???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 0 13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை கைது! 0 சலூன்கள், பியூட்டி பார்லர் செல்ல ஆதார் அட்டை கட்டாயம்: தமிழக அரசு 0 பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கkகோரி ஆசிரியர்கள் சங்கம் வழக்கு 0 சென்னையில் பைக்கில் 2 பேர் சென்றால் ரூ.500 அபராதம் 0 பொருளாதாரத்தை மோசமாக கையாளுகிறார் மோடி: ராகுல் காந்தி 0 இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும்: பிரதமர் மோடி உறுதி 0 தமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று 0 வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன்: டிரம்ப் எச்சரிக்கை 0 ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி வேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை- இலங்கை வடமாகாண சபையில் தீர்மானம்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜனவரி   28 , 2014  01:35:00 IST

இலங்கையில் நடத்தப்பட்ட தமிழினப்படுகொலைப் போர்க்குற்றங்கள் தொடர்பாக பன்னாட்டு விசாரணை நடத்தவேண்டும் என வடமாகாண சபையின் மாதாந்திரக் கூட்டத்தில் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவாஜிலிங்கம் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதில் இனவழிப்பு எனும் சொல் சட்டச்சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் அதை இனவழிப்புக்கு ஈடான படுகொலைகள் என மாற்றுமாறு முதலமைச்சரும் முன்னாள் இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதியுமான விக்கினேசுவரன் கூறினார்.

அவ்வாறே ”எமது மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு ஒப்பானவற்றின் விசாரணைகளை செய்வதற்காக பக்கச்சார்பற்ற பன்னாட்டு விசாரணையை ஐக்கிய நாடுகள் சபையின் துணையுடன் உருவாக்குவதற்கு அனைத்துலக சமூகத்தினையும் வேண்டுதல்” எனத் திருத்தப்பட்டு, அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மற்றொரு உறுப்பினர் ரவிகரன், முள்ளிவாய்க்காலில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூர நினைவுத்தூண் அமைக்கவேண்டும் எனக் கொண்டுவந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. 

மன்னார், திருக்கேதீஸ்வர மனிதப் புதைகுழி விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட உள்ளக விசாரணைகளும் இரசாயன பகுப்பாய்வும் ஜ.நா.வின் மேற்பார்வைக்குழுவின் உதவியுடன் மேற்கொள்ளப்பட வேண்டும், வடமாகாணத்தின் அரச திணைக்களங்களின் பெயர்ப்பலகைகள் அனைத்திலும் தமிழ் மொழி முதலாவதாகவும், இரண்டாவதாக சிங்கள மொழியும் மூன்றாவதாக ஆங்கில மொழியும் இடம்பெறவேண்டும், முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன் கட்டுக்குளத்திற்கு மேற்காக படையினரின் பயிற்சித் தளத்திற்கு அருகில் தமிழ் மக்களின் 2000-க்கும் மேற்பட்ட மாடுகளைக் கொண்ட பண்ணையை இராணுவத்தினர் நடத்தி வருகின்றனர். இதை வடமாகாண சபை பொறுப்பேற்று குறியிடப்பட்ட மாடுகளை உரியவர்களிடம் ஒப்படைப்பதுடன், மிகுதி மாடுகளை பண்ணை அமைத்து பராமரித்து வருமான ஈட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்பன உள்பட 12 தீர்மானங்கள் வடமாகாணசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டன. 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...