???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லியில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் 0 அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை 0 ராதாரவிக்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனம்! 0 நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: திமுகவில் இருந்து ராதாரவி நீக்கம் 0 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: தமிமுன் அன்சாரி 0 சிவகங்கையில் மநிம வேட்பாளர் கவிஞர் சினேகன்! 0 மக்களே தலைவர்; நான் என்றும் தொண்டன்: எடப்பாடி பழனிசாமி 0 நான் பிராமணர்;சவுகிதார் ஆக முடியாது: சுப்பிரமணியன் சாமி 0 சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி! 0 எதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் 0 வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் 0 சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு 0 பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் 0 வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை 0 தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அமமுக-வுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியுமா? தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

Posted : சனிக்கிழமை,   மார்ச்   16 , 2019  01:49:56 IST

இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு வழங்கியது சரிதான் என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டதுடன், இடைக்கால சின்னமாக குக்கர் சின்னம் ஒதுக்கவும் கோரப்பட்டது.
 
இதுதொடர்பான விசாரணை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக-வுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என டிடிவி தினகரன் சார்பில் கோரப்பட்டது.
 
ஆனால், அமமுக, ஓர் அணி தானே தவிர, கட்சியாக இதுவரை பதிவாகவில்லை என்று தேர்தல் ஆணையம் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
 
இதனால், அமமுக-விற்கு பொதுச் சின்னம் ஒதுக்குவது என்பது இயலாத காரியம் என தேர்தல் ஆணையம் கூறியது.
 
இதைக்கேட்ட நீதிபதிகள், அமமுக-வுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியுமா முடியாதா என்பது குறித்து வருகின்ற 25-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.
 
இதனிடையே, இரட்டை இலை சின்னத்தை அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கியதற்கு தடை விதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...