அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடிய 3 ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் கல்லூரியிலிருந்து இடை நீக்கம்!

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   27 , 2021  17:33:49 IST

டி 20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடும்விதமாக  வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த  மூன்று  ஜம்மு காஷ்மீர் மாணவர்களை ஆக்ராவில் உள்ள பொறியியல் கல்லூரி இடை நீக்கம் செய்துள்ளது.

 இடைநீக்கம் செய்யப்பட்ட அர்ஷித் யூசுப், அல்தாஃப் ஷேக், செளகத் அகமது கானாய் ஆகியோர் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள  ராஜா பல்வந்த் சிங் பொறியியல் தொழில்நுட்ப வளாகத்தில் பயின்றுவருகின்றனர். பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக ஸ்டேட்டஸ் வைத்திருப்பது ஒழுங்கீனமான செயல் என கல்லூரி விடுதி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விடுதியின் தலைவர் வெளியிட்ட அறிக்கையில், "விடுதி ஒழுங்கு குழு அந்த மூன்று மாணவர்களை உடனடியாக இடைநீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கல்லூரி நிர்வாகம் மாணவர்களை திங்கள்கிழமை இடைநீக்கம் செய்தது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் நிதி இயக்குநர் பங்கஜ் குப்தா கூறுகையில், "பிரதமரின் சூப்பர் ஸ்பெஷல் திட்டத்தின் கீழ் மாணவர்கள் படித்து வந்தனர். மாணவர்களின் செயல் குறித்து பிரதமர் அலுவலகம் மற்றும் ஏஐசிடிஇ-க்கும் தெரிவித்துள்ளோம். ஆனால், மாணவர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர்" என்றார்.






 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...