செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன!
இந்தியா - ரஷியா இடையிலான 21-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இந்தியாவிற்கு வந்தடைந்தார்.
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன!
Posted : திங்கட்கிழமை, டிசம்பர் 06 , 2021 18:04:10 IST
இந்தியா - ரஷியா இடையிலான 21-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இந்தியாவிற்கு வந்தடைந்தார்.
அரசுமுறைப் பயணமாக இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ள அவர், டெல்லியில் வந்திறங்கினார். இதனை அடுத்து அவர் ஹைதராபாத் இல்லத்திற்குச் செல்ல இருக்கிறார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு உச்சி மாநாடு நடக்காத நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாதிமீா் புதின் ஆகியோர் பங்கேற்கும் இரு நாடுகளிடையேயான உச்சி மாநாடு டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் இரு நாடுகளிடையேயான உறவு குறித்து தலைவர்கள் மறு ஆய்வு செய்ய உள்ளதோடு, இருதரப்பு ராணுவ உறவை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், விண்வெளி, ராணுவம், அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. கடந்த 2019 -ஆம் ஆண்டிற்கு பின் பிரதமர் மோடியை புதின் சந்திக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
|