???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிப்.4 - பங்குச் சந்தை

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   04 , 2013  08:55:45 IST

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று காலையில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி முறையே 108 , 32 புள்ளிகள் ஏற்றத்தோடு தொடங்கின. அதனைத் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் நடைபெற்ற பங்கு வர்த்தகம் , பிற்பகுதியில் சரியத் தொடங்கியது. சென்செக்ஸ் 30 புள்ளிகள் குறைந்து 19752லும் நிப்டி 12 புள்ளிகள் குறைந்து 5987லும் முடிவடைந்தன. தொடர்ச்சியாக 2 நாட்கள் சென்செக்ஸ் 20000க்கு குறைவாகவும் நிப்டி 6000க்கு குறைவாகவும் முடிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய வர்த்தகத்தில் HDFC , டாட்டா மோட்டார்ஸ், ICICI வங்கி, HDFC வங்கி, ஜிண்டால் ஸ்டீல் போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும், BHEL ,சிப்லா ,SBI ,டாட்டா பவர்ஸ்,ONGC நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின. முக்கியமாக இன்றைய சரிவுக்கு பொதுத்துறை நிறுவனங்கள், மருந்து உற்பத்தித்துறை, எண்ணெய் மற்றும் எரிவாயு துறையைச் சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமானதே காரணம்.

பெரும்பாலான நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு நிதி அறிக்கைகள் ஏற்கனவே வெளியான நிலையில், பங்குச்சந்தைகளில் உயர்வோ தாழ்வோ உலக அளவில்  பொருளாதார ரீதியான செய்திகளைப் பொறுத்தே அமையும் என்றும் நிப்டி 5940ஐத் தாண்டி குறையும் பட்சத்தில் 5820 வரை சரிவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும் முதலீட்டாளர்கள் லாப நோக்கோடு வாங்கிய பங்குகளை விற்க ஆரம்பித்துவிட்டதால் பங்குச்சந்தையில் சின்ன சரிவு ஏற்படலாம் என்றும் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

இன்று மும்பைப் பங்குச்சந்தையில் 1242 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் 1713 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் விற்பனையாயின. SBI , பாங்க் ஆப் பரோடா, suzlon மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனப் பங்குகள்  மொத்த வர்த்தகத் தொகை அடிப்படையில் முதல் நான்கு இடங்களை பிடித்தன. Suzlon , IFCI , யூனிடெக் மற்றும் டிவி18 நிறுவனப் பங்குகள் எண்ணிக்கை அடிப்படையில் முதல் நான்கு இடங்களில் இருந்தன.


English Summary
Indian markets ended the volatile session tad lower on Monday

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...