???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிப்.22 - பங்குச்சந்தை

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   22 , 2013  06:35:58 IST

நேற்று பாதாள சரிவுடன் முடிவடைந்த இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று மிகச் சிறிய சரிவுடன் முடிந்தன.சென்செக்ஸ் 8 வ்புள்ளிகள் குறைந்து 19317லும், நிப்டி 2 புள்ளிகள் குறைந்து 5850லும் முடிவடைந்தன. பிப்ரவரி 28ஆம் தேதி வெளிவரவிருக்கும் யூனியன் பட்ஜெட் குறித்து நிச்சயமற்ற சூழ்நிலை நிலவுவதால் பங்குச்சந்தைகளின் போக்கு கணிக்க முடியாமலும், ஒரு குறுகிய எல்லைக்குள்ளும்தான் இருக்கும் எனத் தெரிகிறது.

இன்றைய வர்த்தகத்தில் ஏர்டெல், விப்ரோ, சன்  பார்மா, ICICI மற்றும் இன்போசிஸ் நிறுவனப் பங்குகள்  உயர்ந்தும் ஹிந்துஸ்தான் யூனிலிவர், Coal India , மாருதி சுசுகி, HDFC மற்றும் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் முடிவடைந்தன. ஜெட் ஏர்வேஸ் மற்றும் அபுதாபியைச் சார்ந்த எட்டிஹாத் நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் நிறைவேறுவதில் சற்று குழப்பங்கள் ஏற்பட்டதால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனப் பங்குகள் இன்று ஒரே நாளில் 5 சதவிகிதம் குறைந்தன. கடந்த சில நாட்களாகவே இந்நிறுவனப் பங்குகள் ஏற்றத் தாழ்வுகளுடன் வர்த்தகமாவது குறிப்பிடத்தக்கது.

மும்பைப் பங்குச்சந்தையில் 1015 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும், 1055 நிருவனப் பங்குகள் விலை குறைந்தும் 924 நிறுவனப் பங்குகள் விலையில் பெரிதும் மாற்றமில்லாமலும் முடிவடைந்தன. இன்று இதர ஆசிய நாடுகளின் பங்குச்சந்தைகள் சற்றே உயர்வுடன் முடிவடைந்தன. மதிய நிலவரப்படி ஐரோப்பிய சந்தைகளும் உயர்வுடன் தொடங்கியுள்ளன.


English Summary
Indian equities ended the listless session on flat note on Friday. Realty and technology stocks traded higher while FMCG stocks were under pressure.

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...