???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நிலவேம்புக்கு கொரோனா எதிர்ப்புத்திறன் - சுவீடன் பல்கலை. கூட்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு 0 கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆனது! 0 அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று 0 நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு 0 சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி 0 கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் 0 வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை! -கே.எஸ்.அழகிரி அறிக்கை 0 சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை 0 தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று 0 சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? நீதிமன்றம் 0 சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ விசாரணை தொடக்கம் 0 சொத்து வரி வசூலை 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் 0 கான்பூரில் ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

5 வயது சிறுவன் தாயைக் காண தனி ஆளாக விமானப் பயணம்!

Posted : திங்கட்கிழமை,   மே   25 , 2020  22:22:54 IST


Andhimazhai Image

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது விஹன் சர்மா என்ற 5 வயது சிறுவன் பெங்களூரில் உள்ள தனது தாயை சந்திக்க முடியாமல் டெல்லியில் சிக்கிக்கொண்டான். தனது மகனை சுமார் 3 மூன்று மாதங்கள் பார்க்க முடியாமல் சர்மாவின் தாயார் மிகுந்த வருத்தத்தில் இருந்தார்.

இந்நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விமான போக்குவரத்து மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. இதையடுத்து, டெல்லியில் இருந்து சர்மாவை பெங்களூரு அழைத்து வர அவனது தாயார் உரிய ஏற்பாடுகளை செய்தார். இதற்காக டெல்லியில் இருந்து பெங்களுரூ வரும் விமானத்தில் சிறப்பு வகுப்பில் டிக்கெட் பதிவு செய்தார்.

இதையடுத்து, உறவினர்கள் உதவியுடன் சர்மா டெல்லி விமான நிலையம் வந்தடைந்தான். அங்கிருந்து விமான பயணத்தை தொடங்கிய சர்மா தனி ஆளாக பெற்றோர், உறவினர்கள் என யாரின் துணையும் இல்லாமல் பெங்களூரு வந்தடைந்தான். விமானத்தில் சிறுவன் சர்மா சிறப்பு வகுப்பு பயணி பிரிவில் பயணம் மேற்கொண்டான்.

டெல்லியில் இருந்து தனி ஆளாக பெங்களூரு வந்திறங்கிய தனது மகன் சர்மாவை கண்டதும் விமான நிலையத்தில் காத்திருந்த சிறுவனின் தாய் அவனை ஆரத்தழுவி தனது பாசத்தை வெளிப்படுத்தினார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...