???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு! 0 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! 0 இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் 0 கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து 0 சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம்! 0 மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் 0 சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை 0 வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம்! 0 அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி 0 மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது 0 ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி 0 காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி! 0 தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! 0 இந்தியக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   14 , 2018  01:21:55 IST

நாட்டின் 72-வது சுதந்திர தினம், நாளை கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டங்களை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றவுள்ள டெல்லி செங்கோட்டையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
நாடு முழுவதும் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் அதிக அளவில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
 
அனைத்து ரயில்கள் மற்றும் பெட்டிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் விடிய விடிய வாகன சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீஸார், பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ள தலைமைச் செயலகம் பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2 ஆயிரம் போலீஸார், பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...