???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம் 0 ஓ.டி.டி-யில் வெளியாகிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’? 0 மராட்டிய எம்.எல்.ஏ பாரத் பால்கே காலமானார்! 0 மக்களுக்கு எரிவாயு மானியத்தில் தடையிருக்காது – அமைச்சர் தர்மேந்திர பிரதான் 0 மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை 0 வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது 0 நிவர் புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி 0 லக்ஷ்மி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் 0 திருவண்ணாமலைக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழைவதற்குத் தடை! 0 மு.க.ஸ்டாலினுக்கு பாராட்ட மனமில்லை: அமைச்சர் ஜெயக்குமார் 0 மருத்துவம் - காவல்துறைக்குச் சங்கம் தேவையில்லை: உயர்நீதிமன்றம் 0 ஒ.பி.சி இடஒதுக்கீடு: மத்திய-மாநில அரசுகள் மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் 0 பொதுப்பிரிவினருக்கு நவம்பர் 30 முதல் மருத்துவ கலந்தாய்வு 0 முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி! 0 இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

’தீபாவளிக்கு 25,000 டன் வெங்காயம் இறக்குமதி’ – பியூஷ் கோயல்

Posted : சனிக்கிழமை,   அக்டோபர்   31 , 2020  01:42:44 IST

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக, வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு வரும் சூழலில், தீபாவளிக்கு முன்பு 25,000 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என்று பியூஷ் கோயல் கூறியுள்ளார்.  

மத்திய நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி பியூஷ் கோயல், வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

அப்போது அவர், “வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தக்க சமயத்தில் ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இறக்குமதிக்கான ஏற்பாடுகளை செய்து இறக்குமதிக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது. எகிப்து, ஆப்கானிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து தனியார் வர்த்தகர்கள் இதுவரை 7 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளனர். மேலும் 25 ஆயிரம் டன் வெங்காயம், தீபாவளிக்கு முன்பு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விலை கட்டுப்பாட்டுக்குள் வரும்.

மத்திய தொகுப்பில் உள்ள வெங்காயத்தை வெளிச்சந்தைக்கு அனுப்பி வருகிறது. பதுக்கலை கட்டுப்படுத்த வியாபாரிகள் வெங்காயத்தை இருப்பு வைப்பதற்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, கடந்த 3 நாட்களாக வெங்காயத்தின் சில்லரை விலை கிலோ ரூ.65 என்ற ஸ்திரமான நிலையை அடைந்துள்ளது. இதுபோல், சில நாட்களாக உருளைக்கிழங்கின் விலையும் உயர்ந்து வருகிறது. எனவே, உருளைக்கிழங்கையும் மத்திய அரசு இறக்குமதி செய்கிறது. இன்னும் 2 நாட்களில் பூடானில் இருந்து 30 ஆயிரம் டன் உருளைக்கிழங்கு வந்து சேரும். இன்னும் 10 லட்சம் டன் உருளைக்கிழங்கை இறக்குமதி செய்யப்போகிறோம். இதனால் அதன் விலையும் கட்டுப்பாட்டுக்குள் வரும்.” என தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...