???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜன.31 - பங்குச் சந்தை

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   31 , 2013  05:44:44 IST

2013, ஜனவரி மாதத்திற்கான டெரிவேடிவ்ஸ் காலாவதி நாளான இன்று பங்குச்சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிபிட்டி சரிவில் முடிவடைந்தன. சென்செக்ஸ் 110 புள்ளிகள் சரிந்து 19894லும் நிப்டி 21 புள்ளிகள் சரிந்து 6035லும் முடிவடைந்தன. சென்செக்ஸ் மீண்டும் 20000க்கு கீழே சரிந்தது.

இன்றைய வர்த்தகத்தில் BHEL , சண் பார்மா, ஹீரோ மோட்டோ கார்ப், ITC , Gail India போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும் , டாட்டா பவர்ஸ், ICICI வங்கி, HDFC வங்கி, ரிலையன்ஸ்,ஏர்டெல் நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின.

ICICI வங்கியின் மூன்றாம் காலாண்டு நிதி அறிக்கை எதிர்பார்ப்பை மிஞ்சி நிகர லாபத்தில் 30.2 சதவிகித வளர்ச்சி காட்டியதால் அதன் பங்குகள் கிடுகிடுவென விலை உயர்ந்து கடந்த 52 வாரங்களில் இல்லாத புதிய உச்சபட்ச விலையான 2010ஐத் தொட்டது. ஆனாலும் வர்த்தகத்தின் பிற்பகுதியில் Profit Booking காரணமாக வர்த்தகர்கள் பங்குகளை விற்பதில் ஆர்வம் காட்டியதால் விலை சரிந்து 1.93 சதவிகிதம் குறைந்து முடிவடைந்தது. அதே வங்கித் துறையைச் சார்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் 9.41 சதவிகிதம் உயர்ந்தும், யூனியன் பாங்க் ஆப் இந்தியா 5.8 சதவிகித உயர்வுடனும் முடிவடைந்தன.

மும்பைப் பங்குச் சந்தையில் இன்று 1422 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் 1444 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின. இசிசி பங்குகள் மொத்தம் 100 கோடி ரூபாய்களுக்கும் அதிகமாக வர்த்தகமாகி முதல் இடத்தைப் பிடித்தது. இதனைத் தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் பங்குகள் 98 கோடி ரூபாய்களுக்கும் SBI , பஞ்சாப் நேஷனல் பாங்க் நிறுவனங்களின் பங்குகள் 93 கோடி ரூபாய்களுக்கும் வர்த்தகமாயின. Suzlon , IFCI ,NHPC போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகமான எண்ணிக்கையில் வர்த்தகமாயின.


English Summary
The Nifty closed at 6,034, lost 21 points and the Sensex was down 110 points to end below 19,990.

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...