???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0  74வது சுதந்திர தினம்: குடியரசுத் தலைவர் வாழ்த்து  0 இ-பாஸ் முறையை முழுமையாக அகற்ற வேண்டும்: ஸ்டாலின்  0 நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி  0 2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க சி.பி.ஐ. மனு 0 ஆளுநர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் 0 தமிழகத்தில் ஒரேநாளில் 5,890 பேருக்கு கொரோனா 0 தமிழகம்: 5,835 பேருக்கு புதிதாக கொரோனா; 119 பேர் பலி 0 கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்: கு.க. செல்வம் 0 உடுமலை சங்கர் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு 0 நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது: தேசிய தேர்வு முகமை 0 ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே: ஓ.பி.எஸ் அறிவுரை 0 மக்களுக்கு புரியும் மாநில மொழிகளில் EIA 2020 வரைவை வெளியிடுங்கள்: பார்வதி 0 1947லிருந்து நாடு காணாத சரிவு காணலாம்: இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி 0 எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர்: ஆர்.பி.உதயகுமார் 0 ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்தல்ல: ஜெயக்குமார்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மார்ச்.25 - பங்குச்சந்தை

Posted : திங்கட்கிழமை,   மார்ச்   25 , 2013  07:50:52 IST

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று காலையில் சென்செக்ஸ் 148 புள்ளிகள் உயர்ந்தும் , நிப்டி 54 புள்ளிகள் உயர்ந்தும் தொடங்கியபோதிலும் பிற்பகுதியில் அந்த உயர்வைத் தக்கவைத்துக்கொள்ள இயலாமல் பங்குச்சந்தைகள் சரியத் தொடங்கின. வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 54 புள்ளிகள் குறைந்து 18681லும் நிப்டி 16 புள்ளிகள் குறைந்து 5635லும் முடிவடைந்தன.சென்செக்ஸ் அதிகபட்சமாக 18950ஐயும் குறைந்தபட்சமாக 18654ஐயும் தொட்டது. நிப்டி அதிகபட்சமாக 5718ஐயும் குறைந்தபட்சமாக 5624ஐயும் தொட்டது.

ஏற்கனவே மத்தியில் ஆட்சி புரியும் ஐக்கிய முன்னணி கூட்டணியிலிருந்து தி.மு.க. விலகிவிட்ட நிலையில் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி ஜனதா கட்சியும் கூட்டணியிலிருந்து கழன்று கொள்ளலாம் என்று வெளியான செய்தியை அடுத்து பங்குச்சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி சரசரவென சரியத் துவங்கின. இதர ஆசியப் பங்குச்சந்தைகளும் , சைப்ரசில் பிரச்சினைகள் அகன்று சாதகமான சூழ்நிலை நிலவுவதால் ஐரோப்பியப் பங்குச்சந்தைகளும் ஏற்றத்துடன்  காணப்பட்டாலும், இந்திய அரசியலில் நிலவும் நிச்சயமற்ற தன்மைதான் பங்குச்சந்தைகளின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது. இன்றைய வர்த்தகத்தில் ONGC , NTPC , HDFC , Dr. Reddy Labs, மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும், ஹீரோ மோட்டோகார்ப் ,டாட்டா ஸ்டீல், L & T ,ஏர்டெல் , GAIL நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் முடிவடைந்தன.

டீசல் விலை 1 சதவிகிதம் உயர்த்தப்பட்டதால் எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை நிறுவனங்களில் பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டன. ரியல் எஸ்டேட் திருத்த மசோதா குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் , கவர்ச்சியான மக்களை ஏமாற்றும் விளம்பரங்கள் மூலமாக லாபம் சம்பாதிக்கும் ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர்களுக்கு சிறைத் தண்டனை வழங்குவது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்றும் வந்த செய்தியை அடுத்து ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்குகளும் விலை உயர்ந்து விற்பனையாயின. DLF நிறுவனப் பங்குகள் ஒரே நாளில் 5 சதவிகிதம் உயர்ந்து முடிவடைந்தன. இன்று மும்பைப் பங்குச்சந்தையில் 1885 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும், 1025 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும், 124 நிறுவனப் பங்குகள் விலையில் மாற்றங்கள் இல்லாமலும் முடிவடைந்தன.


English Summary
Indian equities ended flat with negative bias on Monday on concern Samajwadi Party may withdraw support to UPA government.

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...