???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜன.25 - பங்குச் சந்தை

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   25 , 2013  05:36:31 IST

நேற்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் லாப நோக்கம் கருதி வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றுத் தள்ளியதால் சென்செக்ஸ் மற்றும் நிப்டி பெரிய சரிவுடன் முடிவடைந்தன. ஆனால் இன்றைய வர்த்தகத்தில் நேற்றைய சரிவை ஈடுகட்டியது மட்டுமில்லாமல் சென்செக்ஸ் 180 புள்ளிகள் உயர்ந்து 20103லும், நிப்டி 55 புள்ளிகள் உயர்ந்து 6074லும் முடிவடைந்தன. மொத்தத்தில் ஏற்ற இறக்கங்கள் அதிகமாகக் காணப்பட்டாலும், சந்தை இன்னும் காளைகளின் பிடியிலேயே உள்ளன என்பதை தொடர்ச்சியாக 20000க்கு மேல் நிலை பெற்றிருக்கும் சென்செக்ஸ்-ம், 6000க்கு மேல் நிலைப் பட்டிருக்கும் நிப்டியும் உறுதி செய்கின்றன.

உலக அளவில் மற்ற நாடுகளில் நிலவும் சாதகமான பொருளாதார நிலைமை, மற்றும் பெரும்பாலான நிறுவனங்களின் எதிர்பார்ப்பை மீறிய மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கை, தொடர்ந்து குவியும் அந்நிய முதலீடுகள் போன்றவை சந்தையை இன்னும் உயரத்துக்கு தூக்கிச் செல்ல வாய்ப்புகள் உள்ளன என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இன்றைய வர்த்தகத்தில் மாருதி சுஷூக்கி, பஜாஜ் ஆட்டோ, ஜிண்டால் ஸ்டீல், M &M மற்றும் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும், டாட்டா பவர், Coal India, NTPC , ஹீரோ மோட்டோகார்ப் , மற்றும் ஏர்டெல் நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின. மாருதி சுஷுகியின் மூன்றாம் காலாண்டு நிதி அறிக்கை காட்டிய எதிர்பார்ப்பை மிஞ்சிய லாபம் அந்த நிறுவனப் பங்குகளின் விலையை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றது.

மும்பைப் பங்குச்சந்தையில் 1690 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும், 1245 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின. Housing Developement &Infrastructure நிறுவனப் பங்குகள் மொத்தத்தில் 201 கோடி ரூபாய்க்கு வர்த்தகமாயின. இதனைத் தொடர்ந்து SBI மற்றும் ஜெட் ஏர்வேஸ் பங்குகள் சுமார் 72 கோடி ரூபாய்களுக்கும் வர்த்தகமாயின. Suzlon , யூனிடெக் மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனப் பங்குகள் அதிக எண்ணிக்கையிலும் வர்த்தகமாயின.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...