???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் 0 சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்! 0 கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம் 0 அயனாவரம் சிறுமி வன்கொடுமை: கைதி சிறையில் தற்கொலை 0 சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது! 0 தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு: 17 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் 0 2020-21-ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் - 20 - லாகிரி தியான மழை - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   02 , 2017  22:12:40 IST


Andhimazhai Image

ஷைலஜா இந்தப் பேரே எனக்கு ரொம்பப் பிடித்தமான பெயர். அதற்குக் காரணம் என்னோடு ஒன்றாம் வகுப்பில் படித்த ஒரு பப்ளி பெயர் ஷைலஜா. இந்தப் பெயரை செமை ஸ்டைல் பேராகவே மனசு இந்த நொடி வரைக்கும் குறித்து வைத்திருக்கிறது.பிற்காலத்தில் என்னோடு முதுகலையில் உடன்  படித்த வேறொரு ஷைலஜாவிடம் எனக்கு அந்தப் பெயர் ரொம்பப் பிடிக்கும் என்று சொல்லும் போது உடனே அவள்  "நீ வேணா வெச்சிக்கறியா ரவீ.. எனக்கு வேறெந்த பெயரா இருந்தாலும் பரவால்லை. எக்சேஞ்சு பண்ணிக்கறேன் என்றாள்.


எடைக்கு எடை கிண்டலும் நக்கலுமாய் ஷைலஜாவா கொக்கா.?


நிற்க.. இந்த அத்தியாயம் ஷைலஜாவிற்கானது. சலங்கை ஒலி படத்தில் தன் நடனத்தால் கமலகாஷரோடு முதலில் மோதி பிற்பாடு அவர்மீது மரியாதை கொள்ளும் ஜெயப்ரதாபுத்ரியாக தோற்றமளித்த அந்த அபிநய தாரகை தான் மாண்புமிகு எஸ்.பீ.பாலசுப்ரமணியனார் அவர்களின் தமக்கை எஸ்.பீ.ஷைலஜா என்று தெரிந்த கணத்தில் பொறாமை பக்தி ஆச்சர்யம் உள்பட பதினாறு பதினேழு உணர்வுகளுக்கு ஆட்பட்டேன்.


ஷைலஜா மொத்தம் ஐந்தாயிரத்திலிருந்து ஆறாயிரம் பாடல்களைப் பாடியிருப்பார் என்று இணையம் சொல்கிறது.பெரிய சூரியனுக்குப் பக்கத்து நட்சத்திரம் என்பதாலேயே தனக்கு கிட்டியிருக்கவேண்டிய ஒளிர்தல் கால பரவசம் குறைந்து போனவர்கள் உண்டு.சர்வ நிலங்களிலும் அப்படியானவர்களைப் பற்றித் தனி அத்தியாயம் வர இருக்கிறது. இது அதற்கான கட்டியம்.


ஷைலஜா வேறொருவராய் இருந்திருந்தால் இன்னும் கொண்டாடப் பட்டிருப்பார் என்பது அடியேனின் எளிய கருத்து. பாலசுப்ரமணியத்தின் பொன் பிளாட்டின வைர காலங்களிலெல்லாம் சேர்த்து வெறும் ஐந்தாயிரம் பாடல்களுக்கான குரல் அல்ல ஷைலஜாவினுடையது. மிகவும் நுட்பமான அதே நேரத்தில் அபூர்வமான குரல் அவருடையது .


                      
    மாமன் மச்சான்...நீ தானோ...
   
ஆசை வச்சான் ஏன் ஆகாதோ 
    அழலாமா தொடலாமா 
    தொடும் போது சுகம்தானா..
   
மாமன் மச்சான்...


ஷைலஜா என்றதுமே இந்தப் பாடல் நினைவுக்கு வந்து விடுகின்றது. ஷைலஜாவின் குரல் மெலிதான ஜலதோஷத்திற்கு முந்தைய அபூர்வம்.கிட்டத் தட்ட அதற்கடுத்த புள்ளியில் நிற்குமேயானால் விரும்பக் கூடியதாக இருந்திடாதோ என்று ஐயம் கொள்ளத் தக்க வகையிலான குரல். இதையே வேறுவிதமாகக் கூற விழைந்தால் வேறு யாராலும் பிரதி எடுக்கவோ போலி செய்யவோ இயலாத குரல் என்றும் கூறலாம். ஆரோகணங்களின் போது அனாயாசமாக முகடு விட்டு முகடு மாறித் தப்புகிற குரல். ஒரே ஒரு ஷைலஜா.

 

மாமன் மச்சான் பாடல் அந்தகாரத்தின் நிரவல்.ஏகாந்தத்தின் இன்னொரு பாடல். அதிலும் சுமலதாவின் பவ்யம் பெருகும் முகபாவங்களுக்கும் ஷைலஜாவின் வர்ணஜாலக் குரலும் பிசைந்து கலந்து பன்மடங்கு விரிந்து பெருகும்


  நீ எந்தன் தெய்வம் 
  நானுந்தன் செல்வம்


என்றென்றும் இன்பம் என்று பாடிவிட்டு ஒரு கொனஷ்டைசெய்வார்.. அய்யோடா... பெண்குரலின் உச்சபட்ச போதையை போகிற போக்கில் தெளித்துப் போகும்             

பட்டுச்சீரா தஸ்தாரன்னி.. தமிழில் 


பட்டுச்சேலை தரேனின்னு படகேறிப் போனதென்ன மாமா...             பட்டுசேலை தரேனின்னு படகேறிப் போனதென்ன மாமா 
             பட்டுசேலை தரேனின்னு படகேறிப் போனதென்ன மாமா 
             கட்டியுள்ள சேலை நிக்கவில்ல மேல நிலா வந்து சிரிக்குதே வா சொந்த மாமா...
             தன்னனன்ன தானா தானான நானா...
             தாலி ஒண்ணு வேணுமின்னு தண்ணிக்குள்ள தவமிருக்கேன் மாமா..
             தாலி வந்து தந்தாயிங்கே விருந்துண்டு மாமா 
             வெத்தலையை மாத்து வா சொந்த மாமா...இந்தப் பாடலில் எஸ்.பீ.பாலசுப்ரமணியத்தின் குரல் ஷைலஜாவின் குரல்ஜாலத்திற்கு முன்னால் சற்று அமிழ்ந்து கீழிறங்கி ஒலிப்பதை உணரலாம்.உடன் பாடுகிற குரலை ஆக்கிரமிக்கிற அபாயகரமான விளையாடலைத் தானறியாமலே நிகழ்த்திப் போகும் சன்னமான அபூர்வம் ஷைலஜாவின் குரல். இன்னுமொரு உதாரணமாக இந்தப் பாடலை சொல்லலாம். சலங்கை ஒலி படத்தில் வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே...பூ முத்தம் தந்தவனே...பாடலும் கூறத்தக்கதே.


சாமக்கோழி கூவுதம்மா...பொண்ணு ஊருக்குப் புதுசு  படத்தில் இளையராஜா இசையில் அவருடைய குரலுடன் இணைந்து ஷைலஜா பாடிய  பாடல் மறக்க முடியாத கிராமத்து அற்புதம்.


ஷைலஜாவின் குரலுக்கும் மற்ற பெண் குரல்களுக்குமான ப்ரதான வித்யாசம் என்ன..? ஜானகி போலக் குழைதலும் சுசிலா போன்ற தனித்தலும் ஷைலஜாவின் குரலில் வாய்க்கவில்லை. வேறேதோ ஒரு தூர உயரத்தில் தத்தித் தாவுகிற பறவையுயிரி பெயரற்ற வானில் படபடக்கிறாற் போன்ற ஒப்பிடற்கேதுமற்ற ஒற்றை ஷைலஜாவின் குரல். அப்படியானால் அதன் தனித்துவம் என்ன.?அறியாமை அதன் மூலமாய் அடையவாய்க்கிற பித்துநிலை. (INNOSENCE & MADNESS )…


திரைப்படம் என்பதே பொய்யாய் உருவாக்கப்படுகிற நிகர் உண்மை தானே...? அப்படி ஒன்று நிகழ்த்தப்படுகிறது. ஆனால் அப்படி ஒன்று நிகழ்கிறது போலத் தோற்றம் தருகிறது. ஆக நிஜம் கலைந்து அழிந்து நிஜம் போலத் தோற்றமளிக்கிற அறிவியற்கூடமே திரைப்படம். அந்த வகையில் பாடல் என்பது புனைவின் தேவை.இல்லாத ஒன்றை ஏற்படுத்தி இருப்பது போலச் செய்தலின் உச்சபட்சம் பாடல்கள். அவற்றின் வரிகள் ஊசிமருந்தைப் போல என்று வைத்துக் கொண்டால் அவற்றை அடைத்திருக்கிற ஊசிதான் பாடலிசை. பாடுகிற குரல் தான் ஊசியை ஒவ்வொரு மனசுக்குள்ளும் ஒவ்வொரு முறையும் செலுத்தித் தருகிறது.


ஷைலஜாவின் ஒப்பிட முடியாத அறியாமையை அவரளவில் பாதியில் பாதி கூட இன்னொரு குரல் நேர்த்தியதில்லை என்பேன். இந்தியில் கீதா தத் கன்னடத்தில் மஞ்சுளா குருராஜ் ஆகியோரது குரல்களைச் சுட்டமுடிகிறது. என்றாலும் ஷைலஜா தான் முழுமுதல் குரலரசி.


கோபுரங்கள் சாய்வதில்லை படத்தில் இடம்பெற்ற பெருவாரியானவர்களின் முதல்விருப்பப் பாடலான எம் புருஷன் தான் எனக்கு மட்டுந்தான்  பாடலும்  ஜானி படத்தில் இடம்பெற்ற  ஆசையைக் காத்துல தூது விட்டு பாடலும் தமிழ்த்திரை இசை உள்ளளவும் ஷைலஜாவின் பெருமையைப் பறைசாற்றுகிற முழுமுதல் வைடூர்யங்கள்.


ராசாவே உன்னை நான் எண்ணித் தான்  இந்தப் பாடல் <> தனிக்காட்டு ராஜா படத்தின் சூப்பர்ஹிட். பெண்குரலில் ஏகாந்தத்தைப் பறைசாற்றுகிற ஆயிரம் பாடல்களின் இருத்தலுக்கு நடுவே தன்னை தனித்துக் கொள்கிறது இந்தப் பாடல். அதற்கான பெருமளவு காரணம் இதன் குரல் மற்றும் இளையராஜாவின் பின்னணி இசை. இவ்விரண்டும் ஒன்றிணைகிற புள்ளி. ஒரு பாடலின் அதியுச்ச இயங்குதளம் என்பது அதன் காணொளி மூலமாய் ரசிக மனங்களில் ஒரு உறைந்த சித்திரமாய்த் தேங்குவது.மங்கலான ஒரு கனவின் விடுபடல் போலத் தான் ஒவ்வொரு பாடலின் காணொளியும் தேங்கும். ஆனாலும் அவற்றைக் கேட்க அல்லது பார்க்க வாய்க்கையிலெல்லாம் மற்றவற்றை முந்திக் கொண்டு மேலெழுந்து வருகிற மாயத்தையும் தாமாகவே நிகழ்த்திக் கொள்ளும் ஒலிமந்திரம் தான் பாடல்கள்.

இந்தப் பாடலின் ஒரு சொல்லைக் கூட நம்மால் அவற்றுக்கான அறியாமையின் துல்லியத்திலிருந்து விலக்கி உணரவே முடியாது என்பதிலிருந்து புரிந்து கொள்ள முடியும் ஷைலஜா எப்படிப் பட்ட குரல்வசியத்தை நேர்த்தி இருக்கிறார் என..

ராசாவே உன்னை நான் எண்ணித் தான். பல . ராத்திரி மூடலை கண்ணைத் தான்
நீ நான் பூவச்சி பொட்டும் வச்சி வாழத்தான்.. நா பூவோடு நாரைப் போல சேரத்தான்.
ராசாவே ராசாவே ராசாவே...


நுட்பமான அதே நேரத்தில் ஓங்கிப் பிறக்கிற சத்தியம் ஒன்றைப் போலத் துவக்குவார் இந்தப் பாடலை. மூன்றாவது வரியில் குளத்தின் படிகளில் மெல்லக் கீழிறங்கிக் கால் நனைக்கிறாற் போன்ற குழைதலைக் கொண்டுவருவார் குரலில். அதுவே ராசாவே ராசாவே ராசாவே எனும் போது ஏற்றுக்கொள்ளப் படாத கோரலுக்குப் பின்னதான கேவல் போல ஒலிக்கச் செய்வார். முதல் முறை பல்லவி முடிகையில் அத்தனை உற்சாகமாக உடனொலி சகிதம் இடையிசையை அமைத்திருப்பார் ராஜா.

ஆவாரம் பூவு அதுக்கொரு நோவு 
உன்ன நெனச்சி உசுரிருக்கு 
ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி 

எனும் போது குரல் மிகும்.

பூத்தது வாடுது நீ வரத் தான் 

எனும் போது குழைந்து கரைந்து மெல்லக் குறுகி ஒலிக்கும்.


இது வெறும் பாடல் என்பவர்கள் தங்களைத் தாங்களே சபித்துக் கொள்கிற மூடர்கள். எண்பதுகளின் பெண் மனதின் அகவய இச்சை சுய இரக்கம் சொல்லவொண்ணாக் காதல் எதிர்பார்த்துக் கைகூடாமற் போன வாழ்வின் நிர்ப்பந்தத்தை எதிர்த்து போரிட முடியாத இயலாமை வாழ்வின் விளிம்பு வரை  சொட்டுச் சொட்டாய் அமிலம் கொண்டு தன்னைத் தானே அழித்துக் கொள்ளுகிற சுயவதை இன்னபிறவற்றின் குரல்சாட்சியமல்லவா இது..?
 
மாக்கோலம் போட்டு மாவிளக்கேத்தி 
நீ கிடைக்க நேந்துகிட்டேன்.

அறியாமையைத் தன் குரலில் அத்தனை அற்புதமாக கச்சிதமாக நின்றாடச் செய்திருப்பார் ஷைலஜா.

பாத்தாளே ஆத்தா மனக்கொறை தீத்தா..
பாத்தாளே ஆத்தா மனக்கொறை தீத்தா...

கெடச்சது மாலையும் மஞ்சளும் தான்...

எனும் போது முழு நீராடலுக்குப் பிந்தைய சாயங்காலக் காற்றின் வருடலைத் தாங்கவொண்ணாத உடலின் சிலிர்ப்பைக் குரல்வழி இதயங்களுக்குப் பெயர்த்தளிப்பார். ஷைலஜாவால் மாத்திரமே செய்யமுடிகிற அனாயாசம்.


உண்மையைச் சொல்லப் போனால் ஷைலஜாவுக்கு அவர் குரலுக்கு ஏற்ற பாடல்கள் என அடிக்கடி வழங்கப்பட்ட பாடல்கள் நடனபோதைகானப் பாடல்களாகவே அமைந்தது சோகமே.எடுத்த எடுப்பிலான உற்சாகம் அல்லது கவர்ச்சி ததும்புகிற போதை இவற்றுக்கான குரலாகவே ஷைலஜாவிற்கான பாடல்கள் தேர்வெடுத்து அளிக்கப்பட்டன. அவற்றிலும் கூடத் தன்னாலான அளவு மிளிரவே செய்தார் ஷைலஜா.


சூப்பர்ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் கொழந்தையும் சொல்லும் (ராஜா சின்ன ரோஜா) மாமன் ஒரு நாள் மல்லியப்பூ கொடுத்தான் (ரோசாப்பூ ரவிக்கைக்காரி) வேதாளம் வந்திருக்குது வந்து தேவாரம் பாடி நிக்குது (சூரசிம்ஹாரம்) கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன..? (செந்தூரப்பூவே)பாட்டு எங்கே... ராபாப்பா. (பூ விழி வாசலிலே)... தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே(கல்லுக்குள் ஈரம்)...நாட்டுக்குள்ளே நம்மப் பத்தி கேட்டுப்பாருங்க அம்மம்மா இவர் தான் சூப்பர்ஸ்டாருங்க.. (விடுதலை). மச்சானை வெச்சிக்கடி முந்தானை முடிச்சிலதான்...கட்டவண்டி கட்டவண்டி (சகலகலா வல்லவன்) பொட்டப்புள்ள எல்லாருக்கும் உன்னக் கண்டா புல்லரிக்கும் (கோழி கூவுது) ராஜா ராணி ஜாக்கி (நெற்றிக்கண்).


மேற்சொன்ன பாடல்களிலிருந்து விலகி ஒலிக்கிற பாடல்களாக இவற்றைச் சொல்வேன். ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே மலேசியாவுடன் மணிப்பூர் மாமியார் ஒரு நாயகன் உதயமாகிறான் ஊரார்களின் இதயமாகிறான் தாவணிக் கனவுகள் பனிமழை விழும் பருவக் குளிர் எழும் எனக்காகக்காத்திரு கல்யாணம் என்னை முடிக்க தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு சட்டம் 

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி.


மீண்டும் கோகிலா படத்தில் இந்தப் பாடலை தனக்குள்ளேயே சுருண்டுகொண்டபடி நகர்ந்தும் வாழ்ந்தும் வருகிற ஒரு நத்தையின் மனவோட்டத்தைத் தன் குரலில் பிரதிபலித்திருப்பார் ஷைலஜா.

சாகச நாடகத்தில் அவனோ தத்துவம் சொல்லி வைத்தான் 
உள்ளத்தில் வைத்திருந்தும் நானோர் ஊமையைப் போலிருந்தேன்...

என்று திக்குகையில் நாமும் திக்குவோம்....
அந்த இடத்தில் வந்து தன் குரலை
கள்ளத்தனம் என்னடி 
எனக்கோர் காவியம் சொல்லு என்றான்

 

என்று செருகிக் கொள்வார் ஜேசுதாஸ்.

 

அத்தனை இயல்பாக ஜேசுதாசின் குரலோடு உடனியைந்து ஒலித்திருக்கும் ஷைலஜாவின் குரல். தபலாவும் இரண்டு குரல்களும் கண்ணதாசனின் வரிகளும் இருந்தால் போதும் இறவாப் பாடலொன்றை செய்து காட்டுகிறேன் என்று நிரூபித்திருப்பார் இளையராஜா.


இதைப் போலவே ஜேசுதாஸோடு ஷைலஜா பாடிய இன்னொரு பாடல் ஷங்கர் கணேஷ் இசையில் அன்புள்ள அப்பா படத்தில் மையத்திலிருந்து ஒரே சீராகப் பிரிந்தொலிக்கிற பிரதான பின்னணி இசையோடு மெல்லினமாய்ப் பெருகுகிற பாடல்

இது.


இது பால் வடியும் முகம் இதைப் பார்ப்பத்து தான் சுகம் இது கனவா உண்மையா அட இதுதான் பெண்மையா


ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே வளருதே இந்தப் பாடலும் ஜேசுதாஸூடன் இணைந்து ஷைலஜா பாடிய இன்னுமோர் பாடல்.அகல் விளக்கு திரைப்படத்தில் இடம்பெற்ற காலத்தைத் தாண்டி நிரந்தரித்த மெல்லினப் பாடல் வகையிது.


 கீதம் சங்கீதம் நீ தானே என் காதல் வேதம்..? கொக்கரக்கோ படத்தில் வருகிற இந்தப் பாடலிலும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்குத் தன்னால் ஆன அளவிற்குக் கடினப்பிடி தந்திருப்பார் ஷைலஜா.


இன்று நீ நாளை நான்  படத்தில் ஜானகியுடன் இணைந்து பாடிய மொட்டு விட்ட முல்லைக்கொடி மச்சான் தொட்ட மஞ்சக்கிளி வெட்கப்பட்டு சொக்கி நிக்குது எனும் பாடலில் ஷைலஜாவின் குரல் அடிப்பெண்ணே வயிறு வரும் முன்னே நீயும் சுமந்து தள்ளாட வேணுமடி எனும் போது உற்சாகத்தை பிரவகித்திருப்பார்.


இதே போல எஸ்.ஜானகியுடன் இணைந்து பாடிய இன்னொரு பாடலான ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது மைனா மைனா  பாடலிலும் ஷைலஜாவின் தனித்துவம் குரலின் விசாலமாய்க் காற்றெங்கும்..

படர்ந்தொலிக்கும். இருமனம் இணையுது இருகிளி தழுவுது ஓ மைனா ஓ மைனா... இந்தப் பாடலை எந்தக் காலத்திலும் ரசிக்க முடிகிறதல்லவா..?


உமா ரமணனுடன் இணைந்து ஷைலஜா பாடிய கண்ணுக்குள்ளே யாரோ நெஞ்சமெல்லாம் நானோ என்று தொடங்குகிற கை கொடுக்கும் கை பாடலிலும் ஷைலஜாவின் உற்சாகம் பெருக்கெடுக்கும் வெள்ளந்தித் தனம் உன்னை எண்ணிப் பாடும் நெஞ்சில் கோயில் கட்டி வச்சேனே..  என்ற வரியில் மகரந்தமாய் மலர்விட்டு மலர் ஏகும்.


இன்னொரு அற்புதமான ஷைலஜா பாடல் நதியைத் தேடி வந்த கடல் படத்தில் ஜெயச்சந்திரனுடன் இணைந்து பாடிய தவிக்குது தயங்குது ஒரு மனது  பாடல்.  கல்யாணராமன் படத்தில் வருகிற மலர்களில் ஆடும் இளமை புதுமையே என்பதும் ஷைலஜாவின் மறக்க முடியாத பாடல்வரிசையில் இன்னொன்று.


நதிக்கரை ஓரத்து நாணல்களே என் நாயகன் புகழைக் கேளுங்களேன் காலையில் பூத்த புஷ்பங்களே எங்கள் காதலை வாழ்த்திப் பாடுங்களென்...


கேவீ மகாதேவன் இசையில் ஜேசுதாஸூடன் பாடிய பாடல் அமானுஷ்யமான இசைநிலத்தில் குரல்களால் செய்த மாய உழவாய்ப் பெருகவல்ல பாடல் இது.

ஒரு முழுமையான பாடகி ஷைலஜா.தனக்கு கிடைத்த அத்தனை வாய்ப்புகளையுமே தனித்துவப் படுத்திய பாடகி . ராம் லஷ்மன் படத்தில் இடம்பெற்ற வாலிபமே வா வா பாடல் அதற்கான சிறந்த உதாரணம். மேவிய வானம் யாவும் பாடிய கானம் போகும் நானொரு புன்னகை மேனகை இந்த வரிகள் இந்தப் பாடலுக்கானவை மாத்திரமல்ல. ஷைலஜா என்னும் அற்புதத்திற்கான முகவரி வரிகளாகவும் கொள்ளலாம் இதனை.ஷைலஜாவின் சூப்பர்ஹிட் பட்டியல் நெடியது.தமிழ் நிலத்தில் எண்பதுகளின் இசைப்பரப்பில் மீண்டும் மீண்டும் ஒலித்த குரல்.குரலா அது..?. லாகிரி...!

 

                நில்லாநதி...தியானமழை....ஷைலஜா..

 

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...