![]() |
காஷ்மீர் சிறுமி ஆசிஃபா வழக்கு விசாரணை 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு!Posted : திங்கட்கிழமை, ஏப்ரல் 16 , 2018 03:04:13 IST
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஆசிஃபா கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று போலீசார், ஒரு சிறுவன் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டு அவர்களி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று கதுவா முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தனர். மேலும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல்களை வழங்கும்படி குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் வழக்கு விசாரணையை ஏப்ரல் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
|
|