???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தானில் நீதிபதியாக பதவியேற்கும் 21-வயது இளைஞர்! 0 தமிழகத்தின் 33வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி 0 அயோத்தி வழக்கில் சாட்சியங்கள் அல்ல; சாஸ்திரமே நிலைநாட்டப்பட்டுள்ளது: திருமாவளவன் 0 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷூ: தமிழக அரசு அரசாணை 0 தெலங்கானா எம்.எல்.ஏ.வின் இந்திய குடியுரிமை ரத்து 0 ஐஐடியில் பாத்திமா லத்தீப் மரணம்: சி.பி.ஐ விசாரணை கோரி வழக்கு 0 நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவில் பிரக்யா: காங்கிரஸ் கண்டனம் 0 மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி பிரிவுக்கு 50% இட ஒதுக்கீடு வேண்டும்: டி.ஆர்.பாலு கோரிக்கை 0 தமிழ் மக்களுக்கு விருதை சமர்பிக்கிறேன்: கோவா திரைப்பட விழாவில் விருது பெற்ற ரஜினி பேச்சு 0 சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு 0 இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் 0 சென்னை குடிநீர் குடிக்க ஏற்றதல்ல: மத்திய தர நிர்ணய ஆணையம் 0 அ.தி.மு.கவுக்கு தெம்பிருந்தால் மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தட்டும்: பா.ஜ.க கடும் விமர்சனம் 0 சாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுமா? மத்திய அரசின் மழுப்பல் பதில்! 0 சென்னை சுற்று வட்டார பகுதிகளில் மழை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

5 பைசாவுக்கு பிரியாணி! அசத்திய திண்டுக்கல்காரர்கள்!

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   17 , 2019  06:17:17 IST


Andhimazhai Image

உலக உணவு தினமான நேற்று 5 பைசா கொடுத்தால் பிரியாணி வழங்கப்படும் என்ற செய்தி. நம்மை கவர்ந்தது. திண்டுக்கலில் உள்ள ஒரு உணவகத்தில்தான் இந்த அறிவிப்பு. இது உண்மைதானா.  என்று  அறிந்துகொள்ள உணவகத்திற்கு போன் செய்தோம்.

 

’செய்தி உண்மைதான். முதலில் வரும் 100 நபர்களுக்கு மட்டுமே இலவசம் என்றுதான் அறிவித்தோம். ஆனால் மக்கள் கூட்டம் அலைமோதியாதால் சுமார் 200 பேருக்கு பிரியாணி கொடுத்திருப்போம். அவர்கள் எல்லாரும் பழைய 5 பைசா காயின்களை வைத்திருந்தனர்  என்பதுதான் அதிசயமாக இருந்தது. என்றார் உணவக உரிமையாளரான  முஜிபர் ரகுமான். இவரும் இவரது அண்ணன் பிலாஸ் ஹுசைனும் இணைந்து இந்த உணவகத்தை நடத்திவருகிறார்கள். உணவகத்தின் பெயர் முஜிப் பிரியாணி.

 

பிலாஸ் ஹுசைன் தொடர்ந்தார்,  ’’சுமார் 20 வருடங்களாக உணவகம் நடத்தி வருகிறோம். முதலில் தட்டு கடையாகத்தான் இருந்தது. 2 ரூபாய் இட்லியில் இருந்துதான் எங்கள் பயணம் தொடங்கியது. நான் சிவில் இஞ்சினியராக வேலை செய்கிறேன். எனது தம்பிதான் உணவகத்தை கவனித்துக்கொள்கிறார். அவனுக்கு உதவி மட்டுமே நான் செய்கிறேன். அவர் இஞ்சினியரிங் படித்திருந்தாலும் உணவகத்தை நடத்த வேண்டும் என்பதே அவரின் ஆசை. அவர் சிந்தனையில் உதித்ததுதான்  5 பைசா ஐடியா.

 

கீழயடியில் நடைபெற்று வரும் அகழாய்வு தொடர்பான செய்திகள் எங்களை அதிகம் பாதித்தது. பழமையை நாம் கொண்டாவதில்லை என்ற எண்ணம் எனது தம்பிக்கு தோன்றியது. அதனால் பழைய 5 காசுகள் கொடுத்தால் பிரியாணி தருவோம் என்ற வாசகம் உருவானது. மற்றவர்கள் இதை விளம்பர யுக்தி என்கிறார்கள். நாங்கள் விளம்பரத்திற்காக அப்படி செய்யவில்லை .இப்போது எங்களிடம் நூற்றி முப்பதி ஐந்து , 5 பைசா காயின்கள் இருக்கிறது. இதை பெருமையாக எங்கள் குழந்தையிடம் காண்பித்தோம். பொக்கிஷமாக இதை பாதுகாப்போம்’’ என்ற இவர்  ஜல்லிக்கட்டு போராட்டம்  நடைபெற்றபோது 6 நாட்கள் இலவசமாக உணவு தயாரித்து வழங்கினோம் என்றும் தெரிவித்தார்.

 

மேலும் இதுதொடர்பாக பேசிய முஜிபர் ரகுமான், ‘’உலக உணவு தினத்தை வித்தியாசமாக கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. உணவு கொடுக்க வேண்டும் ஆனால் அதை இலவசமாக கொடுக்கக்கூடாது. அதேபோல் நாம் செய்யும் விஷயத்தில் ஏதேனும் ஒரு நன்மை இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் இந்த 5 பைசா பிரியாணி சிந்தனை ஏற்பட காரணம்’’. என்று கூறினார்.

 

யார் வீட்டிலாவது 5 பைசா நாணயம் இருந்தால் பத்திரமாக வைத்திருங்கள் எப்போதாவது இப்படி பிரியாணி சாப்பிட உதவும்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...