???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிறுகோட்டுப் பெரும்பழம் : நாஞ்சில்நாடன்! 0 வாடகை வீட்டுப்புராணம் : வெத்தலைக்காரம்மா வீடு - ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கிள் ரவிசங்கரன்! 0 உலகக் கோப்பை கால்பந்து: கோஸ்டோரிகாவை பந்தாடியது பிரேசில் 0 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி செல்லமேஸ்வரர் ஓய்வு பெற்றார்! 0 பாஜகவின் பிரதிநிதியாக ஆளுநர் செயல்படுகிறார்: ஸ்டாலின் காட்டம்! 0 கேரளத்தை பிரதமர் தொடர்ந்து புறக்கணிக்கிறார்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு 0 தென் கொரிய முன்னாள் பிரதமர் கிம் ஜாங் பில் மறைவு 0 வன்முறையை தூண்டும் வகையில் பேட்டி: பாரதிராஜா மீது வழக்கு பதிவு 0 காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மசூத் ஹுசைன் நியமனம்! 0 அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுகளை அந்தந்த மாவட்டங்களிலேயே எழுதலாம்: பிரகாஷ் ஜவடேகர் 0 திமுகவினர் கைதை கண்டித்து போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின் கைது! 0 2021க்கு முன்பு தேர்தல் சட்டமன்ற தேர்தல் வராது: ஜெயக்குமார் பேச்சு 0 டெல்லியில் கேரள முதல்வர் போராட்டம் 0 நாட்டிற்கு நல்லது நடப்பதை ஸ்டாலின் விரும்பவில்லை: தமிழிசை கருத்து 0 ஆளுநர் கார் மீது கருப்புக் கொடி வீசிய தி.மு.க.வினர் 192 பேர் கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புலன் மயக்கம் – 36 - தனிப்பாட்டு ராஜா - ஆத்மார்த்தி எழுதும் தொடர்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஏப்ரல்   25 , 2017  00:01:02 IST


Andhimazhai Image

எடிட்டர் நடிப்பதும், ஃபைட் மாஸ்டர் ஹீரோ ஆவதும் இன்று சர்வ சகஜம். முன் பழைய காலத்தில் அப்படி அல்ல. "உனக்குத்தான் ஒரு விஷயம் ஒழுங்கா வருதில்ல.. நீ ஏன் விட்டுட்டு இன்னொண்ணு பண்றே?" என்பார்கள். டி.ராஜேந்தர் போல விதிவிலக்கு தெய்வங்கள் வேறு கதை. அந்த நேரத்தில் திடீரென்று நடிகராகி, நடிகராகவே ஆகி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார் மலேஷியா வாசுதேவன்.

 

 

 

பாடகராகத் தன்னை விரும்பிய பலரையுமே படத்தில் நடிக்கிறேன் பேர்வழி என்று தன்னையே பார்த்துத் திட்டவும் வைத்தார். எந்த அளவுக்கு இதை உறுதியாகச் சொல்ல முடியும் என்றால், எங்களோடு குடியிருந்த மனோகரி அத்தை (அப்படித்தான் விளிப்பேன்), மலேஷியா வாசுதேவனின் hard core ரசிகை. ஆனால், "ஒரு கைதியின் டைரி", "முதல் வசந்தம்" போன்ற படங்களைப் பார்க்கும்போதெல்லாம் சபைக் குறிப்புகளில் ஏற்ற முடியாத அத்தனை வார்த்தைகளைக் கொண்டு வாசுதேவார்ச்சனை செய்வார். மலேசியாவின் மெஸ்மரிஸக் குரலில் கரைந்து கண்ணெல்லாம் கலங்கித் தென்படும்போது அன்னிக்கு திட்டினீங்க என்றால் கைதியின் டைரி படத்தில் வில்லனாக வாசுதேவன் தோன்றியதைக் குறிப்பிட்டு அப்பிடி நடிக்கலாமா..? அதான் கொஞ்சம் திட்டினேன்.. இது என்னா குரல்டா..கிருஷ்ணனோட குரல் மாதிரி என்பாள். சாட்சாத் கிருஷ்ணன் அலையஸ் அகில காலக்ஸி வாசுதேவனின் குரலாகவே மலேசியா வாசுதேவனின் குரலை நம்ப விரும்பினாள் அத்தை.

 

"ஊரைத் தெரிஞ்சிகிட்டேன்" என் வாழ்க்கையின் மறக்க முடியாத படம். சிற்சில alterationsகளோடு ரஜினியும் நடித்திருக்கலாம் என்பதான பாண்டியராஜன் படம். கங்கை அமரன் இசையமைத்த படங்களில், பின்னணி இசையும் பாடல்களும் அத்தனை கச்சிதமாக இருந்த இன்னொரு படம். இதில் மலேஷியா நடித்திருப்பார், பாடியும் இருப்பார்.  ஜெயச்சந்திரன் பாடிய "தாலாட்டுவேன்.. கண்மணி பொன்மணி..." என்கிற மறக்க முடியாத பாடலைக் கேளாதவர் கேட்டு மகிழ்க. 

 

மலேஷியா வாசுதேவன் எனும்போதே 'முரண்களின் ப்ருந்தாவனம்' என்கிற பெயர்ப் பலகையை மனதுக்குள் நடலாம்தான். இத்துணை மாறுபாடுகளுடன் இன்னொரு பாடகர் உலக இசை வரலாற்றில் இருந்திருக்க முடியாது என்னும் அளவுக்கு அவர் ஒரு தனிப்பாட்டு ராஜா.

 

 

ரஜினிகாந்துக்கு மலேஷியா பாடிய பாடல்கள் தனியே பேசப்பட வேண்டியவை.

1. "நம்ம முதலாளி..."

2. "ஆசை நூறு வகை..."

3. "பொதுவாக எம்மனசு தங்கம்..."

4. "மனிதன்.. மனிதன்..."

5. "ஒத்தடி.. ஒத்தடி..." 

 

எனச் சொல்லிக் கொண்டே போகலாம். என்னைப் பொறுத்தவரையில், ரஜினி ஒரு template - free நடிகர். சிவாஜிக்கு டி.எம்.எஸ். போலெல்லாம் ரஜினிக்கு எஸ்.பி.பி. மாத்திரம் என்று சொல்லிவிட முடியாது. ரஜினியின் ஸ்டைலைக் குரலில் கொண்டுவந்து எஸ்.பி.பி அனேகப் பாடல்களைப் பாடினார் என்றாலும் டி.எம்.எஸ் தொடங்கி திப்பு வரை ரஜினிக்கு எல்லோருடைய குரலும் பொருந்தும். இதற்கடுத்த வரி அடக்கத்தோடு தன்னைத் தெரிவித்துக் கொள்ள விரும்புவது ரஜினியின் பாடல்களைத்தான் ரஜினிக்காக உருவாக்க முடியும் என்பது.

 

அவற்றில் மலேஷியா குரல் அளவுக்கு வெற்றிகர மழை பொழிந்திருக்குமா எனத் தெரியாது. ரஜினி - மலேஷியா என்று ஒரு கேசட்டைத் தயாரித்தால், அதில் எல்லாப் பாடல்களுமே முதலிடத்தைப் பிடிக்கும். 'அதிசய பிறவி' என்கிற ஒரு படம். உண்மையில் அந்த டைட்டில் மலேஷியாவுக்கே சொந்தம். இந்தப் படத்தின் அத்தனை பாடல்களையும் மலேஷியா பாடியிருப்பார். இந்த கேசட் ஒரு சிறந்த ஆல்பம் என்பேன். ஒவ்வொரு பாடல் ஒவ்வொரு ரகம்.

 

ரஜினி படங்களுக்கு நான் கடைபிடித்த வழக்கம் போலவே இந்தப் படத்தையும் வெளியானபோதே பலதடவை பார்த்தேன். உல்டாவாக, வசனம் பேசினால் வெளியே காற்று வாங்கச் சென்றுவிட்டு, பாடல்களின் போதெல்லாம் கண்கொட்டப் பார்ப்பேன். கரகாட்டக்காரன் படத்தின் மிகப் பெரிய வெற்றிக்குப் பிறகு இந்தப் படம் வந்தது. இதனை நினைவில் கொள்க. மேற்படி படத்தில் உபயோகிக்காத அத்தனை செல்வங்களையும் கொண்டு ஒரு முழு கிராமியப் பாடலைத் தந்திருப்பார் ராஜா. ராஜாவின் விசேஷமே அவர் விசேஷங்களின் ராஜா என்பதுதான். கண்களை மூடிக் காட்சியைத் தரிசிக்கச் செய்ய அந்த மந்திரவாதியால் மட்டும்தான் முடியும். நானெல்லாம் பித்து அதிகமான பக்தன். எனக்குப் பல ராஜா பாடல்களில் ரேடியோவில் படம் தெரிந்திருக்கிறது. அதில் ஒன்றாக "தானந்தன கும்மி கொட்டி..." எனும் பாடலைச் சொல்லலாம்.

 

 

அயரடிக்கும் ஒரு அந்திப் பொழுதின் வீடு திரும்புதலின் களைப்பைக் காதல் இயக்கத்தின் நகர்வு விசையாக மாற்றி சன்னமான ஒரு குழலிசையில் பாடலுக்கு முந்தைய கணத்தின் இசை விரியும்.மெல்ல ஒரு பூவின் மலர்கணமாக இந்தப் பாடலைத் தொடங்கியிருப்பார் ராஜா. ஒருவரை ஒருவர் வேறு வழியில்லாமல் பற்றிக் கொள்ளுவதும், பசி பொழுதின் வேதனை மறக்க முத்தமிடுவதும், அதுவரைக்குமான வலிகளை மறக்கடிப்பதன் மூலமாக வென்று விடுகிற முகாந்திரத்தில் காதலிப்பதும், இசைக் குறிப்புகளாக மாரி இந்தப் பாடலைத் துவக்கித் தந்திருக்கும். மணிச்சப்த இசை, மழையை, காற்றை, இருளைப் பிரதிபலிக்க வல்லது. எங்கனம் புல்லாங்கிழலின் தனியாவர்த்தனம் ஒரு பெரும் புயலை நினைவுள் நிகழ்த்துமோ அது போல இது. மணிச்சப்த இசையை மாத்திரம் உபயோகித்து மழைப் பாடல்களைப் பல முறைகள் முயற்சித்துப் பல தடவைகள் உருவாக்கியிருப்பார் ராஜா. அதற்கு மாற்றாக, அதனை நிராகரித்துவிட்டும் பல மழைப் பாடல்களை உருவாக்கியிருக்கிறார். உதாரணமாக, "பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்..." மழை என்பது வெறும் தண்ணீர் அல்ல. தண்ணீர் மழையாகையில், கண்ணீர் மழையோடு மழையாகக் கரைந்து காணாமல் போகும். மழை என்பது ஒரு ப்ரார்த்தனை முறை. ஆசையோடு நம்மைத் தேடி வரும் தெய்வம். சுவை முரண் என்னவெனில் மழை இல்லாதபோது ப்ரார்த்திக்கிற அதே மனதுகள், மழையின் போதும் நனைதல் என்ற பெயரில் அந்தப் ப்ரார்த்தனையின் பூரணத்தைத்தான் உணர முடியும்.

 

மழையின் இசையில் "தானந்தன கும்மி கொட்டி..." என்கிற இந்தப் பாடல் ஒரு அசாதாரணம். இதன் ஒவ்வொரு வரியையும் உற்றுப் பார்த்தால் எத்தனை தனித்தனிச் சங்கதிகளை சின்னச் சின்ன நுட்பங்களைத் தன் குரலால் விரவியபடியே பாடியிருக்கிறார் வாசு என்பது புரியும். எந்த ஒரு பாடலும் இடையில் ஆண்குரல் குழைந்து மென்மையாகையில் அங்கே ஒரு இடரேற்பு (ரிஸ்க்) ஏற்படும். எவ்வளவு சரிந்து இறங்குகிறதோ அதனை உடனே மேலேற்ற முடியாமல் போகலாம். அல்லது பட்டவர்த்தனமாகச் சரிந்தபடியே சென்று முடியலாம். மலையிலிருந்து இறங்கியவன் மறுமலை உச்சிக்கு மறுபடி ஏறித்தானே ஆகவேண்டும்? தன் ஸ்பைடர் இழைக் குரலால் சிகரம் விட்டுச் சிகரம் தாண்டியபடியே, உச்சிக்கும், தரைக்கும், மறு உச்சிக்கும், காதுகட்டி வித்தை காட்டிக் களவென்னும் திசைகளற்ற புரவியில் தப்பிச் செல்லும் அநாயாசங்களின் பேரரசன் வாசுதேவன்.

 

இந்தப் பாடலை இன்னொருவர் பாடவே முடியாது என்கின்ற பாடல்கள் ஒவ்வொரு பாடகருக்கும் நிகழ்கின்றன. சிலருக்கு நிகழாமலும் போகலாம். ப்ரியங்களின் பாடல்களாக அவை மாறுகின்றன. காலத்தைப் பத்திரம் செய்துகொள்ளத் தெரியாதவர்கள் பாடல்களைச் சரணடைகிறார்கள். வரிகள், குரல்கள், இசை, காட்சி இன்னபிற என எல்லா நதிகளும் சென்று சேர்வது காலமெனும் கடற்கடவுளைத்தான். அந்த வகையில் ப்ரியங்களின் பாடல்களைப் பக்கத்து வீட்டுக்காரர் பாடினால்கூடக் கோபம் வருகிறது. பொதுவாக மலேஷியாவின் குரல் வெட்டுக்குத்துப் பாடல்களுக்குப் பிரசித்தமாகிப் போனது கொடுமைங்க எஜமான். தூங்குபவன் முகத்தில் மீசை வரைவதைப் போல் அப்படியான பாடல்கள் மலேஷியாவுக்கு வழங்கப்பட்டன. அவரும் சளைக்காமல் அவற்றைப் பாடினார். அணிய முடியாத பணியன்களைத் தூக்கி வீசுவதைப் போலவே அவற்றை அவர் வீசினார். அவைகளிலும் ஒன்றிரண்டு தேறின என்பது வேறு கதை.

 

 

சிவாஜி கணேசனுக்கு டி.எம்.எஸ்ஸை விட்டால் வேறு குரல் பொருந்தாது என்று சொல்லிக் கொண்டிருந்த பலரது காதுகளில் மலேஷியா பாடிய சிவாஜி பாடல்கள் ஏகத்துக்கும் ஒலித்தன. இப்படித் திருத்திக் கொண்டார்கள். டி.எம்.எஸ். - மலேஷியா தவிர சிவாஜிக்கு வேறு யாரும் பாட முடியாது என்று. "முதல் மரியாதை"யின் பாடல்கள் மலேஷியாவின் அற்புத ஆவர்த்தனங்கள். சில இடங்களில் சிவாஜி சொந்தக் குரலில் பாடுகிறார் என்று சிவாஜியிடமே சொல்ல விரும்பினார்கள். "படிக்காதவன்" படத்தில் "ஒரு கூட்டுக் கிளியாக..."  என்ற பாடல் வாசுவின் இன்னொரு வைரம். "வெள்ளை ரோஜா" என்ற படத்தின் "தேவனின் கோவிலிலே..." என்கிற பாடல் இன்னுமொரு நல்முத்து.

 

 

தன் கனகம்பீரக் குரலால் ஒரு மனிதன் குறட்டையைக் கூட மென்மையாக விடமுடியாது என்று நம்ப விரும்புகிறவர்கள் மத்தியில், "கோடை காலக் காற்றே..." என்கிற மலேஷியாவின் பாடல் முன்சொன்ன அத்தனை பேரையும் லத்திசார்ஜ் செய்து விரட்டும். ரேடியோ ஹிட் சாகாவரங்களில் ஒன்றான "தங்கச் சங்கிலி.. மின்னும் பைங்கிளி..." உலகம் உள்ளவரை மலேஷியா என்கிற ஆலாபனைச் சக்ரவர்த்தியின் பேர் மீது பல அந்தரங்க மலர்களைத் தூவிக் கொண்டிருக்கும்.

 

பாத்திரத்தின் கச்சிதத்துக்குள் பாடுகிற குரலைக் கொண்டுபோய்ப் பொருத்துகிறவனே நற்பாடகனாக முடியும்.இதை சாதாரணமாக உடனொலி தருபவர்களின் குரல்களிலிருந்தே எதிர்பார்க்கப் படும் என்பது தான் நிசம். ஆனாலும் பாத்திரத்தின் கச்சிதத்தின் அதி அற்புத துல்லியத்துக்குள் தன் குரலை நிறுத்துவது என்பது பயிற்சியின் மூலமாகக் கைவரப் பெறுகிற மேதமை.இந்தப் பாடலில் கே.பாக்யராஜ் கதாபாத்திரத்தின் முழுப்பரிணாமத்தையும் உள்வாங்கிக் கொண்டு பாடினாற்போலவே இந்தப் பாடல் முழுவதையும் அணுகி இருப்பார் மலேசியா.

 

தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ

இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ

(ஒரு தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி...)

மலர்மாலை தலையணையாய்

சுகமே பொதுவாய்

ஒருவாய் அமுதம் மெதுவாய்ப் பருகியபடி

 

ஆழமாய் மேலேறும் தாள இசையோடு தொடங்கும் இணைப்பிசை கனத்து ஒலிக்கும். குளிரூட்டப்பட்ட அறையில் கிடைக்கிற நறுமணத்தினால் நேரும் அயர்ச்சியை ஒத்த மிகச் சன்னமான மகரந்தத் தளர்வை இணைப்பிசையாக்கி முதல் சரணத்தோடு பொருத்துவார் இளையராஜா.

 

(தங்கச் சங்கிலி)

 

காவல் நூறு மீறி காதல் செய்யும் தேவி

காவல் நூறு மீறி காதல் செய்யும் தேவி

 

(இதைப் பாடும் போது ஒரு கோரலும் சின்னதோர் எதிர்பார்ப்பும் தொனிக்கும் வாசுவின் குரலில்)

 

உன் சேலையில் பூவேலைகள் உன் மேனியில் பூஞ்சோலைகள்

உன் சேலையில் பூவேலைகள் உன் மேனியில் பூஞ்சோலைகள்

 

(இந்த ரிபீட்டைப் பாடும் போது தன் உச்ச பட்ச ஜாலத்தை உணர்த்தி இருப்பார் மலேசியா. உன் சேலையில் பூவேலைகள் எனும்போது சின்னதோர் ஏமாற்றத்தின் தாகத்தையும் உன் மேனியில் பூஞ்சோலைகள் எனும் போது கைக்குக் கிட்டித் தவறவிட்ட வேறோர் தாபத்தை இணைத்து பாடியிருப்பார்). ஜானகி அந்த இரண்டு உணர்விழைகளையும் சரியே உள்வாங்கிக் கொண்டு எதிர்பார்ப்பின் மீது தருகிற சத்தியப்பாட்டைத் தன் குரலில் தோற்றுவித்திருப்பார். திருமகள் இரவுகள் எனும் போது ஒரு அழகான மழையின் பூர்த்திகால அனுபவத்தைக் குரலால் நிகழ்த்துவார் ஜானகி.

 

அந்திப் பூ விரியும் அதன் ரகசியம் சந்தித்தால் தெரியும்

இவளின் கனவு தணியும் வரையில்

விடியாது திருமகள் இரவுகள்

 

(தங்கச்சங்கிலி)

 

இந்த இணைப்பின் போது மலேசியா முதல்முறை பல்லவியைத் தன் குரலால் தேனாபிஷேகம் செய்வதைக் கேட்கும் பொழுதெல்லாம் பாலினம் தோன்றாத பொதுக் கிறக்கம் ஒன்று தோன்றிச்செல்லும்.மலேசியா வாசுதேவன் என்னும் அற்புதனால் மாத்திரமே இந்தப் பாடலை இப்படி எடுத்துச் சென்றிருக்க முடியும் என்பது தன்னை நிரூபித்தபடி நிகழ்ந்த சத்தியம்.

 

ஆடும் பொம்மை மீது ஜாடை சொன்ன மாது

கண்ணோடுதான் போராடினாள் வேர்வைகளில் நீராடினாள்

அன்பே ஆடைகொடு எனை அனுதினம் அள்ளிச் சூடிவிடு.

இதழில் இதழால் கடிதம் எழுது

ஒரு பேதை உறங்கிட மடிகொடு

 

(தங்கச்சங்கிலி)

 

 

இந்தப் பாடலைக் கண்களை மூடிக் கேட்பது வழக்கம். இல்லையில்லை. என் கெட்ட பழக்கம். இன்னமும் உறக்கம் வாராத காலங்களில் இரவின் இருளில் பேதை மனசு உறங்கிட மடி கொடு என்று அனேகமாய்த் தேடிச் செல்லக் கூடிய பாடல்கள் வாராத் தூக்கத்தைத் திறந்து தருகிற சாவிகளைப் போலப் பத்திரம் செய்திருக்கிறேன். அப்படியான பாடல்களே அனேகமாய் நூறுக்கு மேல் இருக்கும்.அப்படியும் அந்தத் தூக்கம் என்கிற தேவதை வராமற் போகையில் ஒரு மந்திர உச்சாடனம் போலத் திரும்பத் திரும்ப ரிபீட் மோடில் இந்த ஒரே ஒரு பாடலைக் கேட்டுக் கொண்டே மெல்ல உறக்கத்தில் ஆழ்வது என் பழக்கம். உறங்கிட மடிதரும் தேவதை இந்தப் பாடல்.வாழ்க வாசுதேவகாந்தர்வம்.
 

(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...