???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை 0 பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் 0 பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு! 0 பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு 0 ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி 0 தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் 0 மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆயிரத்தொரு இரவுகள்!- நாடக அனுபவம்

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   21 , 2019  05:17:56 IST


Andhimazhai Image

ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோரின் அரசியல் வருகைகள் உள்ளிட்ட சமகால நிகழ்வுகள் மட்டுமல்லாமல் வந்திருந்த பார்வையாளர்கள் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை! ஐந்தே பேர்தான் இந்த நாடகத்தில் நடித்தவர்கள். ஐம்பதுக்கும் மேற்பட்ட பாத்திரங்களாக இவர்களே மாறி அடித்த ரகளையில் சிரித்து சிரித்து ஒருபக்கமாக வாய் சுளுக்கிக் கொண்டு விட்டது.

 

வினோதினி வைத்தியநாதன் இயக்கி மேடையேறிய ஆயிரத்தொரு இரவுகள் நாடகம் சமீபத்தில் சென்னை அருங்காட்சியகக் கலையரங்கில் நிகழ்த்தப்பட்டது. 1001 அரேபிய இரவுகள் கதைதான். மன்னன் ஷாரியர் மணந்துகொள்ளும் பெண்களை முதல்நாளே கொன்றுவிட,கடைசியில் ஷாரஸா என்ற பெண் அவனுக்கு ஆயிரம் இரவுகள் கதை சொல்லி உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் கதைதான்.

 

பாக்தாத் உடைகள், அரபு மொழி என மெல்ல சாதுவாகத் தொடங்கும் கதை, சடாரென நடிகை லட்சுமிப்ரியா வந்து இடுப்பை வளைத்து ஒரு ஆட்டம் போடுகையில் சூடுபிடிக்கத் தொடங்குகிறது. இவருடன் வினோதினி, ஷ்ரவன், வத்சன், நரேஷ் என மொத்தம் ஐந்து பேர்தான். இதே குழுவில் மன்னர் ஷாரியராக ஆண் பாத்திரங்களில் யார் வேணுமானாலும் மேடையிலேயே தேவைக்கு ஏற்ப மாறுகிறார்கள். ஒவ்வொரு கதையாக ஷாரஸா சொல்லச் சொல்ல அந்த கதை அங்கேயே நிகழ, அதற்கு ஏற்ப, அவரும் பாத்திரங்களாக மாறுகிறார்கள். கதை சொல்லும் ஷாரஸாவும் கதையின் ஒரு பாத்திரமாக, ஆள் போதாதபோது கதை கேட்டுக்கொண்டிருக்கும் மன்னர் ஷாரியரையும் பாத்திரமாக மாற்றி இழுத்துக்கொள்கிறார்கள். தலையில் தொப்பி வைத்தால் கலிபா அல் ரஷீத், கவசம் போட்டால் ஷாரியர்.

 

வசன உச்சரிப்பு, சின்ன சின்ன ஆடை மாறுதல்கள், சற்று தொய்வு ஏற்படும்போதெல்லாம் அட்டகாசமான நடனம், சிறந்த ஒலி மற்றும் ஒளி அமைப்பு என்று திகட்டத் திகட்ட இருந்தது. இவ்வளவு நீளமான நாடகத்தில் எப்படி களைப்பே இன்றி ஆடுகிறார்கள், வசனம் பேசுகிறார்கள்… ஓடுகிறார்கள், உருண்டு புரள்கிறார்கள் என ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இவை அனைத்துமே இயல்பாக செய்யப்பட்டன என்பதுதான் முக்கியம்! இந்த ஷரவன் என்ற நடிகர் காலை ஆட்டிக்கொண்டே என்னமாய் பிரித்து மேய்ந்தார் தெரியுமா? அவர் தலையில் தொப்பி வைத்து, கம்பீரமாக கலிபா அல் ரஷீத் ஆக உருமாறி நடந்து அட என்று கவனிக்க வைத்தார்! அடுத்த நிமிடமே அந்த கவனிப்பு உடைகிறது! கலிபாவுக்கு கீச்சுக்குரல்! நாடகம் முழுக்கவே இப்படித்தான்! எதையாவது உருவாக்குவது! அடுத்த கணமே அதை உடைப்பது! வினோதினி எழுதும் நாடகங்களில் இருக்கும் தனி முத்திரை இதுதான்… மன்னர் ஷாரியர் வரும்போது பூத்தூவுவதை வைத்து முழு இரண்டு மணிநேரமும் காமெடி பண்ணி இருக்கிறார்கள்! நரேஷ் வந்து பாடும் ராப் பாடலும் வத்சனின் கம்பீரமான உடல் மொழியும் குறிப்பிடத் தகுந்தவை!

 

ஆயிரத்து  ஒரு கதைகளையும் மேடையில் சொன்னால் டப்பா டான்ஸ் ஆகிவிடும்அல்லவா? எனவே இரண்டு மூன்று கதைகளை நிகழ்த்திக்காட்டி விட்டு, மீதிக் கதைகளை இந்த நடிகர்கள் ஒரே நேரத்தில் சொல்லத்தொடங்கி நிகழ்த்தும் காட்சி, நாடக மேடையின் உச்சகட்ட சாத்தியங்களைப் பயன்படுத்தும் திறமையைக் காட்டுகிறது! பார்வையாளர்கள் அசந்துபோய் பார்க்கிறார்கள்! மேடையில் இருக்கும் ஓர் உயரமான அறிவிப்பு மேடையில் ஆளாளுக்கு மாறி மாறி ஏறுகையில் விழுந்து வைக்கப்போகிறீங்கப்பா என்று தோன்றாமல் இல்லை!

 

என்ன ஒரே குறையாக உணர்ந்தது, நாடகத்தின் நீளம்தான்! கொஞ்சம் குறைத்திருக்கலாமோ எனத் தோன்றியது! ஒரு கையின் ஐந்து விரல்களும் எப்படி ஒத்திசைவுடன் செயல்படுமோ அந்த அளவுக்கு இவ்வளவு பெரிய, தடுமாறுவதற்கு வாய்ப்புகள் கொண்ட நாடகத்தில் சிறிதும் பிசிறு தட்டாமல் நடித்திருப்பது பாராட்டத்தக்கது!

 

வினோதினி நாடக இயக்குநராகவும் இருப்பதால்  சகநடிகர்கள் நால்வரையும் பிரமாதமாக ஒருங்கிணைக்கிறார்! நரேஷ் ஒரு காட்சியில் ஒரு தப்பான மந்திரக்கோல் எடுத்துவர, விளக்குகள் எரியும் சரியான மந்திரக்கோலை எடுத்துக் கொண்டுவந்து கொடுத்து இயல்பாக சமாளிக்கிறார்! அழகாக குழுநடனம் ஆடுகிறார்! கூடவே இயக்குநர் இருப்பதால்தான் எல்லாம் ஒழுங்காக இருக்கிறதோ?

 

அப்பப்போது மறக்காமல் கண்ணாடி மாட்டிக்கொண்டும், தலையில் சமையல்காரர் குல்லா போட்டும், குரல் எல்லாம் மாற்றிபேசியெல்லாம் நடித்திருக்கிறாரே லட்சுமிப்ரியா… அவரைப் பற்றி ஏதாவது சொல்லாமல் போனால் அந்த ஷாரியருக்கே அடுக்காது! இவருக்காக மட்டுமே இன்னொரு முறை நாடகம் பார்க்கலாம் என்றுதான் நினைக்க வைத்தது! அவ்வளவு தூரம் துடுக்காகவும் சுறுசுறுப்பாகவும் மேடையில் தோன்றினார்! இல்லையில்லை சுழன்றார்! அசத்துங்க மேடம்!

 

-மதிமலர்

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...