???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் 0 குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 0 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் 0 இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 0 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு! 0 திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் 0 ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் 0 மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 0 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள்! 0 சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 0 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி 0 மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் 0 சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல்! 0 ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் - 44 - ஒவ்வொருவர் ஞாபகம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   20 , 2017  04:46:04 IST


Andhimazhai Image

சமீபத்தில் எங்கோ படித்தது ஒரு சுவையான தகவலாய் எனக்குப் பட்டது. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு 'போஸ் - தேவா' என்ற பெயரில் மெல்லிசைக் கச்சேரிகள் நடத்துவதில் புகழ்பெற்று விளங்கிய இரண்டு பேர் பின்னாட்களில் இரு வெவ்வேறு காலகட்டத்தில் தமிழ்த்திரையிசையின் போக்கை, திருப்பத்தைத் தீர்மானிக்கிற இசையமைப்பாளர்களாகக் குறிப்பிட்ட காலம் கோலோச்சியிருக்கிறார்கள் என்பது கூறத்தக்க ஒரு சுவை. மேலும் அந்த இருவரது இசைப்பணிகளை ஒப்பிட்டு நோக்குகையில் வரைபடத்தில் அருகருகே ஓடுகிற பெருநிலத்தின் சக நதிகள் என்பதை உணரமுடிகிறது.'போஸ் - தேவாஎன்ற பெயரில் திரையுலகத்துக்கு வருமுன்பு இன்னிசை மேடைகளை மேலாண் செய்த இருவர் சந்திரபோஸ் மற்றும் தேவா. இருவரில் முதலில் வெளியாகி வெற்றி பெற்றவர் சந்திரபோஸ்.மச்சானைப் பார்த்தீங்களா படத்தின் மாம்பூவே பாடல் அவரை உச்சபட்ச அடையாளம் தந்தது.


சந்தக் கவிதையின் திரைப்பாடல் சாத்தியப்பாட்டுக்கான உயிரருகாமை முயல்வென்றே இந்தப் பாடலைச் சுட்ட முடியும்.

 மாம்பூவே சிறு மைனாவே
எங்க ராஜாத்தி ரோஜா செடி
முள்ளிருக்கும் கள்ளிருக்கும்
நினைக்கையில் இனிப்பாக இருக்கிறா 
நெருங்கையில் நெருப்பாகக் கொதிக்கிறா


புத்தம் புதுசு வெள்ளிக் கொலுசு
சத்தங்கள் கொண்டாட
சித்திரப் பொண்ணு செவ்வள்ளிக் கண்ணு
சங்கீதப் பண் பாட
கட்டுக் கருங்குழல் பட்டுத் தளிருடல் 
பின் புறம் நின்றாட
கொட்டடிச் சேலை கட்டிய வண்ணம் 
பல்லக்கு ஒன்றாட
அழகான மான்
அதற்காக நான்
பழகாத நாளெல்லாம் துயிலாத நாள்


மாம்பூவே சிறு மைனாவே

மஞ்சக் குருத்து பிஞ்சுக் கழுத்து
மன்னவன் பூச் சூட
மூக்குத்தி வண்ணம் மின்னுற கன்னம்
மஞ்சத்தில் முத்தாட
அந்திக் கருக்கலில் ஆற்றங்கரையினில் 
சந்திக்கச் சொன்னதென்ன
என்னை அணைக்கையில் தன்னை மறந்தவன் 
சிந்திச்சு நின்னதென்ன
மடல் வாழை மேல் 
குளிர் வாடை போல்
அவனோடு நானாடும் 
பொழுதெல்லாம் தேன்

மாம்பூவே சிறு மைனாவே


ரஜினி ரசிகர்களைத் திருப்திப் படுத்தவே முடியாது. அல்லது அவ்வளவு எளிதில் திருப்தி அடையாத பிடிவாதிகள் ரஜினி ரசிகர்கள். ஒவ்வொரு பாடலும் பார்த்துப் பார்த்து உருவாக்க நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு காலத்தில் மகாகனம் பொருந்தியவர்கள் ரஜினியின் ரசிகர்கள். 

 தொண்ணூறுகளுக்கு முந்தைய ரஜினியின் பாடல்கள் சிகரத்தின் கூர்நுனியும் அளப்பரிய அடிவாரமும் ஒன்று கலக்கும் ஒரே அறியாமையின் அசலும் நிழலுமாய்ப் பெருக்கெடுத்தன. தொண்ணூறுகளுக்குப் பிந்தைய ரஜினியின் பாடல்கள் ஒவ்வொரு வரியும் பற்பல கதைசொல்லிகளாய் மாறின. இந்த நுட்பமான வேறுபாட்டைப் பொது அளவையாகக் கொண்டால் டூயட்டுகள் வரை முன்பின் இந்த வித்தியாசத்தை நம்மால் உணர முடியும்.தொண்ணூறுகளுக்கு முந்தைய ரஜினி காலம் துள்ளலிசையை அடிப்படையாகக் கொண்டது. பெருகும் ஒலிகள் ரசிகனின் ஆழ்மனத்தில் ரஜினியை விதைத்து, ரஜினியாய் விஸ்வரூபம் எடுக்கச் செய்யும் ஒரே கட்டளையின் வெவ்வேறு எழுத்துருக்கள் என்கிற அளவில் ரஜினியின் பாடல்கள் உருவாக்கப்பட்டன.ஒரு பாடல் கேஸட் வெளியாகும்போதே பாதிப் பட வெளியீட்டுப் பதற்றம் உருவாகத் தொடங்கிக் கேட்கும்போதே ஈர்த்துவிடுகிற பாடல்கள் ஒரு படத்தின் வெளியீட்டுக்கு முன்னரே நெடிதுயரும் அதன்  வெற்றிக்குக் கட்டியம் கூறுகிறவையாக மிளிர்ந்தன. அப்படிப்பட்ட காலகட்டத்தில் எம்.எஸ்.விஸ்வநாதனுக்குப் பிறகு இளையராஜாவுக்கு மாற்றாக, தொண்ணூறாம் ஆண்டுவரை பல வெற்றிப் படங்களை இசையமைத்து, ரசிக குட் புக்கில் இடம் பெற்றவர்களின் பட்டியலில் முதல் இடம் சந்திரபோஸுக்கு.


ஹம்சலேகா, சங்கர் கணேஷ், எஸ்.பி.பாலசுப்ரமணியம் போன்ற வெகு சிலர் சொற்பப் படங்களுக்கு இசையமைத்த போதிலும்,விடுதலை ராஜா சின்ன ரோஜா மனிதன் போன்ற படத்தின் அத்தனை பாடல்களையும் சிக்ஸர்ஸ் ஆக்கி இருப்பார் சந்திரபோஸ்.சந்திரபோஸின் அழியாத நல்வைரப் பாடல்களை பார்க்கலாம். எல்லா வகைமைகளிலும் செறிவான பாடல்களைத் தந்திருக்கிறார் போஸ்.ஜெயச்சந்திரன் மலேசியா ஜேசுதாஸ் வாணிஜெயராம் ஷைலஜா ஆகியோர் போஸ் விரும்பிப் பாடல்கள் அளித்த பாடகர்கள்.. மற்றவர்க்கும் பாடல்கள் உண்டென்றாலும் இவர்களுக்குக் கொஞ்சம் கூடுதல்.அன்பே சிந்தாமணி மலேசியா ஜானகி இணைந்து பாடியது தரையில் வாழும் மீன்கள் படத்திற்கான பாடல். ராஜாவே ராஜா நான் தானே ராதா விடுதலை படத்திற்காக ஜானகி பாலு இணை பாடியது.  சின்னச்சின்னப் பூவே கண்ணால் பாரு போதும் ஜேசுதாஸ் பாடியது மற்றும் காக்கிச்சட்டை போட்டமச்சான் மலேசியா ஷைலஜாபாடியது இரண்டும் சங்கர் குருவில் ஆண்டவனைப் பார்க்கணும் அவனுக்கும் ஊத்தணும் மக்கள் என் பக்கம் படத்தில் கொத்துக்கொத்தாய் மல்லிகைப் பூ கொண்டு வந்தாய் நீ எனக்கு புதுவாரிசு ஜேசுதாஸ் மற்றும் வாணி சின்னப் பட்டாம்பூச்சி ரெக்கை கட்டி பறக்குது கண்ணா சுகமான சுமைகள் சித்ரா கதாநாயகன் படத்தில் பூ பூத்ததை யார் பார்த்தது காட்டுக்குள்ளே கருகமணி ஜானகி பாடியபாடல் நான் சூட்டிய மலர் தேடும் என் காதல் இந்தப் பாடல் இடம்பெற்ற படம்  ஒரு மலரின் பயணம் ஆரம்பத்துக்கான சிறப்பான உதாரணம் ராஜாவே உந்தன் ராஜ்ஜியத்தில்தான் ரோஜாக்கள் எங்கும் பூத்திருக்கத்தான் மருமகள் க்ளப் சாங் பாலு ஷைலஜா  ஓ மேகமே...சின்னச்சின்ன ஆசைகள் யேசுதாஸ் மற்றும் ஜானகி பாடியது வாணி விழி இரண்டும் மீட்டும் வீணை புது வசந்தம் சிந்தும் தேனை கடற்கரை தாகம்  செல்வாக்கு இளமையின் நினைவுகள் ஆயிரம் மனதினில்  வாணி ஜெயராம் ஜெயச்சந்திரன் இணை  கண்மணியே நீ எங்கே அன்னக்கிளி சொன்னகதை மனோ. 

அது அந்தக் காலம் சின்னஞ்சிறு வண்ணக்கிளி காதில் வந்து பாடும் பாடல் என்ன பொருள் என்ன திக்கித் திக்கிப் பேசியதேன்  கலியுகம் படத்தில் வயதுக்கு வணக்கம் வாலிப மயக்கம் அடுத்த வீட்டு சொத்தை அறுக்க நெனச்சவன் கங்கை அமரன் பாடிய பாடல் பள்ளியிலே வெள்ளி நிலா பாலு பாடிய சோகப்பாடல் மல்லிகை பூ பூத்திருக்கு அது மழையில் நனைஞ்சிருக்கு  வாய்க்கா வரப்புக்குள்ள வயசுப்புள்ள தாய்மேல் ஆணை வான்மேகம் அது பூத்தூவும் நல்லவன் வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை மாநகரக் காவல் சந்தோஷம் காணாத வாழ்வுண்டா வசந்தி யாரோ மன்மதன் ராஜாத்தி ரோஜாக்கிளி எஸ்பிபாலு உண்மையில் ராஜாத்தி ரோஜாக்கிளி ஒரு ம்யூசிகல் ட்ரீட் என்பேன். பல்வேறு பட்ட வகைமைப் பாடல்களால் அலங்கரித்திருப்பார் சந்திரபோஸ்.காலமெல்லாம் உன் மடியில் கார்மேகம் ஊர்கோலம் போகும் காதலின் தூதாக உனை வந்து தேடும் புல்லாங்குழலிசையை மைய இசையாகக் கொண்டு பெருகும் பாடல்.பாலுவும் ஜானகியும் பாடிய பாடல்.மன்மத ஓடங்களே மந்திரம் பாடுங்களே தென்றலுக்கு ஒரு தந்தியடிக்கணும் சம்மதம் சொல்லுங்களேன் கசங்காமல் தழுவுங்கள் கண்மணிப் பூக்களே. பாலு வாணி இணை பாடியது தண்ணீரில் மீனழுதால் கண்ணீரைக் கண்டது யார்..?தனியாக நானழுதால் என்னோடுவருவது யார்.யார் யார்..?  வடிவங்கள் ஜேசுதாஸ் நிலவென்ன பேசுமோ இளங்காற்று வீசுமோ விழியோடு உறவாடும் மொழியென்ன மௌனமோ சந்திரபோஸ் வடிவங்கள் ஒரு மலரின் பயணம் தந்தானா தந்தானா தாளத்திலே இவள் சத்தங்கள் போடுகிறாள் வாணி ஜயராம்..கவிஞன் என்னைப் பாடலாம் ரசிகன் என்னைப் பார்க்கலாம் தண்டனை வாணி ஜெயராம் பாடிய சூப்பர் ஹிட் பாடல் பூவே தாழம் பூவே கோயில் யானை ஜானகி பாலு.


ஓடையின்னா நல் ஓடை ஒளிஞ்சிருக்கும் பூஞ்சோலை முத்துலிங்கம் எழுதிய பாடல் ஜேசுதாஸ் மற்றும் ஜானகி பாடிய இந்தப் பாடல் என்றைக்கும் சந்திரபோஸின் தனித்துவத்தைப் பறைசாற்றக் கூடிய நல்வைரம் மலேசியா வாசுதேவனின் முன்பின் நாமறியாத் தனித்துவக் குரலில் இந்தப் பாடல் அவசியம் கேட்க வேண்டியது. உற்சாகத்தையும் மென் சோகத்தையும் சந்திரபோஸ் அளவுக்கு நுட்ப துல்லியத்தோடு வேறாராலும் குழைத்து வார்க்க முடியாது என்னும் அளவு இந்தப் பாடல் தனித்தொலிக்கவல்லது.


காஞ்சிபுரம் சரிகைப்பட்டு வாங்கித்தரேன் வாங்கித்தாரேன் கலகலக்கும் கைவளவி போடப்போறேன் போடப்போறேன் வெட்கப்பட்டு வெலகிநின்னா சொர்க்கம் இல்லே சொந்தம் இல்லே ஆ 


ஆத்தோரம் ஆலமரம் டி.எல்.மகராஜன் ஷைலஜா முதலாளியம்மா.இந்தப் பாடல் அமானுஷ்யமான கேட்பனுபவமாய் மனங்களில் நிறைவது.இன்றைக்குக் கேட்டாலும் துல்லியமும் குன்றாத தீர்க்கமுமாய்க் கனத்து நிறைகிறது இப்பாடல்.இதயவானில் உலவுகின்ற புதிய மேகமே இனியராகம் பாடவந்த இளைய நெஞ்சமே வசந்தங்கள் அழைக்கின்றதே வரவேற்பு தருகின்றதே வாணி பாலு இணை.
 

கடற்கரை தாகம் பாலு வாணி சின்னச்சின்ன மூக்குத்திக்கு என்ன வேணும் சொல்லு வண்ண வண்ண செவ்வந்தியே கண்ணுக்குள்ள நில்லு வானவெள்ளி நட்சத்திர வைரம் வேணுமா ஆழக்கடல் செம்பவளம் அள்ள வேணுமா நெனச்சதும் இனிக்கிற கட்டிக்கரும்பே.

 

பொன்னரசி பொட்டுவச்சி பூமுடிப்பாளா கேட்டுச்சொல்லு இதயதீபம் மலேசியாவாசுதேவன்.கிராமியப் பாடல்களைத் தனக்கே உண்டான தனித்துவ இசையால் நெய்திருப்பார் போஸ்.இந்தப் பாடல் அதிகம் கேட்கப்படாத அதே நேரம் தவிர்க்க முடியாத பாடல் என்பேன்.

டாப் டென் லிங்க்ஸ் 

1   நீலக்குயில்கள் ரெண்டு பாலு சந்திரபோஸ் மற்றும் கோரஸ்


2  மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு அண்ணா நகர் முதல் தெரு


3  ரவிவர்மன் எழுதாத கலையோ வசந்தி


 இளங்குயில் பாடுதோ யார்வரக் கூவுதோ பாலு சித்ரா இணை கலியுகம்

 

 பிள்ளை மனம் வெள்ளை மனம் ஒரு மலரின் பயணம் வாணி ஜெயராம் சிறப்பான பாடல்


அதோ வானிலே நிலா ஊர்வலம் தண்டனை பாலு வாணி ஜெயராம் கனவா இது கதையா என்ற வேறோரு பாடல் பாலு பாடியது சிறப்பான பாடல்


எங்கள் தாய்க்குலமே வருக வான் வந்து தேன் சிந்தும் நேரம் ஏன் இந்த பூமிக்கு நாணம்..? ஜேசுதாஸ் ஜானகி


8 கொலுசே கொலுசே எச பாடு கொலுசே பெண் புத்தி முன் புத்தி பாலு ஷைலஜா 


9  தொடலாம் தொட்டாலும் யோகம் தான் காளிச்சரன் வாணி டி.எல்.தியாகராஜன் 


10  என் ராசாத்தி நீ வாழணும் ஊமைக்குயில் பாலு சித்ரா (இந்தப் பாடல் அந்த வருடத்தின் அத்தனை ஹிட்களையும் பின்னுக்குத் தள்ளியது.)

 


 

சந்திரபோஸின் பெரும்பலம் ஒரு பாடலைத் துவங்குவதில் தொடங்குகிறது. எந்த ஞானம் செய்த மாயம் என்று விளங்கவில்லை என்றாலும் துவக்க இசை கொண்டு எப்படி ராஜாவின் பாடல்களை இன்னாரின் பாடல் என்று சொல்ல முடியுமோ, போலவே சந்திரபோஸின் பாடல்களையும் நம்மால் சொல்ல முடியும். எந்த ஒரு இசைக் கருவியின் பொதுப் பயன்பாட்டின் மைய ஓட்ட நகர்தலையும் பொருட்படுத்தாமல் தன் பாணி பாடல்களைத் தொடங்கச் செய்வது போஸின் தனிச் சிறப்பு. இவற்றுக்கு உதாரணமாக மேற்காணும் பல பாடல்கள் உண்டென்பேன். மேலும், லேசான எள்ளலை அல்லது அயர்ச்சியைப் பாடல்களில் கிளைக்கச் செய்வது போஸின் தனிக் குணம். அவர் தன் சொந்தக் குரலில் பாடிய "பூஞ்சிட்டுக் குருவிகளா..." ஒரு சிறந்த நாடோடிப் பாடல். விட்டேற்றித்தனமான, அதே நேரத்தில் தூக்கத்தை இறைஞ்சக் கூடிய சமரசத் தன்மை மிகுந்து ஒலிக்கக் கூடிய "பூஞ்சிட்டுக் குருவிகளா..." பாடல் பெருங்காலத்தை ஆண்டது. இப்போது சிந்தித்துப் பார்த்தால் அந்தப் பாடலைப் பாடுவதற்கான ஒரு குரலும் நமக்குள் வந்து போகாது. முழுமையாகவே அது ஒரு குரல் கொல்லிப் பாடல். மேலும் ஒரு பாடல் ஒரு குரலைத் தனக்கான ஒருமையாக மாற்றுமெனில் வேறு என்ன சொல்வது? சந்திரபோஸ் என்றாலே சதுரங்கத்தின் அத்தனை கட்டங்களையும் அந்த ஒரு பாடல் நிரப்பித் தருகிறது. ஆனால் அதற்கு நிகராக, இல்லை மாற்றாகக் கூட இன்னும் ஒரு பாடல் இல்லாத ஒற்றை அது. சந்திரபோஸின் பொதுவான இசைத் தேர்வுகள் துள்ளல் இசையை அடிப்படையாகக் கொண்டவையே.பல வகைமைகளிலும் போற்றத் தக்க பல பாடல்களைப் படைத்திருக்கிறார் வெரைட்டி மன்னர் என்றே கூறத்தக்க அளவில் சந்திரபோஸின் பாடல்கள் அவருக்கான தனித்த ஓரிடத்தைக் கோரியபடியே நம் இசை அலமாரிகளில் நிரந்தரிக்கிறது.வாழ்க போஸ் புகழ்.ராஜா'ஸ் கார்னர்


ராஜாவின் ப்ரியம் அவர் விண்டு தருகிற பாடல்கள் இல்லை. மாறாக அள்ளிக் கொட்டுகிற பின்னணி இசை. இதை மெய்ப்பிக்கப் பல படங்கள் வந்திருக்கின்றன. இசையற்ற ஒரு படம், அதன் கதை எதோ ஒரு விதத்தில் ராஜாவை வசீகரித்துவிட்டால், அதன் பின் ஒரு மலையைக் குடைந்து சாலை சமைக்கிறவனைப் போல், தன் மௌனத்தையும் இசையையும் கொண்டு ஆகவேண்டிய அனைத்தையும் பார்ப்பார் ராஜா. நகைச்சுவைப் படம் என்ற வகைமையில் தன்னை வெகு இயல்பாகப் பொருத்திக் கொள்கிற சில படங்களுக்குக் கூட உயிருக்குச் சமீபிக்கிற தன் இசையால் தியான நிகர் வருடலை நிகழ்த்தியிருப்பார். 

 அப்படியான ஒரு படம் "ஆண்பாவம்". ஏற்கெனவே பாண்டியராஜனின் முதற்படமான "கன்னி ராசி" ராஜாவின் இசையமைப்பில் வெளியானது. "ஆண்பாவம்" படத்தில் உற்சாகமான ரேவதிக்கு, அவரது எபிஸோடுக்கு, "என்ன பாடச் சொல்லாதே.. நான் கண்டபடி பாடிப் புடுவேன்..." பாடலை அடிப்படையாகக் கொண்டு ஒரு தீம் செதுக்கியிருப்பார். போலவே, பாண்டியனுக்கும் சீதாவுக்குமான கதைக்கென்று தனி இசைத் தொகுப்பை முன்வைத்திருப்பார். இவற்றை இன்னும் கொஞ்சம் விரிக்கலாம். அதாவது மகாபிரபுக்களே.. கதையில் மொத்தம் நான்கு கதாபாத்திரங்கள். ரேவதி, சீதா, பாண்டியன், பாண்டியராஜன். மூன்று கதையின் போக்குகளாக இந்த நான்கு பேர் பகுபடுவார்கள். 


1. பாண்டியன் - சீதாவுக்கான காதல்
2. ரேவதியின் உற்சாகம்
3. ரேவதி வாய் பேச முடியாத சோகம்.


இவை தவிர, பாண்டியராஜனுக்கென்று ஒரு பாடலும், பாண்டியராஜனும் ரேவதியும் சேரும் ஒரு க்ளைமேக்ஸும் இந்தப் படத்தில் உண்டு. 

 பாண்டியன் - சீதாவுக்கான காதலின் மைய இசை ஒன்று வேறொன்றாகி மற்றொன்றாவதைக் கதை நெடுக உணர்த்தியிருப்பார் ராஜா. பாண்டியராஜனுக்கு ஒரு தனி இசை ஆரம்பத்தில் ஒலிக்கும். ரேவதிக்கு இருவேறு இசைக் கோர்வைகள் இருக்கும். ஆனால் பாண்டியன் - சீதா எபிஸோடின் சோக இசை, ரேவதிக்கான சோக இசை இரண்டும் வெவ்வேறாக இருக்கும். இது எதிர்பார்க்கக் கூடியதுதான். ரேவதியின் இசை மட்டுமே பாண்டியரஜன் ரேவதியைச் சந்திக்கிற அத்தனை காட்சிகளிலும் ஒலிக்கும். க்ளைமேக்ஸில் அவர்கள் இருவரும் ஒருங்கிணையும்போது, படத்தின் துவக்க இசையின் விலக்கத்தைக் கொண்டு நிறைத்திருப்பார் ராஜா. மேலும், சீதா வீட்டில் தவறுதலாய்ப் பெண் பார்க்க வந்த பாண்டியன், பெண் பிடித்திருக்கிறது என்று சொன்னவுடன் ஒரு சின்னஞ்சிறிய இசைத் தொகை வந்து போகும். என்ன கொடுத்தாலும் தகும்.(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...