???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிப்.25 - பங்குச்சந்தை

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   25 , 2013  05:36:54 IST

வாரத்தின் முதல் நாளான இன்று சற்று உயர்வுடனே துவங்கிய பங்குச்சந்தைகள் பிற்பகுதியில் சரிந்து பெரிய மாற்றங்கள் ஏதுமில்லாமல் முடிவடைந்தன. சென்செக்ஸ் 14 புள்ளிகள் உயர்ந்து 19331ல் முடிவடைந்தது. இது அதிகபட்சமாக 19411ஐயும், குறைந்த பட்சமாக 19237ஐயும் தொட்டது. நிப்டி 4 புள்ளிகள் மட்டும் உயர்ந்து 5854ல் முடிவடைந்தது. இது அதிகபட்சமாக 5878ஐயும், குறைந்த பட்சமாக 5825ஐயும் தொட்டது.

மென்பொருள் நிறுவனப் பங்குகள் பொதுவாக உயர்வில் முடிந்தன. அதே சமயத்தில் ரியாலிட்டி நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தன. இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ், விப்ரோ, TCS, ICICI, பஜாஜ் ஆட்டோ, சன் பார்மா நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும் ரிலையன்ஸ், ஏர்டெல்,ONGC, ஹீரோ மோட்டோகார்ப், Coal India, ITC மற்றும் சிப்லா நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் முடிவடைந்தன.

மத்தியதர (Midcap) மற்றும் சிறிய நிறுவனங்களின் பங்குகள் எதிர்பாராத ரீதியில் மிகவும் குறைந்தன. Core Projects நிறுவனத்தின் பங்குகள் இன்று ஒரே நாளில் 63 சதவிகிதம் குறைந்தது. அதேபோல் Welspun Corp நிறுவனம் 17.5 சதவிகிதமும், ABG Shipping நிறுவனம் 20 சதவிகிதமும் குறைந்தன.DB  ரியாலிட்டி நிறுவனப் பங்குகள் 10 சதவிகிதம் குறைந்தன. இந்த எதிர்பாராத சரிவுக்கு குறிப்பிட்டு சொல்லும்படியான காரணம் எதுவும் தெரியவில்லை.

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் "டாட்டா நானோ" வைத் தொடர்ந்து மேலும் ஒரு குறைந்த விலை கார் அறிமுகப்படுத்தப் போகிறது என்ற செய்தியைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் பங்குகள் 2 சதவிகிதம் உயர்ந்தன. ரான்பாக்சி நிறுவனம் கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தும் மருந்தான Atorvastatin-ஐ மீண்டும் உற்பத்தி செய்ய துவங்கும் என்ற செய்தியை தொடர்ந்து அந்நிறுவனப் பங்குகள் 5 சதவிகிதம் வரை விலை உயர்ந்தன.

மும்பைப் பங்குச்சந்தையில் இன்று 1252 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும், 895 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும், 797 நிறுவனப் பங்குகள் விலையில் மாற்றங்கள் இல்லாமலும் முடிந்தன. மற்ற ஆசியப் பங்குச் சந்தைகளும் இன்று உயர்வுடனே முடிவடைந்தன. மதிய நிலவரப்படி ஐரோப்பிய சந்தைகளும் உயர்வுடன் துவங்கியுள்ளன.


English Summary
The Indian equity market once again ended unchanged on Monday

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...