???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு! 0 தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது! 0 அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் 0 நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் 0 இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் 0 நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் 0 நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு 0 அத்திவரதர் தரிசனத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி 0 புதுச்சேரி ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் மதிய உணவு: முதல்வர் நாராயணசாமி உத்தரவு 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பா. ரஞ்சித்துக்கு ஆதரவாக 300 எழுத்தாளர்கள் கையெழுத்து

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   18 , 2019  04:18:01 IST

மாமன்னர் ராஜராஜ சோழன் தொடர்பான கருத்தை கூறியதைத் தொடர்ந்து இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு எதிராக சிலர் கருத்துக்களை முன்வைத்தனர். இத்தகைய சூழலில், பா. ரஞ்சித்துக்கு ஆதரவளிக்கும் கையெழுத்து இயக்கத்தில் 300 எழுத்தாளர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
இதற்காக, கருத்துரிமைக்கு ஆதரவாக எழுத்தாளர்கள் மற்றும் திரைக்கலைஞர்கள் கூட்டறிக்கை எனும் தலைப்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.
 
அந்த அறிக்கையில், "இயக்குநர் பா. இரஞ்சித்தின் ராஜராஜ சோழன் குறித்த கருத்து பேசுபொருளாகியிருப்பது அனைவரும் அறிந்ததே. அவர் கூறிய கருத்தை சற்று பின்னோக்கிப் பார்ப்போமானால், ஆய்வுபுலத்தில் விவாதத்துக்குள்ளாகியிருக்கும் விஷயங்களைத் தான் பா.இரஞ்சித் பேசியிருக்கிறார் என்பது தெரியவரும். ஆகவே, அவைதொடர்பான விவாதங்கள் தொடரவே  செய்யும். பா.இரஞ்சித்தின் கருத்தையும் இதன் தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது.  எனவே அவர் கருத்தை ஆரோக்கியமான உரையாடலின் வழியாகவே விவாதப்படுத்த வேண்டும் .
 
 ஆனால், பா. இரஞ்சித் விஷயத்தில் முற்றிலும் மாறாக நடந்து வருகிறது. அவர் கூறிய கருத்துக்காக  மிக மோசமாக வசைபாடப்பட்டார். சாதி சங்கங்கள், மதவாத அமைப்புகள், இனவாத குழுக்கள் அவருடைய அலைபேசி எண்ணைப் பொதுவெளியில் பகிர்ந்தார்கள். அவருக்குத் தொடர்ந்து கொலைமிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது,  பா. இரஞ்சித் தன் மனைவி குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை ஒரு கட்சியின் தேசிய செயலாளரே தன்னுடைய முகநூலில் பதிவிட்டு விமர்சிக்கிறார். அரசாங்கமே பா. இரஞ்சித்துக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டு அது விசாரணையில் இருக்கிறது.  இந்த போக்குகள் கருத்து சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாக மாறியிருக்கிறது என்று கருதுகிறோம். 
 
குறிப்பாக ஒரு படைப்பாளியின் கருத்துச் சுதந்திரம் இப்படி அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது, கருத்துச் சுதந்திரத்தின் மீது நம்பிக்கை கொண்ட சக படைப்பாளிகளாக அவருடன் நிற்க வேண்டியது  அனைவரது கடமையும் ஆகும். ஆகவே, பா. இரஞ்சித்திற்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிட்டு அதில் கருத்து சுதந்திரத்தை ஆதரிப்பர்களுடைய கையொப்பங்களையும் இணைக்கிறோம். இதனை தங்கள் ஊடகங்களில் வெளியிட்டு கருத்து சுதந்திரத்திற்கான ஆதரவைத் தர வேண்டுகிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

English Summary
300 writers support pa. ranjith

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...