???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்க பரிந்துரை 0 சபரிமலை நுழைவு போராட்டம் அறிவித்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்! 0 அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு! 0 மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் 0 ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்! 0 தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு! 0 கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை 0 `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் 0 இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்! 0 இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு! 0 பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி 0 குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை 0 தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா? ராகுல் கேள்வி 0 குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் - 46 - மலையாளக் கரையோரம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   ஜுலை   03 , 2017  23:51:31 IST


Andhimazhai Image

உங்க நிஜப் பேரே ஆத்மார்த்தி தானா..? இந்தப் பேருக்கு என்ன அர்த்தம்..? ஒரு கரத்தில் பேப்பர் கப்பை உயர்த்திக் கொண்டே கேட்டவருக்கு அனேகமாக இருபத்தி இரண்டு வயது இருக்கும். கண்ணாடியின் ஃப்ரேமுக்கும் கண்ணுக்கும் இடைவெளி வழியே சிந்துகிற பார்வை. அந்நியம் உடைக்கிற விருப்பம் இருப்பதாகக் கொஞ்சமும் தோன்றவிடாத பார்வையாக இருந்தது. முகத்தில் எங்கேயாவது சின்னப் புன்னகையையாவது சினேகபாவத்தின் துவக்கத்தையாவது தேடித் தோற்றேன். பல வருடங்களாகப் பின் நவீனத்துவப் படைப்புக்களை மாத்திரமே பார்த்துக் கேட்டுப் படித்து வளர்ந்துவந்த சிற்றிலக்கிய மனிதராக இருப்பாரோ என்று அஞ்சினேன். உண்மையில் இப்படியான எளிய கேள்விகளுக்குத் தான் பதில் சொல்வது கடினமாகிறது.


பின் நவீனத்துவர் மெல்லத் தன் பேப்பர் கப் தேநீரை உறிஞ்சியபடியே என் பதிலுக்காகக் காத்திருந்தார். இது நடந்தது சென்னை கவிக்கோ மன்றத்தின் நுழைவிடத்தில். மாடியில் இருந்தவன் ஒரு தோழமைக்கு வழி தெரியாத காரணத்தால் சொல்வதற்காக வந்தவன் தான் அப்படி மாட்டிக் கொண்டேன். ஆத்மார்த்தம்னு ஒரு சொல் இருக்கில்ல என்றார். நான் முகம் மலர்ந்தேன். என் இயற்பெயர் ரவிஷங்கர் என்று சொல்லி விட்டு அப்பாடா இனி ஒரு பிரச்சினையும் இருக்காது என்று எனக்கு நானே கை கொடுத்துக் கொண்டேன். நம் நவீனர் இப்போது இன்னும் தேநீரை மெல்ல உறிஞ்சியபடியே ஆக்ச்சுவல்லி மலையாளத்தில் ஆத்மாத்தின்னா என்ன அர்த்தம்னு தெரியுமோ என்றார். நான் தெரியாது என்றேன். அதற்காகவே காத்திருந்தவராக தற்கொலைன்னு அர்த்தம் என்றார்.


நான் உடனே அவரிடம் மலையாளத்தில் அது ஆத்ம ஹத்தி அல்லே.. என்றேன். அவர் சூடானவராக ஆத்ம ஹத்தின்னு சொல்றதில்லைங்க ஆத்மாஆத்தின்னு தான் சொல்வாங்க என்றார். நான் உடனே ஸார் என்னை ஷமிக்கணம். எண்ட பேர் ஆத்மார்த்தி. ஆத்மஹத்தி அல்ல. அதிலும் ஞான் எண்ட பேரைத் தமிழ்லினாணு வச்சிருக்கிறது. மலையாளத்தில் எனிக்கு வேறு பேர் உண்டு சேட்டன் பர்மிஷன் தந்தெங்கில் ஞான் பறையாம் என்றேன். பின் நவீனத்துவப் பயங்கரர் தன் பயங்கர விழிகளால் என்ன பேசுவதென்று தெரியாமல் என்னை முறைத்தார். பறையட்டே ஸாரே... மலையாளத்தில் எண்டபேர் "யோ--ன்-லா-ல்".


மோகன்லாலொட ஒண்ணாங்கிளாஸ் ஃபேனானு ஞான். அது தன்னே எனிக்கு ஈ பேர்.. ஸார் பர்மிஷன் தந்தெங்கில் எண்ட தெலுங்குப் பெயர் கன்னடப் பெயர் எல்லாம் பறையாம்.. ப்ளீஸ் என்ற போது நானும் அவரும் எங்கள் சந்திப்பை முடித்துக் கொண்டோம். மேலே நடந்த கூட்டத்துக்கு அவர் வரவில்லை என்பதை அப்புறம் யதேச்சையாக உறுதிப் படுத்திக் கொண்டேன்.

 

ஆத்மார்த்தம் என்பதை உடைத்தால் ஆத்மார்த்தி வருவானல்லவா.. உண்மையை சொல்லப் போனால் ஆத்மார்த்தி வருவாள் என்று தான் சொல்லவேண்டும். ஆத்மார்த்தன் ஆத்மார்த்தி ஆனந்தம் ஆனந்தன் ஆனந்தி என்பதைப் போல.. என்னய்யா இது இந்தப் பெயரென்ன இத்தனை கஷ்டமா..? இருநிலங்களையும் பிரதிபலிக்கிற தோழி லட்டுவிடம் அலுத்துக் கொண்டேன். என்ன இப்பிடி சொல்றாங்கிய என்று அதற்கு அவர் சொன்னது தான் ஹைலைட்டே.. உன்  பேரை ஆத்துன்னு வச்சிருக்கேன் என் ஃபோன்ல.. நீ வேணா ஆத்துன்னு மாத்திக்கயேன்..மனசுக்குள் லட்டுவை உதிர்த்து பூந்திகளாக்கி மறுபடி லட்டுவாய்ப் பிடித்தேன்.


நிற்க. இந்தப் பேர் தனக்கு மிகவும் பிடித்திருக்கிறதாகப் பலரும் சொல்லி இருக்கிறார்கள். இன்னமும் சொல்லியபடி இருக்கிறார்கள். உன் பெயரை வேறேதாவது வச்சிருக்கலாம் என்று சொல்ல முயன்ற சிலரை மனத்துப்பாக்க்கியால் ரவை தீருமட்டும் சுட்டிருக்கிறேன். ஆத்மார்த்தி தான் என்பெயர்.

 

 

அவ்வப்போது தேசியவிருதுகள் வழங்கப்படும் போதெல்லாம் மலையாளத்திற்குக் கூடுதலாய் எல்லாமே கிடைத்துவிடுவதாய் ஒரு ரைவல்ரி இருந்தது. முதன் முதலில் மம்முக்குட்டி தான் மலை மதில் கடந்து வந்தவர். மௌனம் சம்மதம் அவர் நடித்த நேரடி தமிழ்ப்படம். தளபதி அவரை எல்லோருக்கும் உரியவராக்கிற்று. அதன் பின் எங்கே மம்முட்டி தெரிந்தாலும் பற்றிப் பிடித்துக் கொண்டேன்.

 

சாணக்யன் கமல் நடித்த நேரடி மலையாளப்படம் அதை வெளியாகும் காலத்தில் விட்டுவிட்டு பிற்பாடு பார்த்து ரசித்தேன். இவற்றுக்கெல்லாம் மேலாக ஃபாஸில் அக்கரையிலும் இக்கரையிலும் தனக்கென்று தனி இடத்தை உண்டுபண்ணிக் கொண்டவர். அவரது பூவிழி வாசலிலே பூவே பூச்சூடவா இரண்டு படங்களும் விதவிதமான ரசனைக்கு விருந்தாகின. அரங்கேற்ற வேளை நகைச்சுவையும் செண்டிமெண்டும் கலந்த ஹிட்டாக மலர்ந்தது. வந்தது வருஷம் பதினாறு. தமிழின் அழகியல் படங்களுடைய பட்டியலில் வருஷம் பதினாறுக்கு எனத் தனி இடம் உண்டு. மெல்லிசைப் பாடல்களாகட்டும் கதை நகரும் விதமாகட்டும்.டிபிகல் மலையாளப் படம்.


ஜோஷி ஷாஜி கைலாஷ் சித்திக் - லால் கமல் நேற்றைக்கு முன் தினம் ஜீத்து ஜோஸப் வரைக்கும் மலையாளத்துக்கும் தமிழுக்குமான தொப்புள்கொடி உறவு செலுலாய்டிலும் உண்டென்பதறிக. பத்தாவது படிக்கும் போது தான் என் வாழ்வின் முதல் மலையாளப் படத்தைப் பார்த்தேன். முழு நீள மலையாளப் படம் அதன் பேர் பரதம். மதுரை மினிப்ரியாவில் ரிலீஸ் ஆகி மலையாளத்திலேயே 50 நாட்கள் ஓடிற்று. ஒரு சினிமாவைப் பார்ப்பதற்கு அதனோடு ஒன்றிப்போகிற இரண்டு விழிகளும் அதன் பின்னதொரு மனசும் இருந்தால் போதுமானது என்பதை எனக்குப் பயிற்றுவித்தது அந்தப் படம் தான். பிறிதொரு காலத்தில் கார்த்திக் தாடியில் பாதியை மீசையென்ற பேரில் வைத்துக் கொண்டு படுத்தி எடுத்த சீனு எனும் படம் மேற்சொன்ன பரதம் படத்தின் டைல்யூட்டட் ரீமேக். பரதம் பாருங்கள். சீனு பார்ப்பது உங்கள் இஷ்டம்.


உண்மையில் அந்தக் காலகட்டத்தில் படிப்பு சுத்தமாய்க் கிறுக்குப் பிடித்து என்னவோ புஸ்தகத்தைத் திறந்தாலேயே தலைசுற்றல் வாந்தி உள்பட பல சிம்டம்முகளுடனான ஒவ்வாமை என்னைப் படுத்திற்று. எனக்கும் படிப்பிற்குமான உலகப் போராக அது வெடித்தது., தியேட்டர்களுக்குள் பதுங்கினால் மாத்திரமே என்னைப் படிப்பெனும் பூதகணம் தின்னாமல் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அவ்வண்ணமே செய்யவும் தலைப்பட்டேன்.நோ ஸ்டடி. ஒன்லி சினிமா என்றானது வாழ்க்கை.


கர்நாடக இசைக்கு எப்போதும் முக்கியத்துவம் தருகிற சினிமா கேரள சினிமா.ஃப்யூஷன் இசை மீது மலையாளிகளுக்குக் கிறக்கம் உண்டென்றாலும் அதன் மீது ஒரு எள்ளலும் கொண்டவர்கள் அவர்கள். இது கேரள மனோபாவம். எதை மிகவும் விரும்புகிறார்களோ அதன் மீதே லேசான விசாரணை கிண்டல் ஆகியவையும் சேர்ந்தே ஒழுகும். காதலே அப்படித் தான் எனும் போது இசை மாத்திரம் விதி விலக்கா என்ன..? ஆனால் அவிடே இளையராஜா மீது பக்தியே உண்டு. ராஜாவின் எத்தனையோ தமிழ்ப்பாடல்களை அர்த்தம் பண்ணிக்கொண்டே மனனம் செய்து விடாமற்பாடி ரசித்து இன்புறும் பலரும் அங்குண்டு.


சந்தேகம் கொண்டவர்கள் கைக்கு சிக்குகிற மலையாள சேனலில் லயித்துக் காத்திருங்கள். நம்மூர் சூப்பர் சிங்கர் போல அங்கே எந்த டீவீயில் எந்த ஷோ என்றாலும் கண்ணுறுக. ஒரு முழு எபிசோடில் குறைந்த பட்சம் ஒருவராவது ஒரு தமிழ்ப்பாடலாவது பாடியே தீர்வர். இதில் இளையராஜா ரவுண்ட் எம்.எஸ்.வி ரவுண்ட் எல்லாம் கூட உண்டு. மேலும் பழைய கறுப்பு வெள்ளை பாடல்களையும் விடாமல் பாடுவார்கள். இசைதான் மையம் அங்கே. மொழி செகண்டரி தான். நான் ஒரு முறை அப்படியானதொரு ஷோவைப் பார்க்கும் போது எதிர்பாராமல் ஒரு ஏழு வயசுப் பய்யன் பாடிய பாடல் கண் போன போக்கிலே கால் போகலாமா..? நான் எதற்கோ கண் கலங்கினேன். எண்ட தமிழல்லே என்று ஞான் சப்தமாய்க் கத்தினது அக்கரைக்குக் கேட்டிருக்காது என்றாலும் கத்தினேன்.


இருக்கட்டும் 2007 ஆமாண்டு வெளியான சாக்லேட் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் என் கேரளார்வத்தின் தேசியகீதம் என்பேன். ஆயிரம் முறைகளைத் தாண்டிக் கேட்டிருப்பேன். எப்போதும் சலிக்காத மெல்லிசை வைடூர்யம் இந்தப் பாடல். ஜோய் அலூக்காஸ் ஷோரூம்களுக்குத் தமிழ் நிலத்தில் இடம் தந்தது வெறும் சொர்ண வியாபாரம். இது போன்ற பாடல்கள் தான் பசுந்தங்கம் புதுவெள்ளி மாணிக்க நிஜவைரம். கேட்டால் உருகி விடுவது நிஜம்.


 

இஷ்டமல்லே இஷ்டமல்லே 
உள்ளிலா என்னோடின்னும் 
இஷ்டமல்லே ச்சொல்லு இஷ்டமல்லே 
கூட்டுக்காரி கூட்டுக்காரி 
கூட்டிலோ நீயும் ஞானும் மாத்ரமல்லே 
ஒண்ணும் மிண்டுகில்லே..

(இஷ்டமல்லே இஷ்டமல்லெ)

வெள்ளிமுகிலோடம் மேலே...
வெள்ளிமுகிலோடம் மேலே 
திங்களொளி கண்ணும் நீட்டி 
முல்லைக்கு முத்தம் நல்கும்போழ்
ஓஹோ ஒரு நுள்ளு மதுரம் வாங்கும்போழ்...
புது மஞ்சாள் நின்னே புதியானாய்
நெஞ்சமொண்ணு கொஞ்சி வல்லாதே

(இஷ்டமல்லே இஷ்டமல்லெ)

ஓர்மையுடே கைகள் மெல்லே...
ஓர்மையுடே கைகள் மெல்லே
நின்னை வரவேற்குன்னுண்டே 
ராவிண்டே ஈனம் பெய்யும்போழ்
ஓஹோ...
கனவிண்டே பாயல் ச்சாயும்போழ்
சிறு ஸ்வாசம் காதில் சேரும்போழ்
கண்ணுப்பொத்தி யாரும் காணாதே..
இஷ்டமல்லே இஷ்டமல்லே..
உள்ளிலா என்னோடின்னும் இஷ்டமல்லே 
ச்சொல்லு இஷ்டமல்லே 
கூட்டுக்காரி கூட்டுக்காரி 
கூட்டிலோ நீயும் ஞானும் மாத்ரமல்லே 
ஒண்ணும் மிண்டுகில்லே..

இஷ்டமல்லே இஷ்டமல்லெ
இஷ்டமல்லே கூட்டுக்காரி...

           

இந்த பாடல் மெல்லே மெல்லே என்னில் நின்னகலும் என்ற சாகர் ஏலியாஸ் ஜாக்கி என்ற ஸ்டைலிஷ் மலையாளப் படத்தின் பூமிருதுப் பாடல்.இதைக் கேட்டுவிட்டு நடந்தே அக்கரைக்குச் சென்றேகலாம் என்று கிளம்பிக் கால்களை மனக்கயிறு கொண்டு கட்டிக் கொண்டதெல்லாம் நடந்தது. இன்றைக்கும் ஓய்வுப்போழ்தில் கேரளத்தில் ஸெட்டில் ஆகலாம் என்றொரு மனவிஸ்கி உண்டு. பார்க்கலாம். கோபி சுந்தரின் இசையில் ஜாஃபி தரக்கன் எழுதிய பாடலைப் பாடி மனசுகளெல்லாவற்றையும் பாடாய்ப் படுத்தியவர் புண்யா ஸ்ரீனிவாஸ்.


மெல்லே மெல்லே என்னில் நின்னகலும் ப்ரியனே ப்ரியனே...
மெல்லே மெல்லே என்னில் நின்னகலும் ப்ரியனே ப்ரியனே...
ஏகாந்தம் தீரம்....மௌனம் சாகரம்...

(மெல்லே மெல்லே )

நின் மொழிகளில் ஸ்வரமெழும் கவிதையில்
ஞான் தனிமையில் உணருமீ புலரியில்
கால் தளருமீ பகலுனின் ஒடுவிலாய்
நின் வழிகளில் மனமுடன் ஞகலவே 
நின் மௌனம் என் ஸ்வரமாகும்
மோகம் என் மழையாகும்
விரஹம் என் நிழலாகும் நேரம்
நீரும் என் நோவில் தலோதான்
நீ ஒரு நேர்த்த காற்றாய் வண்னனயாத்ததிந்தே

மெல்லே மெல்லே என்னில் நின்னகலும் ப்ரியனே ப்ரியனே...
மெல்லே மெல்லே என்னில் நின்னகலும் ப்ரியனே ப்ரியனே...
ஏகாந்தம் தீரம்....மௌனம் சாகரம்...

டார்விண்டே பரிணாமம் என்றொரு படம். வில்லன் வேஷத்தில் களை கட்டும் செம்பன் வினோத் ஜோஸ் இதன் நாயகவில்லன். ப்ரித்விராஜ் இதன் வில்ல நாயகன். படமே ஒரு அதிரிபுதிரிப் படம். அதில் வில்லன் காதலாகிக் கசிந்துருகும் போது வரும் பாடல் இது. நகுல் கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து இந்தப் பாடலைப் பாடி இருப்பவர் ஷங்கர் ஷர்மா. இந்தப் படத்தின் இசையமைப்பாளரும் ஷங்கர் ஷர்மா தான். எழுதியவர் பீஎஸ்.ரஃபீக்.

  

 

அன்வர் எனும் படத்தில் ஷ்ரேயா கோஷல் பாடிய இந்தப் பாடலுக்கு மொழியும் இல்லை தடையும் இல்லை. மனசைத் தோண்டிக் கொண்டே போய் ஜென்மங்களைத் தாண்டிய அமானுஷ்யத்தின் நிலமொன்றில் நம்மை ஆழ்த்திச் செல்லும் மாயகானம் இது. இந்தப் படத்தை மலையாளத்தில் பார்த்தே தீரவேண்டும் என்ற வெறியே ஏற்பட்டது. சென்னை மாநகரம் சென்ற ஒரு பயணத்தில் காத்திருந்து மலையாளத்திலேயே இதனைப் பெருந்திரையில் பார்த்து ரசித்தேன். பிற்பாடு தமிழில் வெளியான போதும் ஒரிஜினல் அளவுக்கு மொழிபெயர்க்கப் பட்ட பாடல் என்னை ஈர்க்கவில்லை. கோபிசுந்தரின் இன்னொரு முகிழ்முத்திசை இப்பாடல். 
Kizhakku pookkum orukkinenthoru chuka chukappaane
Puthukka pennin kavilil enthoru thudu thuduppaaane
Enikkum nenchin karikkumayi parannu vannoru maaran
Thudikkum kannil kinaavumayi thiranju vannoru thozhan.. hh
Khalbilethee.. khalbilethee.. khalbilethee khalbilethee Khalbilethee

Kizhakku pookkum orukkinenthoru chuka chukappaane
Puthukka pennin kavilil enthoru thudu thuduppaaane
Enikkum nenchin karikkumayi parannu vannoru maaran
Thudikkum kannil kanavumayi thiranju vannoru thozhan
Khalbilethee.. khalbilethee.. khalbilethee khalbilethee khalbilethee

Poovaano poovaano... ponnila veyilo ponnila veyilo
Thenoorum thenoorum punchiriyaano
Alakal njoriyana paalnilaavo paalnilaavo
Thenkinaavo naanamo
O.. Pirishamaakum chiraku veeshi
Arumayaayini kurukuvaan.. Arumayaayini kurukuvaan
Khalbilethee.. khalbilethee.. khalbilethee khalbilethee Khalbilethee

Ninisa.. ninisa ninisa..
ninisa.. ninisa garisari sari garisari garisari
Ninisa.. ninisa ninisa..
gamapani pama gamapani pamagari
gamapani pama gamagarisani

Shawwaalin shawaalin patturumaalil patturumaalil
poo thunnum ambili pole
Mozhikal maunathin
Kasavu noolilil Kasavu noolilil
Kanakanoolil korkkuvaan
A.. Ariya manjin kuliru veenee
Karuka naambukal unaruvan
Karuka naambukal unaruvan
khalbilethee.. aaa khalbilethee.. khalbilethee khalbilethee Khalbilethee

Aa.. oo.. Kizhakku pookkum orukkinenthoru chuka chukappaane.. aha
Haay,, Puthukkapennin kavililenthoru thuduthuduppaaane
Enikkum nenchin karikkumai parannu vannoru maaran
Thudikkum kannil kinaavumayi thiranju vannoru thozhan haay..
Khalbilethee khalbilethee.. khalbilethee khalbilethee Khalbilethee
Khalbilethee khalbilethee.. khalbilethee khalbilethee Khalbilethee 


மகேஷிண்ட ப்ரதிகாரம் படத்தின் இடையே இடம்பெறும் ஃப்ளாஷ்மாப் வீடியோ. தேன் துளி நிகர்க் களி காணொளி. இன்றைய உலகம் ஃப்ளாஷ் மாப் எனப்படுகிற கூட்டநடுமின்னல் பாடலாட்டங்களின் மூலமாய்க் கவனக்களவெடுத்தலை சாத்தியப்படுத்துகின்றனர். அவ்வாறான கவனக்களவின் மைய இழையாக சென்று சேரவேண்டிய கருத்துக்ள் குவிமையம் கொள்கின்றன. நலன் பயக்கும் புதுவித்து இதென்றறிக.


 

செலுலாய்ட் படத்தின் காட்டே காட்டே வைக்கம் விஜயலட்சுமி மற்றும் ஜீ ஸ்ரீராம் பாடிய அற்புதமான பாடல். இந்தப் பாடல் இடம்பெற்ற செலுலாய்ட் படம் ஜேசீ டேனியல் என்ற மலையாளத்தின் முதல் திரைப்படத்தைத் தயாரித்து இயக்கிய முன்னோடியின் வாழ்வைச் சித்தரிக்கும் அற்புதமான படத்தின் ஒரு நூறு ஆண்டுகளுக்கு முந்தைய நினைவு வருடலாக இடம்பெற்ற பாடல் இது. இதன் இசை எம்.ஜெயச்சந்திரன்.பாடலை எழுதியவர் ரஃபீக் அஹமத், இந்தப் பாடலைக் கேட்டுக் கண்ணுறும் போது இன்னொரு பாடலின் சாயல் நமக்குள் வந்து செல்கிறது. தூர்தர்ஷனின் தொடக்க காலத்தில் மிலே சுரு மேரா துமாரா என்ற பாடல்  தேச ஒற்றுமையை வலியுறுத்தி அடிக்கடி ஒளிபரப்பப் படும். அந்தப் பாடலின் பல்லவி இசை மேற்காணும் பாடலின் சரண நகர்தலுக்கான மைய இசையாக ஒத்து ஒலிப்பதை கவனிக்கலாம்.


மலையாள இசை எப்போதுமே பல்சுவை தான். கேரளம் இசைக்கான நிலம். பல்சுவைப் பாடல்களைக் கேட்டவண்ணம் தன்னைத் தானே அவ்வப்போது புனரமைத்துக் கொள்வதிலும் அவிட நிலம் கெட்டி. அதனினும் இனிது கேரளத்தின் இசை துல்லியம். உணர்வுப் பூர்வமான புத்திசைப் பாடல்கள் ஆயிரமாயிரம். இன்னும் காணணும்.காணிக்கும்.

ராஜா'ஸ் கார்னர்

         

ஒரு இரவு முனகல் பாடலாகத் தொடங்கி மெல்ல உருவேறி வேறொன்றாக மலர்ந்து மலர்த்த எல்லாராலுமா முடியும்..? இந்தப் பாடலின் தொகையறா சென்று பல்லவியில் சேர்கிற இடத்தை உற்று கவனியுங்கள். மதுபாலகிருஷ்ணனின் குரலுக்கு அருகாமையிலான இசையை கண்டறிந்து உச்சாடனம் போலவே அதனை முன்மொழிந்திருப்பார் ஞானி. இத்தனை உற்சாகமான பாடலுக்கான தொனியின் செலுத்தற்திசை மென் சோகமாக அமைவது சாதாரணமல்ல. ஒரு அற்புதத்தை விண்டு விண்டு அனுபவமாக்கித் தருகிற இசையின் கரங்கள் தந்துதவுகிற பேருபகாரம் அது. ஒன்லி ஒன் ராஜா என்று மலையாளத்தில் வாசித்துக் கொள்ளவும்.

 

இது யாத்ரா எனும் மலையாளக் காவியத்துக்கு ராஜா உருவாக்கித் தந்த ஒரு பாடல். இசையற்ற பாடல்கள் பொதுவில் அபூர்வமானவை. அப்படியான பாடலை ஒரு மனோநிலையின் உதவிகொண்டே செலுத்துவதென்பது மகாகடினகார்யம். ராஜாவுக்கு அது சுலபசவுகர்யம். செய்திருக்கிறார் பாருங்கள்.  மணிக்குட்டிக் குறும்புள்ள இந்தப் பாடலைப் பாடியவர் ஜேசுதாஸ். இத்தனை உற்சாகமான இன்னொரு ஜேசுதாஸ் பாடலைக் கேட்டிருப்போமா என்பதரிதே. 

 

மரக்குடையால் முகம் மறைக்கும் மானல்லா கிரீஷ் புத்தன்சேரி எழுதிய பாடலைப் பாடியவர் எம்ஜி.ஸ்ரீகுமார். இந்தப் பாடல் அத்தனை அசலான மலையாள கிராமிய இசைவார்ப்பாக மலர்ந்திருப்பதையும் இதற்கு அருகாமையில் தமிழில் உருவான பல ராஜாபாடல்களை நினைவுபடுத்தியபடி தனிப்பதையும் உணர முடிவது ரசம். ஆழ மடங்கள் இந்தப் பாடல் பழசி ராஜாவில் இடம்பெற்ற கோரஸ் என்ற உடனொலியாலேயே அமைக்கப் பட்ட பாடல்.

 

 

கடலைக் கையாலள்ளித் தீர்க்கவா முடியும்..? இளையாதராஜா இளையராஜா இசைசாகரம். சாகாவரம்.

 

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...