அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக நாடுகளில் ஆராய்ச்சிப் பணியும் வாய்ப்புகளும்- -முனைவர் விஜய் அசோகன், ஆராய்ச்சியாளர், அயர்லாந்து 0 கருணாநிதி சிலையை திறக்க மிகவும் பொருத்தமானவர் வெங்கய்ய நாயுடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தை தலை நிமிரச்செய்தவர் கருணாநிதி – அமைச்சர் துரைமுருகன் புகழாரம்! 0 செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல! - மக்கள் நீதி மய்யம்! 0 தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை! 0 தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள் – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 வாய்தா: திரைப்பட விமர்சனம்! 0 பாமக தலைவராக அன்புமணி தேர்வு! 0 "வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்" – எச்சரித்த நீதிமன்றம்! 0 தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு! 0 அண்ணாமலையின் பேச்சுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் 0 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு 0 தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக்கூடாது: முதலமைச்சர் 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

3வது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கைகள் குறைவு: மத்திய அரசு

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   21 , 2022  08:16:58 IST

கொரோனா இரண்டாவது அலையைக் காட்டிலும், மூன்றாவது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண், உலக அளவில் கொரோனா பாதிப்பில் ஆசியாவின் பங்களிப்பு 4 வாரங்களில் 7.9 சதவிகிதத்திலிருந்து 18.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகளும் அதிகரித்துள்ளன.
 
நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மகாராஷ்டிரம், கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், குஜராத், ஒடிசா, தில்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களில் அதிகம் உள்ளனர்.
 
கடந்த ஏப்ரல் 30, 2021-இல் 3,86,452 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். 3,059 பேர் உயிரிழந்தனர். 31 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் இன்றைய நிலவரப்படி, 3,17,532 புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர், 380 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 19,24,051 பேர் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
டெல்லியில் ஜனவரி 9 முதல் ஜனவரி 19 வரை சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 75 ஆயிரத்திலிருந்து 78 ஆயிரம் வரை இருந்தது. ஆனால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் 2,500-இல் இருந்து 2,600 பேர் மட்டும். 18 வயதுக்கு மேற்பட்ட 99 சதவிகிதத்தினருக்கு பொதுவான அறிகுறிகளாக காய்ச்சல், இருமல் மட்டுமே இருந்தன. இந்த அறிகுறிகள் 5-வது நாளில் குணமடைந்துவிடுகின்றன.
 
இதுவரை மொத்தம் 72 சதவிகிதத்தினர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர். 15-18 வயதுடைய சிறார்கள் 52 சதவிகிதத்தினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தடுப்பூசிகள் பலனளிக்கின்றன. தடுப்பூசி காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கைகள் குறைந்துள்ளன. தடுப்பூசி அதிகம் செலுத்திக்கொண்டதால், கொரோனா மூன்றாம் அலையில் தீவிர பாதிப்பையும் உயிரிழப்புகளையும் நாம் பார்க்கவில்லை" என்று அவர் கூறினார்.
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...