???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தானில் நீதிபதியாக பதவியேற்கும் 21-வயது இளைஞர்! 0 தமிழகத்தின் 33வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி 0 அயோத்தி வழக்கில் சாட்சியங்கள் அல்ல; சாஸ்திரமே நிலைநாட்டப்பட்டுள்ளது: திருமாவளவன் 0 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷூ: தமிழக அரசு அரசாணை 0 தெலங்கானா எம்.எல்.ஏ.வின் இந்திய குடியுரிமை ரத்து 0 ஐஐடியில் பாத்திமா லத்தீப் மரணம்: சி.பி.ஐ விசாரணை கோரி வழக்கு 0 நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவில் பிரக்யா: காங்கிரஸ் கண்டனம் 0 மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி பிரிவுக்கு 50% இட ஒதுக்கீடு வேண்டும்: டி.ஆர்.பாலு கோரிக்கை 0 தமிழ் மக்களுக்கு விருதை சமர்பிக்கிறேன்: கோவா திரைப்பட விழாவில் விருது பெற்ற ரஜினி பேச்சு 0 சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு 0 இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் 0 சென்னை குடிநீர் குடிக்க ஏற்றதல்ல: மத்திய தர நிர்ணய ஆணையம் 0 அ.தி.மு.கவுக்கு தெம்பிருந்தால் மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தட்டும்: பா.ஜ.க கடும் விமர்சனம் 0 சாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுமா? மத்திய அரசின் மழுப்பல் பதில்! 0 சென்னை சுற்று வட்டார பகுதிகளில் மழை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

’உங்க அப்பா ஒரு ஒட்டகம் வாங்கி வந்திருக்கிறார்’ !

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   26 , 2019  06:06:53 IST


Andhimazhai Image

இந்த கட்டுரையை படிக்கும் முன்பு உங்களிடம் மூன்று கேள்விகள் கேட்க வேண்டும்.

 

நீங்கள் கடைசியாக நாய்க் குட்டியை கொஞ்சியது எப்போது?

 

ஆட்டுக்குட்டியை வளர்த்த அனுபவம் இருக்கிறதா?

 

குட்டி நாயின் காதில் உள்ள உண்ணியை கையால் அகற்றிய அனுபவம் உண்டா?

 

இந்த கேள்விகளைப்போல் பல கேள்விகள் பக்ரீத் திரைப்படம் பார்த்தால் உங்களுக்கும் எழும்.

 

விலங்குகளை எல்லை கடந்து நேசிக்கும் பல மனிதர்களின் பிரதிநிதியாக விக்ராந்த் நடித்திருக்கிறார். ஒரு கிராமத்து விவசாயியின் அப்பாவித்தனத்தை தனது நடிப்பின் மூலம் வெளிக்காட்டியிருக்கிறார். கிராமத்து  வாழ்வியலின் இயல்புகளை மிகைப்படுத்தாமல் காட்சிகளை வடிவமைத்துள்ளார் இயக்குநர் ஜெகதீஷன் சுபு. விவசாயியின் மனைவி கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் வசுந்தரா.

 

கடன் வாங்குவதற்கு விவசாயி படும் சிரமங்களை அழுகாச்சி காவியமாக சித்தரிக்காமல், மிக எதார்த்தமான சம்பவங்கள் மூலம் கதையை நகர்த்தியுள்ளார் இயக்குநர். கடனுக்காக ஒரு பாயிடம் உதவி கேட்டுச்செல்லும் காட்சி வருகிறது. இஸ்லாமியர்களின் உதவும் குணம் இக்காட்சி மூலம் வெளிப்பட்டுள்ளது.

 

பாய் கடன் கொடுத்தாரா? இல்லையா? என்பதை விட  வேறு ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடக்கிறது. ரத்தினத்திற்கு ஒரு குட்டி ஒட்டகம் கிடைக்கிறது. பள்ளியிலிருந்து திரும்பி வரும் ரத்தினத்தின்  மகளிடம் ’உங்க அப்பா ஒரு ஒட்டகம் வாங்கி வந்திருக்கிறார்’ என்று ஊர் மக்கள் கூற ரத்தினத்தின் மகள் வாசுகி ஓடிச்சென்று ஒட்டகத்தை பார்க்கிறாள். வேறு என்ன வேண்டும் குழந்தைக்கு..  அம்மாவின் பின்பிருந்து வாசுகி பயத்துடன் ஒட்டகத்தை தொட்டு பார்க்கும் காட்சி பூரிப்பின் உச்சக்கட்டம். தொடர்ந்து ஒட்டகம் அவர்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறுகிறது.

 

ஆனால் ஒட்டகத்தை பாலைவனமான ராஜஸ்தானுக்கு மீண்டும் கொண்டுவிட வேண்டும் என்ற முடிவை ரத்தினம் எடுக்கிறார். அப்படி கொண்டு விடும்போது, பசு பாதுகாவலர்களால் தாக்கப்பட்டு  கைது செய்யப்படுகிறார் ரத்தினம்.

 

பசு பாதுகாவலர்கள் செய்த வன்முறைகளை செய்திகளில் மட்டுமே படித்த நமக்கு, இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நிகழும் என்பதை இத்திரைப்படம் ஓரளவுக்கு காட்சிப்படுத்தியிருக்கிறது.

 

நுகர்வு கலாச்சாரத்தின் தாக்கத்தால் ’லேஸ் சிப்ஸ்தான்’ வேண்டும் என்று ரத்தினத்தின் குழந்தை கேட்கும்போது, அதை திசைதிருப்ப ரத்தினம் செய்யும் அந்த யுக்தியை இன்றைய பெற்றோர்கள் கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டும். ’குழந்தை அதைத்தான் கேட்கிறது. ஏன் எங்களை குற்றம் சொல்கிறார்கள்? என்று புலம்பும் பெற்றோர்கள் ஒரு முறை இத்திரைப்படத்தை பார்க்க வேண்டும்’.

 

திரைக்கதைக்கு ஏற்றவாறு பின்னணி இசையமைத்திருக்கிறார் டி. இமான்.  ’லாரி லக்கி லாரி’ மற்றும் ’ஆலங்குருவிகளா’ பாடலை கேட்கும்போது நாமும் சேர்ந்து ஒட்டகத்துடன் பயணிப்பதுபோல ஒரு அனுபவம் ஏற்படுகிறது.

 

-வாசுகி

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...