???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0  74வது சுதந்திர தினம்: குடியரசுத் தலைவர் வாழ்த்து  0 இ-பாஸ் முறையை முழுமையாக அகற்ற வேண்டும்: ஸ்டாலின்  0 நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி  0 2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க சி.பி.ஐ. மனு 0 ஆளுநர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் 0 தமிழகத்தில் ஒரேநாளில் 5,890 பேருக்கு கொரோனா 0 தமிழகம்: 5,835 பேருக்கு புதிதாக கொரோனா; 119 பேர் பலி 0 கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்: கு.க. செல்வம் 0 உடுமலை சங்கர் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு 0 நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது: தேசிய தேர்வு முகமை 0 ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே: ஓ.பி.எஸ் அறிவுரை 0 மக்களுக்கு புரியும் மாநில மொழிகளில் EIA 2020 வரைவை வெளியிடுங்கள்: பார்வதி 0 1947லிருந்து நாடு காணாத சரிவு காணலாம்: இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி 0 எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர்: ஆர்.பி.உதயகுமார் 0 ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்தல்ல: ஜெயக்குமார்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மார்ச்.22 - பங்குச்சந்தை

Posted : வெள்ளிக்கிழமை,   மார்ச்   22 , 2013  08:05:19 IST

இன்று காலையில் சற்று உயர்வுடன் தொடங்கிய இந்தியப் பங்குச்சந்தைகள் அதன்பின் ஒரு குறுகிய எல்ல்லைக்குள் ஊசலாடத் தொடங்கின. பிற்பகலில் நிப்டி உயர்ந்து 5700க்கு சமீபமாகச் சென்றது அனைவரது மனத்திலும் நம்பிக்கையை விதைத்தது. இந்த நம்பிக்கையைச் சிதைக்கும் விதமாக கடைசி ஒரு மணி நேர வர்த்தகத்தில் பங்குச்சந்தைக் குறியீடுகள் சரிந்து தொடர்ச்சியான ஆறாவது நாளாக இன்றும் வீழ்ச்சியில் முடிந்தன. சென்செக்ஸ் 57 புள்ளிகள் குறைந்து 18735லும், நிப்டி 7 புள்ளிகள் குறைந்து 5651லும் முடிவடைந்தன. சென்செக்ஸ் இன்று அதிகபட்சமாக 18859ஐயும் குறைந்தபட்சமாக 18669ஐயும் தொட்டது. நிப்டி அதிகபட்சமாக 5691ஐயும் குறைந்தபட்சமாக 5631ஐயும் தொட்டது.

இன்றைய வர்த்தகத்தில் பஜாஜ் ஆட்டோ, ஜிண்டால் ஸ்டீல், ஹீரோ மோட்டோகார்ப் , ஹிண்டால்கோ மற்றும் டாட்டா பவர்ஸ் நிறுவனங்கள் விலை உயர்ந்தும் SBI , டாட்டா ஸ்டீல், சன் பார்மா,ஏர்டெல் மற்றும் TCS நிறுவனங்கள் விலை சரிந்தும் முடிவடைந்தன. அரசியல் ரீதியாக கடந்த சில தினங்களாக நிலவும் ஒரு நிச்சயமற்ற தன்மை மற்றும் கடந்த எட்டு மாதங்களாக சந்தையின் உயர்வுக்குக் காரணமாக அமைந்த அந்நிய முதலீட்டு நிதி நிறுவனங்களின் வருங்கால நடவடிக்கை குறித்த தெளிவற்ற நிலை ஆகியவை பங்குச்சந்தைகளின் சமீபத்திய சரிவுக்கு காரணங்களாக சொல்லப் படுகின்றன.

அடுத்த வாரம் ஹோலிப்பண்டிகை மற்றும் புனித வெள்ளியை ஒட்டி வரும் விடுமுறை நாட்கள் , டெரிவேடிவ்ஸ் காலாவதியாகும் கடைசி வியாழக்கிழமை என்று அனைத்தும் பங்கு வர்த்தகர்களின் மனதில் ஒரு எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியுள்ளதால் சந்தையின் போக்கு கணிக்க முடியாதபடி மேலும் கீழுமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இன்றைய வர்த்தகத்தில் 1881 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும், 985 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் 111 நிறுவனங்களின் பங்குகள் விலையில் மாற்றங்கள் இல்லாமலும் முடிந்தன


English Summary
Indian equities settled lower amid volatility on Friday due to subdued global cues

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...