andhimazhai Image

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று காலை காணாமல்போன இந்திய தூதரக அதிகாரிகள் இருவர் நேற்றிரவு ஒன்பதரை மணி அளவில் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். நேற்று காலை எட்டரை மணி அளவில் பெட்ரோல் பங்க் ஒன்றில் அவர்கள் பயணம் செய்த வாகனம் நின்றபோது  ஆறுவாகனங்களில் வந்த சுமார் பதினைந்து பேர் கொண்ட கும்பலால் அவர்கள் கடத்தப்பட்டனர். கைகள் கட்டப்பட்டு, தலையில் சாக்குப்பையால் மூடப்பட்டனர். பத்துநிமிட பயணத்துக்குப் பின் ஓரிடத்தில் அடைக்கப்பட்ட அவர்கள் ஆறுமணி நேரம் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தடிகளால் தாக்கப்பட்ட அவர்கள், மாசடைந்த நீரை குடிக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டனராம்.

முன்னதாக இவர்கள் தூதரக சாலையில் விபத்து ஏற்படுத்தியதற்காகக் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் கூறின.

இந்தியாவில் உள்ள பாக் தூதரக அதிகாரியை அழைத்து வெளியுறவுத் துறை சார்பாக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட பின்னரே அந்த அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்.

உயிருக்கு ஆபத்தான காயங்கள் இல்லை என்றாலும் லேசான காயங்கள் அவர்கள் உடலில் காணப்பட்டன. பாக் போலிஸ் இவர்கள் மீது பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் இவர்கள் காரில் பத்தாயிரம் ரூபாய் பாகிஸ்தானிய கள்ளப்பணம் இருந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மே 31 ஆம் தேதி டெல்லியில் இரு பாகிஸ்தானிய அதிகாரிகள் உளவு பார்த்த குற்றத்துக்காகப் பிடிபட்டு, உடனடியாக பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுப்பதற்காக இது நடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...