???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குடியரசு தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் முதலமைச்சர் 0 கமல் ஊழலை திசை திருப்புகிறார்: திருமாவளவன் குற்றச்சாட்டு 0 பேராசிரியர் ஜெயராமனுக்கு இடைக்கால ஜாமீன் 0 கமல்ஹாசனின் அலுவலகத்தில் பலத்த போலீஸ் காவல் 0 சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு : 0 மக்கள் விரும்பாத திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது : பிரேமலதா விஜயகாந்த் பேச்சு 0 பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் : ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகளை மூட உத்தரவு 0 சசிகலாவுக்கு கூடுதல் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு: டி.ஐ.ஜி. ரூபா 0 இந்தியை அலுவல் மொழியானால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் : மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தில்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம்! 0 பக்கிங்காம் தடுப்பணையில் பராமரிப்பு இல்லை: உவர் நிலமாக மாறிய விவசாய நிலங்கள் 0 நாகையை சேர்ந்த மீனவர்களை சிறைபிடிப்பு: இலங்கை கடற்படையினர் அட்டூழியம். 0 தோற்றாலும் சாதனை படைத்த மீரா குமார்! 0 வெளிநாட்டு வங்கிகளில் ரூ.19ஆயிரம் கோடி கருப்புப் பணம்: ஜேட்லி 0 ஊழல் தகவல்களை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்புங்கள்: கமல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கவிஞர் ஆத்மாநாம் விருது – 2017 அறிவிப்பு

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   06 , 2017  01:13:50 IST


Andhimazhai Image

தமது முன்னோடியான கவிதைகள் மூலமாக நவீன தமிழ்க் கவிதைக்குக் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளவர்களைக் குறித்து யோசிக்கும்பொழுது தவறாமல் நினைவுக்கு வரும் கவி ஆளுமை கவிஞர் ஆத்மாநாம்.

 

தமிழ் நவீனக் கவிதையின் செழுமையான காலகட்டமான 1970களில் தனது ஈடுபாடுமிக்க கவி ஆர்வத்தைக் கவிதைகள், கவிதையியல் பற்றிய உரையாடல், கவிதைக்கென ஒரு பத்திரிகை, கவிதை மொழிபெயர்ப்பு எனப் பன்முகமான பங்களிப்பின் மூலமாக வழங்கியவர் ஆத்மாநாம்.

 

கவிஞர் ஆத்மாநாம் அவர்களின் இலக்கியப் பங்களிப்புகளை நினைவூட்டும் வகையிலும் கொண்டாடும் வகையிலும்  மெய்ப்பொருள் பதிப்பகம் 'கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை'யைக் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் கவிஞர் ஆத்மாநாம் பெயரில் ரூ.25,000 பரிசுத்தொகையும் விருதும் வழங்கி வருகிறது.

 

2015ஆம் ஆண்டு கவிஞர் இசை அவர்களுக்கும் 2016ஆம்  ஆண்டு  ‘மீகாமம்’ தொகுப்புக்காகக் கவிஞர் க.மோகனரங்கன் அவர்களுக்கும் ‘கவிஞர் ஆத்மாநாம் விருது’ வழங்கப்பட்டது.

 

இரண்டடுக்குத் தேர்வு முறையில் விதிகளுக்கு உட்பட்டு  அளிக்கப்பட்ட பட்டியலிலிருந்து கவிஞர் சுகுமாரன் அவர்களின் தலைமையில் எழுத்தாளர் பெருமாள்முருகன், கவிஞர் க.மோகனரங்கன் ஆகியோர் அடங்கிய நடுவர் குழு விருதாளரைத் தேர்வுசெய்து சமர்ப்பித்தது.  நடுவர் குழுவின் முடிவின்படி இந்த ஆண்டுக்கான ரூ.25000/- பரிசுத் தொகை அடங்கிய கவிஞர் ஆத்மாநாம் விருது  ‘பெருங்கடல் போடுகிறேன்’ தொகுப்புக்காகக் கவிஞர் அனார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

 

மொழிபெயர்ப்பாளர்கள் ஆர். சிவகுமார், ஜி. குப்புசாமி, எழுத்தாளர்  ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோர்  நடுவர்களாகச் செயல்பட்டு டிசம்பர் 2013 முதல் டிசம்பர் 2016 வரை வெளிவந்த கவிதை நூல்களிலிருந்து 2017ஆம் ஆண்டுக்கான கவிஞர் ஆத்மாநாம் மொழிபெயர்ப்பு விருதுக்குரிய கவிதைத் தொகுதியை, விருதாளரைத் தேர்ந்தெடுக்கக் கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளைக்கு அனுப்பிய முதற்கட்டத் தேர்வுச் சிறுபட்டியல் 2017 மே மாதம் வெளியிடப்பட்டது.

 

இந்த ஆண்டுக்கான ரூ.10000/- பரிசுத் தொகை அடங்கிய கவிஞர் ஆத்மாநாம் மொழிபெயர்ப்பு விருது - 2017    ‘தாகங்கொண்ட மீனொன்று: ஜலாலுத்தின் ரூமி’  கவிதை நூலுக்காக  என். சத்தியமூர்த்தி அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

 

பரிந்துரையாளர்கள், தேர்வுக்குழுவினர் ஆகியோருக்கு எங்களின் அன்பான நன்றி.

 

கவிஞர் அனார், என். சத்தியமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துகள்.

 

இந்த ஆண்டுக்கான (2017) விருதுவிழா வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறும்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...