???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வீரரின் சடலத்துடன் செல்ஃபி எடுத்த மத்திய அமைச்சர் 0 குறைவான பாதுகாப்பே புல்வாமா தாக்குதலுக்கு காரணம்: உளவுத்துறை முன்னாள் தலைவர் கருத்து 0 ரஜினியின் அறிக்கைக்கு தமிழிசை வரவேற்பு! 0 எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை: ரஜினி அறிவிப்பு 0 கிரண்பேடியை திரும்பப் பெற வேண்டும்: மு.க. ஸ்டாலின் 0 ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: இன்று தீர்ப்பு! 0 சட்டையைக் கிழித்துக் கொள்ள மாட்டேன்: மு.க.ஸ்டாலினை விமர்சித்த கமல் 0 நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றார் அருண் ஜெட்லி 0 உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதலமைச்சர் 0 சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பணி இடமாற்றம்! 0 வீர மரணம் அடைந்த தமிழக வீரர்களின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி: முதல்வர் 0 முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டது சின்னதம்பி யானை! 0 தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்: பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு! 0 கிரண்பேடியை திரும்ப பெறுங்கள்: நான்காவது நாளாக நாராயணசாமி போராட்டம் 0 அன்வர் ராஜாவை தகுதிநீக்க கோரிய மனு:குடியரசுத்தலைவர் நிராகரிப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

#Metoo புகாரில் சிக்கிய இயக்குநரின் படத்திலிருந்து விலகினார் அமீர்கான்!

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   11 , 2018  07:58:58 IST

சினிமா உலகில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளியே சொல்லாமல் புழுங்கிக்கொண்டிருந்த நடிகைகள், சமூகவலைதளங்களில், மீடூ (#Metoo) இயக்கத்தின் மூலம் தற்போது தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறிவருகின்றனர். திரையுல பிரபலங்கள் இதனை தொடங்க, பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.
 
தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை தனுஸ்ரீ தத்தா, பிரபல இயக்குநர் நானா படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார். அதேபோல, பல முக்கிய சினிமா பிரபலங்களும் தொடர்ச்சியாக இதில் சிக்கி வருகின்றனர். தற்போது, நாடு முழுவதும் பேசு பொருளாக இருக்கும் இந்த மீடூ விவகாரத்தால் பிரபல நடிகர் ஆமீர்கான், ஒரு படத்தில் இருந்து விலகியுள்ளார்.
 
பாலிவுட் தயாரிப்பாளர் குல்ஷன் குமாரின் வாழ்க்கை வரலாறு ‘மொகுல்’ என்ற பெயரில் திரைப்படமாக எடுக்க திட்டமிடப்பட்டது. ஆமீர் கான் கதாநாயகனாக நடித்து அவரே தயாரிக்க இருந்த இந்த படத்தை சுபாஷ் கபூர் இயக்க இருந்தார். இந்நிலையில், திடீரென ’மொகுல்’ புராஜெக்டில் இருந்து விலகுவதாக ஆமீர் கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ் கூட்டாக அறிவித்துள்ளனர்.
 
சுபாஷ் கபூர் மீது கீதா தியாகி என்ற நடிகை பாலியல் புகார் கூறியிருந்தார். இதனை கருத்தில் கொண்டே ஆமீர்கான் புதிய படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. எனினும், சுபாஷ் கபூரின் பெயரை குறிப்பிடாமல் தனது தயாரிப்பு நிறுவனம் மூலமாக அறிக்கை வெளியிட்டுள்ள ஆமீர்கான், “இரண்டு வாரங்களுக்கு முன்னர் மீடூ விவகாரம் பெரிதாக வெடித்தது. இந்த விவகாரத்தில் சிக்கிய ஒருவர் எங்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளார்.
 
அவர் மீதான புகார் குறித்து சட்ட ரீதியான விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. நாங்கள் புலனாய்வு அமைப்பு இல்லை என்றாலும், புகாரின் அடிப்படையில் இந்த படத்தில் இருந்து நாங்கள் விலகுகிறோம். எந்த வகையிலான பாலியல் தொல்லைகளையும் ஆமீர் கான் பட நிறுவனம் சகித்துக்கொள்ளாது. ” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கிடையே, ஆமீர் கானுடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருந்த டி-சீரிஸ் நிறுவனம், ‘மொகுல்’ புராஜெக்டில் இருந்து சுபாஷ் கபூரை அதிரடியாக நீக்கியுள்ளது. இது தொடர்பான கேள்விகளுக்கு, “ஆமீர்கானின் முடிவை ஏற்றுக்கொள்கிறேன். உண்மை விரைவில் வெளியே வரும்” என சுபாஷ் கபூர் பதில் அளித்துள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...