நடிகர் கமல்ஹாசனுடன் விமானத்தில் பயணிப்பது போன்ற புகைப்படத்தைப் பதிவிட்டு ஆரம்பிக்கலாங்களா? என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கைதி, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் நடிகர் கமலஹாசனை வைத்து ’விக்ரம்’ என்ற திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும், அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு இந்த படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில், விமானத்தில் கமலஹாசனுடன் தானும் இருப்பது போன்ற புகைப்படத்தைப் பதிவிட்டு ஆரம்பிக்கலாங்களா? என்றும் பதிவிட்டுள்ளார்.