செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் 21 மசோதாக்கள்: அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம்…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் 21 மசோதாக்கள்: அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
Posted : வெள்ளிக்கிழமை, டிசம்பர் 02 , 2022 09:29:31 IST
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி, ஆன்லைன் ரம்மி தடை மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காத நிலையில், அவசர சட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலாவதியானது. இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழ்நாட்டில் 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், மசோதா குறித்து ஆளுநரிடம் மீண்டும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ரகுபதி, ஆளுநரின் ஒப்புதலுக்காக இன்னும் 21 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாகவும், ஆளுநர் ஒப்புதல் அளித்தால், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உடனடியாக அமலுக்கு வரும் என்றும் குறிப்பிட்டார்.
|