???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ’மாஸ்டர்’ படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதில் உறுதி : தயாரிப்பு நிறுவனம் அறிக்கை 0 இந்திய கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி! 0 எதிர்பார்ப்பை எகிற வைக்கும் நோலனின் டெனெட்! 0 டிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம் 0 ஓ.டி.டி-யில் வெளியாகிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’? 0 மராட்டிய எம்.எல்.ஏ பாரத் பால்கே காலமானார்! 0 மக்களுக்கு எரிவாயு மானியத்தில் தடையிருக்காது – அமைச்சர் தர்மேந்திர பிரதான் 0 மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை 0 வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது 0 நிவர் புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி 0 லக்ஷ்மி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் 0 திருவண்ணாமலைக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழைவதற்குத் தடை! 0 மு.க.ஸ்டாலினுக்கு பாராட்ட மனமில்லை: அமைச்சர் ஜெயக்குமார் 0 மருத்துவம் - காவல்துறைக்குச் சங்கம் தேவையில்லை: உயர்நீதிமன்றம் 0 ஒ.பி.சி இடஒதுக்கீடு: மத்திய-மாநில அரசுகள் மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 5 சிறுமிகள் மீட்பு

Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   23 , 2020  08:16:13 IST

புதுவை அருகே கொத்தடிமை வேலையில்  ஈடுபடுத்தப்பட்ட 5 சிறுமிகளை குழந்தைகள் நல மையம்  பத்திரமாக மீட்டுள்ளது.

புதுச்சேரியில் 5 சிறுமிகளை வாத்து மேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக குழந்தைகள் நல வாரியத்துக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து குழந்தைகள் நல மையத் தலைவர் இராஜேந்திரன் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில் புதுவை, கீழ்சாத்தமங்கலம் ஏரிக்கரை அருகே 7 முதல் 13 வயதுள்ள 5 பெண் குழந்தைகள் கொத்தடிமைகளாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த குழந்தைகள் மீட்கப்பட்டு தனியார் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இதுகுறித்து குழந்தைகள் நல மையத் தலைவர் இராஜேந்திரன் கூறுகையில், "காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறை சேர்ந்தவர் ஆறுமுகம். அவர் கரும்பு வெட்டும் கூலித்தொழிலுக்காக புதுச்சேரி கிராமப் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது, தலா 3 ஆயிரம் வீதம் ரூ. 15 ஆயிரம் பெற்றுக் கொண்டு, தனது 5 பெண் குழந்தைகளையும் வாத்து மேய்க்கும் பணிக்கு அனுப்பியுள்ளார். அச்சிறுமிகள் கடந்த இரண்டரை ஆண்டுகளாக கொத்தடிமைகளாக இருந்து வந்துள்ளனர். ஆறுமுகத்திடம் இதுபற்றி விரிவாக விசாரித்து வருகிறோம். இந்த சம்பவத்தில் வாத்து பண்ணை உரிமையாளர், அவரது மனைவி, மகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம்" என்றார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...