அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 50 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த பார்வதி தேவி சிலை கண்டுபிடிப்பு! 0 எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை விசாரிக்க தடையில்லை: உயர் நீதிமன்றம் 0 மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த ஏபிவிபியின் முன்னாள் தேசிய தலைவர் மீதான வழக்கு ரத்து 0 உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி! 0 பயங்கரவாத தாக்குதல்: தமிழக வீரர் உட்பட 3 பேர் வீர மரணம் 0 மிருகங்களால் கூட உண்ண முடியாத உணவு; கதறி அழுத போலீஸ்! 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஒரு நத்தை ஒரு ரூபாய்: கேரளத்தில் வினோதம்!

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   30 , 2021  16:15:59 IST


Andhimazhai Image

மழை பெய்தால் மட்டுமே சில உயிரினங்களை வெளியில் பார்க்க முடியும். அப்படியான ஒரு உயிரினம் தான் ஆப்ரிக்க நத்தை.  சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பாக ஆப்ரிக்காவில் இருந்து இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்ட இந்த நத்தையானது, மழைக்காலத்தில் எங்குப் பார்த்தாலும் காண முடியும். உலக அளவில் மிகவும் ஆபத்தான, மோசமான ஆக்கிரமிப்பு உயிரினங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளன இந்த ஆப்ரிக்க நத்தைகள்.

விவசாயம், அனைத்து உயிரினங்களுக்குமான வாழ்வாதாரம், மனிதர்கள் மற்றும் மற்ற உயிரினங்களின் ஆரோக்கியம் என்று அனைத்தின் மீதும் இந்த நத்தைகள் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது.

இந்த நத்தைகளின் பெருக்கம் இந்த மழைக்காலத்தில் கேரளத்தில் மிக அதிகமாக உள்ளது. இவற்றின் தீய விளைவுகளை அறிந்த கேரளாவைச் சேர்ந்த ‘சன்ரைஸ்’ நண்பர்கள் குழு  நத்தைகளை அழிக்கும் வேலையில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த குழுவில் 22 நண்பர்கள் உள்ளனர். சாலையில் தேங்கும் நீரை வெளியேற்றுவது, சாலைகளை சீரமைப்பது போன்ற பொதுமக்களின் நலன் சார்ந்த பிரச்சனைகளைக் கையிலெடுத்துத் தீர்த்து வந்தவர்களின் சமீபத்திய நடவடிக்கை அனைவரையும் கவர்ந்துள்ளது.

நடைப்பயிற்சி செல்லும் போது கண்ணில் படும் ஆப்ரிக்க நத்தைகளை உப்புத்தண்ணீர் மற்றும் சானிடைசரை பயன்படுத்தி அழித்து வருகின்றனர். தனியார் நிலங்களில் உள்ள நத்தைகளை அழிப்பதில் அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், நத்தையை விலை கொடுத்து வாங்கலாம் என முடிவெடுத்து, அதற்காக நிதியையும் திரட்டி கேரளாவின்  நாயரம்பலம் மற்றும் ஞாறக்கல் போன்ற கடற்கரை பகுதிகளில் தொலைபேசி எண்களுடன் போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளனர், ஒரு நத்தை ஒரு ரூபாய்க்கு வாங்கப்படும் என்று. இதனால், நத்தைகளை பிடித்துத்தர மக்கள் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஒருவாரத்தில் மட்டும் 3,500 நத்தைகளை விலை கொடுத்து வாங்கி அழித்திருக்கிறார்கள். அதில் ஒரே வீட்டிலிருந்து 600 நத்தைகளை வாங்கியிருக்கிறார்கள்.

மழைக்காலங்களில் பெருகும் ஆப்ரிக்க நத்தைகளை அழிக்கும் சன்ரைஸ் குழுவினரின் முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...