???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிப்.26 - பங்குச்சந்தை

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   26 , 2013  07:41:01 IST

இன்று இந்தியப் பங்குச்சந்தைகள் மீண்டும் ஒரு பாதாள சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் 317 புள்ளிகள் குறைந்து 19015லும், நிப்டி 93 புள்ளிகள் குறைந்து 5761லும் முடிவடைந்தன.சென்செக்ஸ் அதிகபட்சமாக 19293ஐயும் குறைந்தபட்சமாக 18976ஐயும் தொட்டது. நிப்டி அதிகபட்சமாக 5838ஐயும் குறைந்தபட்சமாக 5748ஐயும் தொட்டது. நிப்டி 5800 என்ற ஆதாரத்தைத் தாண்டி முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

 
இன்று ரயில்வே அமைச்சர் திரு.பவன் குமார் பன்சால் வெளியிட்ட ரயில்வே பட்ஜெட் எந்த விதத்திலும் முதலீட்டாளர்களுக்கும் பங்குச்சந்தைகளுக்கும் சாதகமாக அமையாதது இன்றைய சரிவுக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. இந்த பாதாள சரிவு, பங்குச்சந்தைகள் கரடிகளின் ஆதிக்கத்திற்குள் வந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்துகிறது. வரும் நாட்களில் நிப்டி மேலும் 100 முதல் 150 புள்ளிகள் வரை குறைந்து 5650 வரை சரியலாம் என்று நம்பப்படுகிறது. பிப்ரவரி 28ஆம் தேதி வெளிவரவிருக்கும் யூனியன் பட்ஜெட் சாதகமாக அமையாத பட்சத்தில் பங்குச்சந்தைகளின் உயர்வுக்கு உடனடியான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை.
 
இன்றைய வர்த்தகத்தில் ரயில்வே துறை சார்ந்த நிறுவனங்கள் பெரும் சரிவைச் சந்தித்தன. ஸ்டோன் இந்தியா நிறுவனப் பங்குகள் 16 சதவிகிதமும், Texmaco நிறுவனப் பங்குகள் 11 சதவிகிதமும், Kalindee Rail Nirmaan 11 சதவிகிதமும், Tittagarh Wagons 8 சதவிகிதமும் சரிந்தன. TCS , இன்போசிஸ், ஏர்டெல், NTPC மற்றும் Grasim நிறுவனப் பண்ப்குகள் விலை உயர்ந்தும் ரிலையன்ஸ், விப்ரோ, சன் பார்மா, SBI மற்றும் ICICI  நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் முடிவடைந்தன. ரான்பாக்சி மற்றும் பாண்டலூம் ரீடெயில் நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு நிதி அறிக்கை எதிர்பார்ப்பை மீறிய நஷ்டத்தைக் காட்டியதால் அந்நிறுவனப் பங்குகள் சுமார் 4 சதவிகிதம் வரை குறைந்தன.
 
இன்று மும்பைப் பங்குச்சந்தையில் 2071 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும், 775 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும், 115 நிறுவனப் பங்குகள் விலையில் மாற்றங்கள் ஏதுமில்லாமலும் முடிவடைந்தன. இதர ஆசியப் பங்குச்சந்தைகளும் இன்று சரிவிலேயே முடிவடைந்தன. மதிய நிலவரப்படி ஐரோப்பியப் பங்குச்சந்தைகளும் சரிவுடனே தொடங்கியுள்ளன.
 
 

English Summary
It was a terrible trading session on Tuesday as the Indian equity market went off-track.

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...