![]() |
இந்தியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி: தென்னாப்பிரிக்கா வெற்றி!Posted : வெள்ளிக்கிழமை, ஜனவரி 21 , 2022 18:39:58 IST
இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியுள்ளது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து முதலாவதாகக் களமிறங்கிய கேப்டன் கே.எல். ராகுல் 4 பவுண்டரிகளுடன் அரை சதம் விளாசினார். அவர் 55 (79) ரன்களில் வான்டெர் துஸ்சென்னிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
தொடக்க ஆட்டக்காரர்களான மலன், டி காக் ஆகியோர் அரைசதம் கடந்து முறையே 91, 78 ரன்களை எடுத்தனர். இதனால் அணியின் ரன்வேகம் அதிகரித்தது. அதன்பிறகு களமிறங்கிய வீரர்கள் நிதானமாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றனர்.
முடிவில் தென்னாப்பிரிக்க அணி 48.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி தென்னாப்பிரிக்க அணி முன்னிலையில் உள்ளது.
|
|