???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சப்- இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை: மூளையாக செயல்பட்டவர் கைது 0 சட்டப்பேரவையை விட உயர்ந்தோர் யாருமில்லை: கேரள ஆளுநருக்கு பினராயி பதிலடி 0 நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை தேதி மாற்றம் 0 பாரத ரத்னா விருதைவிட மகாத்மா உயர்ந்தவர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 0 எம்.ஜி.ஆர்.வேடத்தில் அரவிந்த் சாமி: ஆச்சரியமடைந்த ரசிகர்கள் 0 பெரியாரை அவதூறாக பேசியதாக ரஜினி மீது குற்றச்சாட்டு! 0 திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி 0 நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு! 0 உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் 0 நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை 0 பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி! 0 பாஜக தலைவராகிறார் ஜே.பி.நட்டா! 0 விலங்கோடு மக்கள் அனையர்:கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1 0 பிரியா பவானி சங்கருடன் காதலா? கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா 0 நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ராஜஸ்தானை தொடர்ந்து குஜராத்தில் அச்சுறுத்தும் குழந்தைகள் இறப்பு

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   06 , 2020  05:59:43 IST


Andhimazhai Image
ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் உள்ள கே.ஜே லோன் மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 200-க்கும் மேற்பட்ட பிறந்த பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தன. இந்த சம்பவத்தின் அதிர்ச்சியே நீங்காத நிலையில், குஜராத்திலும் இதேபோன்ற சம்பவம் நடந்தது தெரியவந்திருக்கிறது.
 
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மற்றும் அஹமதாபாத் அரசு மருத்துவமனைகளிலும் கடந்த டிசம்பர் மாதம் 219 குழந்தைகள் உயிரிழந்திருக்கின்றன. அனைவரையும் அதிர்ச்சியில் உறையவைக்கும் இந்த செய்தி தாமதமாகவே வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.குஜராத்தின் மிகப் பெரிய அரசு மருத்துவமனையான ராஜ்கோட் பொது மருத்துவமனையில் மட்டும் கடந்த மூன்று மாதங்களில் 253 குழந்தைகள் உயிரிழந்திருக்கின்றன. 
 
குழந்தைகள் இறப்பு பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அஹமதாபாத் பொது மருத்துவமனையின் கண்காணிப்பாளர், “கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சுமார் 455 புதிதாய் பிறந்த குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டன. இதில் 85 குழந்தைகள் உயிரிழந்தன. வழக்கமாக இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சுமார் 400 குழந்தைகளில் 20% உயிரிழப்பு ஏற்படுகிறது. 
 
மருத்துவமனையில் சிசிச்சை, வசதி குறைபாடு கிடையாது. தனியார் மருத்துவமனைகள், குழந்தைகளை ஆபத்தான நிலைமையில் அரசு மருத்துவமனைக்கு அனுப்புகின்றன. இதில் 80% குழந்தைகள் சிறந்த சிகிச்சை பெற்று திரும்புகின்றன” என்று கூறியிருக்கிறார்.
 
ஆனால், பெற்றோர்கள் தரப்பில் மருத்துவமனை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. உரிய மருத்துவர்களும், வசதிகளும் இல்லாததோடு, அலட்சியமும் இந்த உயிரிழப்புக்கு முக்கிய காரணமென அவர்கள் கூறுகிறார்கள்.
 
ராஜ்கோட் அரசு பொது மருத்துவமனையின் தலைவர் மனிஷ் மேத்தா, கடந்த டிசம்பர் மாதம் மட்டும் அங்கு 111 குழந்தைகள் உயிரிழந்ததை உறுதி செய்திருக்கிறார். 2019-இல் மொத்தமாக அந்த மருத்துவமனையில் 1,235 குழந்தைகள் உயிரிழந்ததிருப்பதாக சொல்லும் அவர், இதில் டிசம்பரில் தான் உயிரிழப்பு விகிதம் அதிகம் என்கிறார்.
 
குஜராத் மருத்துவமனைகளில் நடந்திருக்கும் குழந்தைகளின் அசாதாரண உயிரிழப்பு குறித்து செய்தியாளர்கள் அம்மாநில முதல்வர் விஜய் ரூப்பானியிடம் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளிக்காமல் அவர் நழுவி செல்லும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
 
குழந்தைகள் உயிரிழப்புக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. எனினும், மருத்துவ பணியாளர்களின் பற்றாக்குறை, ஆரம்ப சுகாதார சேவைகளில் இருக்கும் குறைபாடு இதில் முக்கிய பங்கு வகிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
இதுகுறித்து குஜராத் மாநில சுகாதார அமைச்சர் கூறுகையில், “ஆண்டுதோறும் மாநிலத்தில் 12 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இதில் ஆயிரத்துக்கு/முப்பது எனும் விகிதாச்சாரத்தில் இறப்பு ஏற்படுகிறது. ஊட்டச்சத்து குறைபாடு, குறைப் பிரசவம், உரிய நேரத்தில் பிரசவத்திற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படாதது இதற்கு காரணமாக இருக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...