???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிப்.27 - பங்குச்சந்தை

Posted : புதன்கிழமை,   பிப்ரவரி   27 , 2013  05:53:31 IST

நேற்று பாதகமான ரயில்வே பட்ஜெட் காரணமாக பாதாள சரிவுடன் முடிவடைந்த இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று இழப்பை சற்று ஈடுகட்டி உயர்ந்தன. 2013-2014ஆம் நிதி ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 6.1 முதல் 6.7 சதவிகிதம் வரை உயரலாம் என்ற செய்தியைத் தொடர்ந்து சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி சரசரவென உயர்ந்தன. சென்செக்ஸ் 137 புள்ளிகள் உயர்ந்து 19152லும் நிப்டி 35 புள்ளிகள் உயர்ந்து 5797லும் முடிவடைந்தன.

 
இன்றைய வர்த்தகத்தில் ஏர்டெல், L & T, M & M , ONGC , பஜாஜ் ஆட்டோ நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் Gail , இன்போசிஸ், டாட்டா மோட்டார்ஸ், Coal India மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனப் பங்குகள்  விலை குறைந்தும் முடிவடைந்தன. Mid-Cap என்று சொல்லப்படும் மத்தியதர  சிலவற்றின் பங்குகள் இன்றும் குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் இல்லாமலே மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தன. இவற்றுள் Core Projects நிறுவனப் பங்குகள் 42.3 சதவிகிதம் சரிந்தன. மேலும் One Life Capital, PG Electroplast , Gravita India, ஹிந்துஸ்தான் டின் போன்ற நிறுவனப் பங்குகள் 15 முதல் 20 சதவிகிதம் வரை சரிந்தன. இதற்கான காரணங்களை ஆராய்வதில் SEBI முனைப்பு காட்டியுள்ளது. Core ப்ரோஜெக்ட்ஸ் நிறுவனப் பங்குகளின் விலை கடந்த சில தினங்களில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளன.
 
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 24 சதவிகித பங்குகளை அபுதாபியைச் சார்ந்த எட்டிஹாத் நிறுவனம் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையொப்பமானதைத் தொடர்ந்து ஜெட்  ஏர்வேஸ் நிறுவனப் பங்குகள்  20 சதவிகிதம் வரை உயர்ந்தன. இன்று 1442 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் 1357 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் 131 நிறுவனப் பங்குகள் விலையில் மாற்றங்கள் இல்லாமலும் முடிவடைந்தன. இதர ஆசியப் பங்குச் சந்தைகளும் இன்று உயர்வில் முடிவடைந்துள்ளன. ஐரோப்பியப் பங்குச்சந்தைகளும் உயர்வுடன் தொடங்கியுள்ளன.
 
யூனியன் பட்ஜெட் வெளியீடு மற்றும் பிப்ரவரி மாத Derivatives காலாவதியாகும் நாள் என்பதால் நாளை ( பிப்ரவரி 28 - 2013) வர்த்தகம் மிகவும் ஏற்றத் தாழ்வுகளுடன் இருக்கும் என நம்பப் படுகிறது.
 

English Summary
Sensex adds 137 points as FY14 growth estimate fuels confidence.

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...