???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை 0 பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் 0 பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு! 0 பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு 0 ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி 0 தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் 0 மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

24 மணிநேரம் கடை திறப்புக்கு ஏஐடியூசி எதிர்ப்பு

Posted : சனிக்கிழமை,   ஜுன்   08 , 2019  06:09:38 IST


Andhimazhai Image
24 மணிநேரமும் கடைகள் திறந்துவைத்தால் சிறுதொழில் முனைவோர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஊழியர்களின் நிலை மிகவும் மோசமாகும் என்று ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி  தெரிவித்துள்ளார். 
 
இந்த சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:
 
 
கடைகளை 24 மணிநேரமும் திறந்து வைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தொழில் வளர்ச்சியையும், வேலை வாய்ப்பையும் அதிகரிப்பதற்காக இந்த நடவடிக்கை என்று அரசு அறிவிப்பு கூறுகிறது. 
 
 
ஆனால் உண்மையில் பெருமுதலாளிகளின் மால்கள், சூப்பர் மார்க்கெட்டுகளில் பணிபுரியும் தொழிலாளர்களும், சில்லரை வணிகர்களும் இதனால் கடுமையாகப் பாதிக்கப் படுவார்கள்.
 
 
தமிழ்நாட்டில், கடை உரிமையாளர் உள்ளிட்ட ஓரிரு பணியாளர்கள் கொண்ட கடைகள்தான் லட்சக்கணக்கில் உள்ளன. மற்ற கடைகளில்
 
பெரும்பாலானவை பத்துக்கும் குறைவான பணியாளர்களைக் கொண்டவையே. மேலும் இவையனைத்தும், மளிகை, ஹார்ட்வேர், எழுதுபொருள், தேநீர் திண்பண்டங்கள் உள்ளிட்ட  குறிப்பிட்ட வகைப் பொருட்களையே விற்பனை செய்பவையாகும். சிறிய நடுத்தர உணவகங்கள், சலவை நிலையம், நகலகங்கள், முடிதிருத்தகம் போன்ற சேவைக் கடைகளும் உண்டு. இவற்றை விடியவிடிய திறந்து வைத்தால், போதிய எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் வரமாட்டார்கள். அதனால் வரும் வருமானத்தை விட செலவே மிக அதிகமாக இருக்கும். 
 
 
ஆனால்  மிகப் பெரிய மால்கள், சூப்பர் மார்க்கெட்டுகளில் எல்லாவகையான பொருட்களும் விற்கப்படுவதால் நள்ளிரவிலும் வாடிக்கையாளர்கள் ஈர்க்கப்படுவார்கள். ஏற்கனவே ஒரு இடத்தில் மால் கட்டினால் சுற்றியுள்ள ஆயிரக் கணக்கான கடைகளில் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. அவற்றை வருடம் முழுவதும் திறந்தே வைத்திருக்க அனுமதிப்பது, வணிகத்தை முழுக்கப் பெருமுதலாளிகளிடம் ஒப்படைத்து விட்டு,  லட்சக் கணக்கான சில்லரை வணிகர்களை வயிற்றிலடித்து அவர்களின் குடும்பங்களைப் பட்டினி போடுவதாகும்.
 
 
இரவு நேரத்தில் பணியாளர்களை ஈடுபடுத்துவதற்கு பல நிபந்தனைகளை விதிப்பதாக அரசு கூறுகிறது. இப்போதே அந்த பெருவியாபார நிறுவனங்களில் எந்தச் சட்டமும் அமுலாவதில்லை.  இந்த நிறுவனங்களில் நடைபெறும் சட்டமீறல்கள், இழைக்கப்படும் மனிதநேயமற்ற கொடுமைகள் ஆகியவற்றில் சிலவற்றை  "அங்காடித் தெரு" என்ற திரைப்படம் வெளிப்படுத்தியது. 
 
இரவு 8 மணியிலிருந்து காலை 6 மணிவரை பெண் பணியாளர்களை வேலையில் ஈடுபடுத்தக் கூடாதாம். ஆனால் அந்தப் பெண் கையெழுத்திட்டு ஒப்புதல் தந்தால் பணிபுரியலாமாம். என்ன கேலிக் கூத்து இது? கையெழுத்திட எந்தப் பெண் பணியாளராவது மறுத்தால், அந்த நிமிடமே அவரது வேலை பறிபோய்விடும். அரசின் நிபந்தனைகள் காகிதத்தில் இருக்கலாம். அவற்றை  அமுலாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வழியில்லை. 
 
 
கடைகள் மற்றும் நிறுவனச் சட்டத்தை இவ்வாறு  திருத்துமாறு,  2016ம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே மத்திய அரசு வலியுறுத்தியது. சில மாநில அரசுகள் திருத்தின. ஆனால் அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள் ஏற்கவில்லை. 'அம்மாவின் அரசு' என்று வாய்க்கு வாய் சொல்பவர்கள், அம்மா எதிர்த்த ஒன்றை இப்போது அமுலாக்குவது கண்டனத்துக்குரியது.
 
 
கார்ப்பரேட்டுகள், பெருவணிகர்கள், பெரும் கடைகளை நடத்தும்  மார்வாரிகளுக்கு கொள்ளை லாபத்தைத் தந்து, உள்ளூர் சில்லரை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் இந்தத் திருத்தத்தை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும் என்று ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...