???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜன.30 - பங்குச் சந்தை

Posted : புதன்கிழமை,   ஜனவரி   30 , 2013  06:08:16 IST

இன்று காலையில் சற்று உயர்வுடன் துவங்கிய பங்குச் சந்தைகள் அதன் பின்னர் விறுவிறுப்பின்றி சுணக்கம் அடைந்தன. சென்செக்ஸ் 14 புள்ளிகள் உயர்ந்து 20005லும் நிப்டி 6 புள்ளிகள் உயர்ந்து 6055லும் முடிவடைந்தன. நாளை இந்த மாத டெரிவேடிவ்ஸ் காலாவதி ஆகும் நாள் என்பதால் வர்த்தகர்கள் எச்சரிக்கையோடு வர்த்தகத்தில் ஈடுபட்டதே சுணக்கத்திற்கு காரணம். ரியாலிட்டி மற்றும் நுகர் பொருள் நிறுவனப் பங்குகள் வாங்குவதில் வர்த்தகர்கள் ஓரளவு ஈடுபாடு காட்டினர்.

இன்றைய வர்த்தகத்தில் சிப்லா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்,டாட்டா ஸ்டீல், விப்ரோ போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும் Gail India , டாட்டா பவர்ஸ், L & T , ஜிண்டால் ஸ்டீல் , டாட்டா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின. உலக அளவில் நிலைமை சாதகமாகவே உள்ளதால் பங்குச் சந்தையில் இன்னும் உயர்வை எதிர் பார்க்கலாம் என்றே தெரிகிறது. இருந்தாலும் 6050 என்பது நிப்டியின் உயர்வுக்கு பெரிய தடையாக அமையலாம்.

மும்பைப் பங்குச்சந்தையில் 1279 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் 1652 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின. SBI நிறுவனப் பங்குகள் 104 கோடி ரூபாய்களுக்கு வர்த்தகமாயின. மேலும் ரிலையன்ஸ் பங்குகள் 70 கோடி ரூபாய்களுக்கும் ஆக்சிஸ் வங்கியின் பங்குகள் 48 கோடி ரூபாய்களுக்கும் வர்த்தகமாயின.  அதேபோல Suzlon , யூனிடெக், Crompton Greaves நிறுவனங்களின் பங்குகள் அதிகமான எண்ணிக்கையில் வர்த்தகமாயின.


English Summary
Indian markets ended slightly higher on Wednesday as sentiment remained cautious throughout the day ahead of F&O expiry tomorrow.

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...