???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜன.28 - பங்குச் சந்தை

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   28 , 2013  05:11:54 IST

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று மிகவும் பரபரப்பான வர்த்தகத்துடன் ஏற்றத்தில் முடிந்த பங்குச் சந்தைகள், வாரத்தின் முதல் நாளான இன்று சுணக்கம் காட்டின. காலையில் இருந்தே பெரிய ஏற்றத் தாழ்வுகள் ஏதுமின்றி வர்த்தகமான பங்குச் சந்தைகள் சற்றும்  மாற்றங்கள் இல்லாமல் முடிவடைந்தன.சென்செக்ஸ் 20103 புள்ளிகளுடனும், நிப்டி 6074 புள்ளிகளுடனும் முடிவடைந்தன. ரிசர்வ் வங்கி நாளை வெளியிடப் போகும் அறிக்கைக்காக முதலீட்டாளர்களும் , வர்த்தகர்களும் எச்சரிக்கையோடு காத்திருப்பதே இன்றைய சுணக்கத்திற்கு காரணம்.

இன்றைய வர்த்தகத்தில் டாட்டா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப் , ஹிண்டால்கோ, ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், ICICI போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும், ONGC , ரிலையன்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், NTPC மற்றும் SBI நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின. கடந்த இரண்டு மாதங்களில் பண வீக்கம் சற்றே குறைந்திருப்பதால் நாளைய ரிசர்வ் வங்கி அறிக்கையில் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்று பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ரிசர்வ் வங்கி அறிக்கை சாதகமாக அமையும் பட்சத்தில் பங்குச் சந்தையில் நல்ல ஏற்றம் காணப்படலாம் என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

இன்றைய வர்த்தகத்தில் மும்பைப் பங்குச் சந்தையில் 1578 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் 1351 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் முடிவடைந்தன.
நாளைய வர்த்தகம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். முக்கியமாக வங்கித்துறை பங்குகளில் பெரிய ஏற்ற இறக்கங்கள் காணப்படலாம்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...