???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறை: அறிக்கை கேட்கிறது உச்சநீதிமன்றம் 0 நீட் தொடர்பாக அமைச்சர்கள் பேட்டி தர வேண்டாம்: நீதிமன்றம் 0 குடகு விடுதியில் ஆதரவாளர்களுடன் தினகரன் ஆலோசனை 0 இரட்டை இலை சின்னம்: விசாரணை தேதி மாற்றம் 0 பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு! 0 காந்தி, நேரு, அம்பேத்கர் எல்லோரும் என்.ஆர்.ஐ.தான்: ராகுல்காந்தி 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பண பட்டுவாடா விவகாரம்: சிபிஐ விசாரிக்க ஸ்டாலின் வலியுறுத்தல் 0 போதையில் வாகனம் ஓட்டி விபத்து: நடிகர் ஜெய் கைது! 0 இரட்டை இலையை மீட்க தமிழக அமைச்சர்கள் டெல்லி விரைவு 0 கிரிக்கெட் வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை 0 பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு:சோனியாகாந்தி பிரதமருக்கு கடிதம் 0 மாநில அரசுகளுக்கு சுயாட்சி தேவை: பினராயி விஜயன் 0 சமூக நீதிக்கு பெரும் தீங்கு உருவாகியுள்ளது: ஸ்டாலின் பேச்சு 0 கமல் அழைத்தாலும் இணைய மாட்டேன்: குஷ்பு 0 அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள்: முதலமைச்சர் அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளை எங்கு மாற்றுவது?

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   08 , 2016  21:16:39 IST


Andhimazhai Image

நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை இரவு தொலைக்காட்சி மூலம் நேரலையாக சிறப்புரையாற்றினார். அப்போது கள்ள நோட்டுகள், கருப்புப் பணம் ஆகியவற்றை ஒழிப்பதற்கான பல முக்கிய அதிரடி நடவடிக்கைகளை அவர் அறிவித்தார். தனது 40 நிமிட சிறப்புரையில்

'செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இந்த நோட்டுகளை வைத்திருக்கும் பொதுமக்கள் அவற்றை வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் வரும் 10-ஆம் தேதி முதல், அடுத்த மாதம் (டிசம்பர்) 30-ஆம் தேதிக்குள் (50 நாள்களுக்குள்) அவற்றை டெபாசிட் செய்து கொள்ளலாம்.


அதேபோல், 500, 1,000 ரூபாய் நோட்டுகளை அவற்றை விடக் குறைந்த மதிப்பிலான ரூ.100, ரூ.50, ரூ.20, ரூ.10 போன்ற நோட்டுகளாக வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் வரும் 10ஆம் தேதி முதல் 24-ஆம் தேதிக்குள் (14 நாள்களுக்குள்) மாற்றிக் கொள்ளலாம். அவ்வாறு மாற்ற முன்வரும்போது, பான் அட்டை, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை போன்ற அரசு அடையாள அட்டைகளைக் கொண்டுவருவது அவசியமாகும்.

ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சமாக ரூ.4,000 மதிப்பிலான 500, 1,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியும்.
இந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய இயலாதவர்கள், ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் அவற்றை டெபாசிட் செய்து கொள்ளலாம். அப்போது அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, உரிய காரணத்தைக் குறிப்பிட்டு, அடையாள அட்டைகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.

வழக்கம்போல், ரூ.100, 50, 20, 10, 5, 2, 1 நோட்டுகளும், நாணயங்களும் தொடர்ந்து செல்லுபடியாகும்.
விமான டிக்கெட்டுகள், ரயில்வே முன்பதிவுகள், அரசுப் பேருந்து டிக்கெட்டுகள், மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள் வரும் 11, 12-ஆம் தேதி நள்ளிரவு வரை செல்லுபடியாகும். தவிர, ரூ.2000 நோட்டுகள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. வங்கிகள் புதன்கிழமை மூடப்படும். இது உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம். அதைப் பொருட்படுத்த வேண்டாம். தேசத்தைக் கட்டமைப்பதிலும், மறுநிர்மாணம் செய்வதிலும் வரலாற்றில் எப்போதாவதுதான் ஒரு வாய்ப்பு கிடைக்கும்" என்றார் மோடி.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...