???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மேகதாதுவில் புதிய அணை: தமிழக அரசின் மனு மீது இன்று விசாரணை! 0 சிபிஐ இடைக்கால இயக்குநர் நியமன வழக்கு: தலைமை நீதிபதி விலகல் 0 போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பள பிடித்தம்: அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை 0 அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஆறுமுகசாமி ஆணையம் 7 மணிநேரம் விசாரணை! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம் 0 10% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளாராக நடிகை கரீனா கபூரை நிறுத்த கோரிக்கை 0 தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ 0 கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு! 0 கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்?: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி 0 சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் 0 எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி 0 மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் 0 கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு 0 சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் - 66 - அடுத்த வீட்டுக் கவிஞன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்!

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   12 , 2017  01:00:47 IST


Andhimazhai Image
மலையாளப் படங்களுக்கும் எனக்குமான பந்தம் பற்றிப் பல முறைகள் சொல்லி இருக்கிறேன். தமிழ் அளவுக்கு மலையாளத்திலும் சினிமாக்கள் பார்ப்பதும் பாடல்கள் கேட்பதும் என் வழக்கப்ரியம். பல ஆண்டுகளாக அரும்பாடு பட்டுச் சேர்த்த ஆயிரக்கணக்கான பாடல்களைக் கொண்ட கானவனம் என்னுடையது. அவ்வப்போது தொலைந்து திரும்புவதற்கான அகந்தொலையுமிடம் என் பாடல்காடு. குரல்களால் வருடி சொற்களால் தழுவி ராகத்தால் அலசி தாளத்தால் கழுவி அற்புத மலர்கள் உதிர்ந்தோடுகிற அருவியில் அகநீராடல்கள் அக்கரையின் பாடல்கள்.
               
 
இயல்பாகவே மலையாளிகள் இசைமயமானவர்கள். மற்ற திராவிட பிராந்தியங்களைக் காட்டிலும் சற்று சாஸ்த்ரிய சங்கீதத்தின் செறிவும் செல்வாக்கும் கூடுதலாய்க் கிளைத்தோங்கும் அவ்விடத்தில். ஒரு புதிய படப்பாடலை முதல் தடவை கேட்கும் போதே இன்ன ராகம் இன்ன தாளம் என்று ஸ்வரத்தினூடான அலசலைச் செய்து பார்ப்பது அவர்களது வழக்கம். இங்கே சங்கீதம் பாண்டித்யம். சேர நன்னாட்டில் அது தன்னியல்புக் காரியம்.இதனாலேயே தமிழ்த் திரைப் பாடல்கள் வெகு கவன சிரத்தையுடன் பார்த்துப் பார்த்து உருவாக்கப்படுகிற விடுதித் தன்மையும் ஜரிகைத் தனமும் மிகுந்தொலிக்க வல்லது. வித்யாசப் படுத்தியே ஆக வேண்டிய கட்டாயம் இங்கே உண்டு.மலையாளத்தில் பாடல்கள் ஒத்து ஒழுகுபவை. பெரிய வித்யாசங்கள் இல்லாமல் ஒன்றின் அருகாமையில் மற்றொன்று எளிதாகப் பூத்துக் கிளைக்கிற பெருமரத்தின் மலர்தலாய் மலையாளப் பாடல்கள் எளிமையான அதே நேரம் பாரம்பரிய இசைத்தலின் சட்டகங்களுக்குள்ளேயே இயங்கவல்லவையாக நேர்த்தப் படுகின்றன. எதுவெல்லாம் மலையாளப் பாடல்களின் இயல்புகளோ அவை குன்றிக் குறைவதாலேயே இந்தியாவின் மாபெரும் திரைப்பாடல் அகமாகத் தமிழ்த்திரையுலகம் விளங்குவதும் புரிபடும். நம் தமிழ்ப் பாடல்கள் என்றால் கேரளத்துக்கு நன்னாயிட்டு இஷ்டம்.
                .
 
 
கண்ணாடி பாகவதர் என்றால் மலையாள தேசங்களெங்கும் ஏகப் பிரசித்தம். செம்பை வைத்யநாத பாகவதரின் வழிவந்த கேசவன் நம்பூதிரிக்குத்தான் அப்படி ஒரு விளிப் பெயர்.அவருக்கு மூன்று மகன்கள் இரண்டு மகள்கள். அவர்களில் மூத்த மகன் தான் கைதப்றம் தாமோதரன் நம்பூதிரி.இங்கே புலன் மயக்க வந்த நாயகன். அவர் ஒரு பன்முகப் பிரதாபன்.அவரது இளைய சகோதரர் கைதப்றம் விஸ்வநாதன் நம்பூதிரியும் அறியப்பட்ட மலையாள இசை அமைப்பாளர்களுள் ஒருவர். தாமோதரன் நம்பூதிரியின் மகன் தீபாங்குரன் நம்பூதிரியும் இளைய தலைமுறை இசை அமைப்பாளர்களில் ஒருவர்.
     
 
இனி இந்த அத்தியாயத்தில் கைதப்றம் என்று விளிக்கப்படுவது அனைத்தும் தாமோதரன் நம்பூதிரி மாத்திரமே. ஹரிஹரன் சித்ரா பாடிய இப்பாடல் இடம்பெற்ற படம் வெள்ளித்திரா இசையமைத்தவர்  அல்ஃபோன்ஸ். பாடலை எழுதியவர் கைதப்றம். நம் ஊரில் ப்ரகாஷ்ராஜ் ப்ருத்விராஜ் நடித்து மீவுரு செய்யப்பட்ட வெள்ளித்திரையின் அசல் மலையாள மூலம் இப்படம். இந்தப் பாடல் ஒரு சோக-சௌந்தர்யம்.
                    
 
மலையாளத்தில் மட்டுமே கிடைக்கிற பாடல்களில் கண்ணகி படத்தின் இப்பாடல் ஒரு உதாரணம். இசை கைதப்றம் விஸ்வநாதன். இதனை எழுதியவர் கைதப்றம் தாமோதரன். ஜேசுதாஸ் பாடிய  காபி ராகத்தில் அமைந்த மலை நாட்டுத் தெம்மாங்கு இந்தப் பாடல். இதன் விடுகதைத் தன்மையும் பாடிய குரலின் ஈரம் குறைந்த வெம்மையும் பாடலை உன்னதமான ஓரிடத்தில் இருத்துகின்றன.  
             
 
கைதப்றம் ஒரு பன்முக ஆளுமை என்று சொன்னோமல்லவா..? அந்த ஊர் கங்கை அமரன் அல்லது டி.ராஜேந்தர் என்றால் தகும். அவர் ஒரு குணச்சித்திர நடிகர். கதாசிரியர். திரைக்கதையும் வசனங்களும் எழுதி இருக்கிறார். பல படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். ஒரு படத்தை இயக்கி இருக்கிறார். இவை அனைத்திலுமே கிட்டத்தட்ட வெற்றியே பெற்றிருக்கிறார்.
                 
 
எல்லாவற்றையும் விட மலையாளக் கவிதா உலகத்தின் பேருரு கைதப்றம். பற்பல பாடல்களுக்காக அறியப்பட்ட கவி அவர். இளையராஜா இசைக்கிற படங்களில் பெரும்பாலும் பாடல்களை எழுதுவது கைதப்றம் தன்னே. தமிழில் ஃப்ரெண்ட்ஸ் பெயர்க்கப்படும்போது அதற்கும் இளையராஜாதான் இசைத்தார்.இந்தப் பாடல் தமிழில் இடம்பெறவில்லை. கடல் காட்டின் நெஞ்சில் ஃப்ரெண்ட்ஸ் இளையராஜா இசையில் கைதப்றம் தாமோதரன் எழுதியது. 
               
 
பொதுவாக மலையாளப் பாடல்கள் ஆங்காங்கே தமிழ்ப் பாடல்களைப் போன்றவையாகவும் இருக்கத் தான் செய்கின்றன. இன்னொரு புறம் முற்றிலும் புதிதானவை என்று சொல்லத் தக்க அளவில் நாட்டுப்பாடல்கள் சொலவடைகள் பழமொழிகள் அங்கத விடுகதைகள் கிண்டல்மொழிதல் எனப் பற்பலவற்றின் அதே ஆதி வடிவம் கெடாமல் அவற்றைப் பாடல்களாகப் பயன்படுத்துவது கேரளத்தின் சுபாவம். நம் ஊரின் கானா போன்ற வடிவங்களும் அங்கு உண்டு.இவற்றோடு சாஸ்திரிய சங்கீதப் பாடல்களுக்கும் பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை ஏற்கனவே பார்த்தோம். இதைக் கேட்கலாம், "கண்டு கொதிச்சே கண்டெண்டு" . ஹெலோ நமஸ்தே எனும் படத்தில் விஜய் ஏசுதாஸ் பாடிய பாடலை எழுதியவர் கைதப்றம். கவிதைச்செறிவும் குரலின் ஆதிக்கமும் ஒன்றை விஞ்சி மற்றொன்று நம்மைப் போதையின் ஆழத்தில் ஆழ்த்திச் செல்கின்றன.
           
 
இவற்றுக்கு அப்பால் பொதுவாகப் பாடல்கள் உருவக உவமான உவமேயங்கள் நிரம்பித் ததும்புபவை மலையாளப் பாடல்கள். எதைத் தொட்டாலும் கவித்தேன் சாறு சிந்துகிற சொட்டுகிற அல்ல அல்ல கொட்டுகிற பாடல்களைப் படைப்பதில் சமர்த்தர்கள். காதலைப் பாடுவதில் இந்திய அளவில் தமிழுக்கு அடுத்தாற்போல் மலையாளப் பாடல்கள் பிற்பாடு கஸல் பாடல்கள் என்பது தான் ஒத்துக்கொள்ளப் பட்ட வடிவங்கள். ஆக காதலில் திளைக்கிற மலையாளப் பாடல்கள் கதைத் தன்மையும் இருண்மையும் பொங்குபவை. நிர்க்கதியை நிராதரவை உறவழிந்து இல்லாது போகிற வதங்கலை முன்வைக்கிற நிர்ப்பந்தங்கள். பல பாடல்கள் காலம் கடந்து ஒலிப்பவை.அவற்றில் தனக்கென்று தனி மதம் போலவே கைதப்றத்தின் பாடல்கள் தொழப் படுகின்றன. போற்றுதலுக்குரிய கனமான கவிதைகள் கைதப்றத்தின் பாடல்கள். ஒவ்வொரு பாடலிலும் இசையின் வேலை அலாதியானது.உலகமெங்கும் நிரம்பி இருக்கிற மௌனத்தினுள் மிக ஆழமான ஒரு உளிச்செதுக்கலாய் ஒலித்தலைக் கொண்டு நிகழ்கிறது 
 
 
கரளே நின் கைபிடிச்சால்  தேவதூதன் படத்தில் வித்யாசாகர் இசையில் கைதப்றம் எழுதி ஏசுதாஸ் ப்ரீதா கன்னா பாடிய இந்தப் பாடல். மிக மெல்லிய காற்றின் தவழ்தலைப் போலவே இப்பாடல் ஆரம்பிக்கிறது. மலையாளக் கவியின்பம் குறித்துப் பேசுகையில் மலையாளப் பாடலை அப்படியே அங்கனமே தந்து செல்வதே போதுமானதாய்த் தோன்றுகிறது. போதாக்குறைக்கு வித்யாசாகரின் ஒப்பிலா இசையும் ஏசுதாஸ் ப்ரீதா இருவரின் அற்புதக் குரல்களும் இன்னும் மனவருடலாய் நேர்த்துகிறது. முன் பழைய காலத்தின் வாசனையை இசையினெங்கும் படர்த்துவது இன்னும் கூட ரசம். சிறகுணரா பெண்புறாவாய் ஞானிவிடே காத்து நிற்பாய் என்று உருகும் போது பெண்குரலோடு நாமும் உருகுகிறோம். போதாக்குறைக்கு அலீனா அலீனா என்று எங்கோ ஆழத்திலிருந்து அழைப்பது ஏசுதாஸ்.. இசையில் தொலைபவர்களுக்கு மொழி ஒரு ஊடகம் மாத்திரமே அன்றித் தடையாவதில்லை என்று மெய்ப்பிக்கிற சொற்சாட்சியம் இப்பாடல்.
 
karale nin kai pidichal kadalolam vennilavu
ulkkannin kaazhchayil nee kurukunnoru venpirav
manthra kodi neythorunngi pallimeda poothorungi
karunya thirikalorungi mangalya panthalorungi
ennu varum nee thirike ennu varum nee
ennu varum nee thirike ennu varum nee
(karale)
 
ente jeevithabhilasham pranayalola makuvanayi  
veendum ennu nee poyi varum 
ini varum vasantha raavil ninte  
sneha janmaamake swanthamakkuvan njan varum
chirakunara penpiravayi njanivide kathunilppayi  
mazhavillin poonchirakil njan arikathaayi odiyetham
ini varuvolam ninakkayi njan tharunnithen swaram
aleena…aleena… aleena.. aleena…
(karale)
 
mizhikalenthinaanu vere mrudalamee karangalille
arikil innu nee illayo
enthu cholli enthu cholli yathrayothum innu njan
kadhana poornamen vakkukal
neeyilla janmamundo neeyariya yathra undo
neeyanayum ravu thedi njanivide kathu nilkkam
poyi varuvolam ninakkay njan tharunnithen manam
aleena…aleena…aleena..aleena
 
(karale)
 
 
புதிய முகம் ஷங்கர் மகாதேவன். ம்யூசிக் தீபக் தேவ். பாடலை எழுதியவர் கைதப்றம்.இந்தப் பாடல் இதுவரை நாம் கேளாத ஷங்கர் மகாதேவமாய் ஒலிக்கிறதல்லவா..? கவிதையின் செல்வாக்கு ஒரு பாடலை மொழி கடந்து ரசிக்கச் செய்யும் என்பதற்கு இந்த பாடல் ஒரு நற்சாட்சியம்.உடலைத் திருகி உயிரைப் பருகி நம்முள் கலந்து நம்மை வேறாக்கும் பாடல் இன்பாவஸ்தை. அரசியல் என்றொரு படம் தமிழில் வந்ததல்லவா..?ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் மம்முட்டி ரோஜா நடித்த இப்படத்திற்கு இசை வித்யாசாகர்.அதில் ஒரு பாடல் வரும் வாராய் என் தோழியே  மிதமான தெம்மாங்குத் தன்மையும் வடக்கத்தி கஸல் பாடலின் தனியாவர்த்தன ஏக்கப் பெருந்தனிமையின் அந்தகாரமும் இயைந்தொலிக்கும் நல்லிசைப் பாடல். அதன் மைய இசையிழைதலும் அதன் டெம்போ குறைக்கப்பட்ட வெர்ஷன் போல் ஒலிக்கும் இந்தப் பாடலின் இசையிழைதலும் அடுத்தடுத்த மழைகளாய் மனசுக்கலயம் நிறைந்தொலிப்பது தற்செயலல்ல. குரலால் மாத்திரமே வாய்க்கவல்ல சர்க்கரை ஷங்கர மஹாதேவ மழைத்தல். 
 
 
Picha vacha naal muthalkku nee ente swantham ente swanthamayi   
asha kondu koodu kootti naam ishtam koodi ennum ennum
picha vacha naal muthalkku nee ente swantham ente swanthamayi
asha kondu koodu kootti naam ishtam koodi ennum ennum
picha vacha naal muthalkku nee.....
 
 
Veedorungi naadorungi kalpathi therorungi pongalumayi vannu pournami
Veedorungi naadorungi kalpathi therorungi pongalumayi vannu pournami
kayil kuppivalayude melam kaalil padhaswarathinte thaalam
azhakai nee thulumbunnu arikil hridayam kulirunnu
 
Picha vacha naal muthalkku nee ente swantham ente swanthamayi
asha kondu koodu kootti naam ishtam koodi ennum ennum
picha vacha naal muthalkku nee
na na naa na na na nana nana naaaa na
 
dhirina dhirina ni dha pa ma ri ma ri pa ni dha sa ni dha ma pa
 
koolamittu ponpulari kodamanjin thaazhvarayil manjalayil maanju poyi naam
koolamittu ponpulari kodamanjin thaazhvarayil manjalayil maanju pooyi naam
chundil chorum chenthamizh chinthu maaril cherunnu muthamizh chantham
mridhu mounam mayangunnu amruthum theenum kalarunnu
 
Picha vacha naal muthalkku nee ente swantham ente swanthamayi
asha kondu koodu kootti naam ishtam koodi ennum ennum
picha vacha naal muthalkku nee ente swantham ente swanthamayi
asha kondu koodu kootti naam ishtam koodi ennum ennum
picha vacha naal muthalkku nee
 
 
3 Hridhaya sakhi sneha mayi aathma sakhi anuraaga mayi 
enthinu nin nombaram iniyum enthinu nin novukal iniyum 
ennum nin thunayai nizhalai nin arikil njan undello 
 
hridhaya sakhi sneha mayi aathma sakhi anuraaga mayi 
enthinu nin nombaram iniyum enthinu nin novukal iniyum 
ennum nin thunayai nizhalai nin arikil njan undello 
 
hridhaya sakhi aa aa aa 
 
Nee urangumoolam inum njan urangi ilelo 
nee unarnnu nokumbolum ninte koode undello 
kasturi maane thedunnathaare nee 
ninile gandham thedunna thengu nee 
omale kan thurakku en omale kan thurakku 
 
hridhaya sakhi...
 
oh ketarinja vaartha onnum sathyam alla ponne 
kandarinja sambhavangal sathyam alla kanne 
aayiram kangalaal aa mugham kaanuvaan 
aayiram kaikalaal meyodu cherkuvaan 
nine njan kaathu nilpu nine njan kaathu nilpu 
 
 
hridhaya sakhi sneha mayi aathma sakhi anuraaga mayi 
enthinu nin nombaram iniyum enthinu nin novukal iniyum 
ennum nin thunayai nizhalai nin arikil njan undello 
 
hridhaya sakhi................
 
 
 
இன்னும் சில கைதப்றம் பாடல்கள் இங்கே 
 
கட்டத்தொரு பெண்பூவு இசை எழுத்து இரண்டுமே கைதப்றம் பாடியவர் ஜேசுதாஸ்.
 
 
ஜெயச்சந்திரன், சுஜாதா மோகன், கைதப்றம் தாமோதரன், பாடல்கள் இசை: ஔஸ்பச்சன் கஸ்தூரிமான். இயக்கம்: லோகிததாஸ் 
 
 
கருப்பினழகு வெளுப்பினழகு. இன்றைய இளமைத் துள்ளலிசைப் பாடல் இது. ஸ்வப்னக்கூடு மோகன் சித்தாரா இசையில் ஜ்யோத்ஸனா  ராஜேஷ் விஜய் பாடியது கைதப்றம் எழுதியது. 
     
 
கைதப்றத்தின் நேரடியான அதே நேரத்தில் எளிமையான சொற்கூட்டங்கள் எப்போதுமே தாள எல்லைக்குள் வழுக்கிக் கொண்டு செல்லும் வார்த்தைப் புரவிகள் என்றால் தகும். பல வகைமைகளில் பாடல்களைப் படைத்திருக்கிற கைதப்றம் தன் அனேக பாடல்களில் யாராலும் யூகிக்க முடியாத ஒரு சில உன்னதங்களைப் படைப்பதன் மூலம் திரைப்பாடல் என்பதைத் தாண்டி மாபெரிய இலக்கியப் படைப்பின் அதே ஆதிக்கத்தை ரசிக மனங்களுக்குள் விதைத்து விடுபவர். இசை பூர்வ அனுபவங்களாகவே தன் பாடல்களைப் படைக்க விரும்புகிற இசைக்கவி கைதப்றம் தன் பாடல்களின் கவித்துவ உயரங்களின் மூலமாகவே காலத்தின் பிற வரிசைகளிலிருந்து விலகித் தனிக்கிறார்.
 
       
கேரளத் திரை ஆளுமைகளில் கைதப்றம் தாமோதரன் நம்பூதிரி ஒரு முழுமையான ஆளுமை. சித்ரா பௌர்ணமி தினத்து முழு நிலவு போன்ற அவர் தன் கவிதைகளுக்காக மாத்திரமில்லாது இசைத் திறனுக்காகவும் குரலுக்காகவும் நடிப்பிற்காகவும் கூடக் கொண்டாடத் தக்கவர். இன்னும் பல்லாயிரம் பாடல்களைத் தரவல்ல நில்லா நதி நல்லோடை சொற்சாகரம் கைதப்றம். புகழோடு வாழ்க.
 
 
 
(ஆத்மார்த்தி, தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத்தேடி   அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்)

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...