அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய பாதிரியார் மீது 5 பிரிவுகளில் வழக்கு

Posted : வெள்ளிக்கிழமை,   மார்ச்   17 , 2023  14:09:32 IST

 
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பாதிரியார் ஒருவரின் காதல் லீலைகள் என்ற பெயரில் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே உள்ள பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ. இவர் அழகிய மண்டபம் அருகே பிலாங்காலை பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராகப் பணிபுரிந்து வந்தார். தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் பழகி அவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி முதலில் அன்பாக பேசத் தொடங்கி, நெருக்கமாகப் பழக முயன்றதாக காவல்துறை தெரிவித்தது. மேலும், பாதிரியாருடன் பழகும் பெண்களிடம் வாட்ஸ்-அப் மூலம் வீடியோ காலில் ஆபாசமாக நடந்து கொள்ள ஆரம்பித்து, பின் அந்தப் பெண்களை நிர்வாணமாக வீடியோ பதிவு செய்து வைத்துக்கொண்டு அதை வைத்து மிரட்டி பெண்களை பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்வதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் காட்டாத்துறை அருகே பிலாவிளை பகுதியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவரான ஆஸ்டின் ஜியோ பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் அவர் இளம் பெண்களுடன் செய்த ஆபாச பேச்சு, வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்தார். இதை அறிந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோக்கும் மாணவன் ஆஸ்டின் ஜியோவுக்கம் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
 
இதையடுத்து பாதிரியார் பெனிடிக் ஆன்டோ கொல்லங்கோடு காவல் நிலையத்தில் ஆஸ்டின் ஜியோ தன்னை மிரட்டி பணம் கேட்பதாகவும் நான் பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பரப்பி வருவதாகவும் புகார் அளித்தார். பாதிரியார் அளித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் ஆஸ்டின் ஜினோவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஆஸ்டின் ஜினோவின் தாயார் நாகர்கோவில் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டை நேரில் சந்தித்து மனு அளித்ததோடு பாதிரியாருக்கு எதிராக ஏராளமான பெண்களிடம் ஆபாச சாட்டிங் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள், தடயங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றைச் சமர்ப்பித்தார். இதனிடையே கடந்த 11ஆம் தேதி காட்டாத்துறை அருகே உள்ள ஆலந்தட்டுவிளையைச் சேர்ந்த பெண் ஒருவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ இளம்பெண்களுக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் கூறி குமரி மாட்ட போலீஸ் சூப்புரெண்டை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்ததுடன் பாதிரியார் தொடர்பான ஆபாச வீடியோக்களையும் பதிவுகளையும் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
 
இந்தப் புகார் அடிப்படையில் பாதிரியார் பெனிடிக் ஆன்டோ மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் நேற்று மாலை 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாலியல் குற்றம் தொடர்பாக இதுவரை ஐந்து பெண்கள் பாதிரியார் பெனடிக் ஆன்டோ மீது ஆன்லைன் மற்றும் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக குமரி மாவட்ட போலீஸ் சூபிரெண்டு பாதிரியார் பெனடிக் ஆன்டோ மீதான புகார்களின் அடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்தினார். இதை அறிந்த பாதிரியார் தலைமறைவாகிவிட்டார்.
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...