???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிறுகோட்டுப் பெரும்பழம் : நாஞ்சில்நாடன்! 0 வாடகை வீட்டுப்புராணம் : வெத்தலைக்காரம்மா வீடு - ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கிள் ரவிசங்கரன்! 0 உலகக் கோப்பை கால்பந்து: கோஸ்டோரிகாவை பந்தாடியது பிரேசில் 0 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி செல்லமேஸ்வரர் ஓய்வு பெற்றார்! 0 பாஜகவின் பிரதிநிதியாக ஆளுநர் செயல்படுகிறார்: ஸ்டாலின் காட்டம்! 0 கேரளத்தை பிரதமர் தொடர்ந்து புறக்கணிக்கிறார்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு 0 தென் கொரிய முன்னாள் பிரதமர் கிம் ஜாங் பில் மறைவு 0 வன்முறையை தூண்டும் வகையில் பேட்டி: பாரதிராஜா மீது வழக்கு பதிவு 0 காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மசூத் ஹுசைன் நியமனம்! 0 அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுகளை அந்தந்த மாவட்டங்களிலேயே எழுதலாம்: பிரகாஷ் ஜவடேகர் 0 திமுகவினர் கைதை கண்டித்து போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின் கைது! 0 2021க்கு முன்பு தேர்தல் சட்டமன்ற தேர்தல் வராது: ஜெயக்குமார் பேச்சு 0 டெல்லியில் கேரள முதல்வர் போராட்டம் 0 நாட்டிற்கு நல்லது நடப்பதை ஸ்டாலின் விரும்பவில்லை: தமிழிசை கருத்து 0 ஆளுநர் கார் மீது கருப்புக் கொடி வீசிய தி.மு.க.வினர் 192 பேர் கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆருஷி தல்வார் கொலை வழக்கு: உண்மையின் கண்கள் இருட்டின் வெகு ஆழத்தில்!

Posted : சனிக்கிழமை,   அக்டோபர்   14 , 2017  04:21:38 IST


Andhimazhai Image

நொய்டாவைச் சேர்ந்த ஆருஷி தல்வார் மற்றும் ஹேமராஜ் கொலைவழக்கில் சிறையில் இருந்த ஆருஷி பெற்றோர்கள் ராஜேஷ் மற்றும் நூபுர் தல்வார் இருவரும் கடந்த வியாழனன்று அலகாபாத் நீதிமன்றத்தால்  விடுதலை செய்யப்பட்டார்கள். இந்தியாவையே அதிர வைத்த இந்த இரட்டைக் கொலைவழக்கில் போதிய ஆதாரம் எதுவும் இல்லையென்றும், கொலையை பார்த்த நேரடி சாட்சியங்கள் எதுவுமில்லையென்றும், கொலை செய்வதற்கான நோக்கம் என்ன என்பதை சரியாக நிருபிக்கப்படவில்லயென்றும் கூறி அலகாபாத் நீதிமன்றம் ஆருஷியின் பெற்றோர்களை விடுதலை செய்துள்ளது.          

 

உத்திரப் பிரதேசம் நொய்டாவைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ் தல்வார் மற்றும் நூபுர் தல்வார். தம்பதிகள் இருவரும் பல் மருத்துவர்கள். இவர்களின் ஒரே மகள் ஆருஷி தல்வார். வயது பதினான்கு. எல்லா உயர் நடுத்தர வர்க்கத்தின் குடும்பப் பெண் குழந்தையைப் போலவே செல்லமாக வளர்க்கப்பட்ட பெண்தான் ஆருஷி. கல்வி, வசதி வாய்ப்புகள் வாழ்க்கைத்தரம் என எதிலும் குறைவில்லை. ஆருஷியும் தன் பெற்றோர்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். 

 

ஆருஷி தன் பதினான்காவது வயதில் மே மாதம் 16ஆம் தேதி, 2008ஆம் வருடம், தன் வீட்டின் படுக்கை அறையிலேயே மர்மமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அடுத்த நாள் அந்த வீட்டின் 45 வயது  வேலைக்காரர் ஹேமராஜும் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். முதலில் ஆருஷியைக் கொலை செய்தது ஹேமராஜ்தான் என்று போலீஸ் சந்தேகப்பட்டது. ஆனால் அடுத்த சில நாட்களில் விசாரணைக்குப் பின்பு சந்தேகம் ராஜேஷ் தல்வாரின் நண்பர் விஷ்ணு ஷர்மா மீது திரும்பியது. வீட்டின் பிற வேலைக்காரர்களும் விசாரணை வளையத்துக்குள் வந்தனர். ஆனால் அடுத்த வாரம் காட்சியே தலை கீழாக மாறியது. இந்த இரட்டைக் கொலை ஆணவக் கொலை என்று போலீஸ் முடிவு செய்து ராஜேஷ் மற்றும் நூபூர் தல்வார் இருவரையும் கைது செய்தது. ஆருஷி தல்வாருக்கும் வீட்டின் வேலைக்காரர் ஹேம்ராஜுக்கும் இருந்த முறை தவறிய உறவுதான் இந்தக் கொலைக்கான காரணமாகப் போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

 

குற்றம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் நான்கு பேர். அவர்களில் இருவர் கொலை செய்யப்பட்டுவிட்டனர். மீதம் இருந்தது தல்வார் தம்பதி மட்டுமே. மறுநாள் காலை வந்த வேலைக்காரிக்கும் இவர்கள்தான் கதவை திறந்து விட்டுள்ளனர். இது நீதிமன்றத்தில் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட ஹேம்ராஜின் கழுத்தில் இருந்து மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லும் நரம்பை மிக சரியாய் அறுக்க ஒரு மருத்துவரால் மட்டுமே முடியும். இரட்டைக் கொலை நடந்த அன்று ஆருஷியின் பெற்றோர்கள் அந்த வீட்டில்தான் இருந்தார்கள். ஆனால் ஏசி அறை என்பதால் சத்தம் எதுவும் கேட்கவில்லை என்பது தல்வார் தரப்பு வாதம். இது நம்பும்படியாக இல்லை என்பது எதிர் தரப்பின் வாதம்.  இதன் அடிப்படையில்தான் சிபிஐ நீதிமன்றம் தல்வார்களுக்கு ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியது.

 

இரண்டு வருடம், ஒன்பது மாத விசாரணைக்கு பின் காஜியாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ஆருஷியின் பெற்றோரே குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது. அவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.  ராஜேஷ் மற்றும் நூபூர் தல்வார் இருவரும் தாஸ்னா சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனையை எதிர்த்து இருவரும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.   

 

ஆருஷி கொலை செய்யப்பட்டு ஒன்பது வருடங்களாகிவிட்டன. போதிய ஆதாரங்கள் இல்லையென்று கூறி அலகாபாத் நீதிமன்றம் கடந்த 12ஆம் தேதி ஆருஷியின் பெற்றோர்களை விடுதலை செய்துவிட்டது. சட்டப்புத்தகத்தின் பிரிவுகள், வாதப் பிரதிவாத சாட்சியங்களின் படி நீதிமன்றம் தல்வார்களை விடுதலை செய்துவிட்டது. சரி ஆருஷியின் பெற்றோர்கள் குற்றவாளிகள் இல்லையெனில், ஆருஷியைக் கொன்றது யார். வேலையாட்களா அல்லது தல்வார்களின் நண்பரா அல்லது வேறு யாரோவா? கொன்றது யார்.

 

இருட்டின் ஆழத்தில் நீதி வேண்டி அந்தக் கண்கள் இந்த (அ)நீதியை  பார்த்துக்கொண்டுதானிருக்கும் இல்லையா? அந்தக் கண்கள் ஆருஷியினுடையதாக இருக்கலாம். அல்லது உண்மையின் கண்களாகக்கூட இருக்கலாம். ஆனால் இரண்டுமே இருட்டின் ஆழத்தில்தான் இருக்கின்றன.

 

-சரோ லாமா-click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...