???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை 0 பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் 0 பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு! 0 பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு 0 ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி 0 தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் 0 மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ராணுவம் நடத்திய தேர்தல்- பிடிபட்டான் உளவாளி

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   21 , 2013  12:07:18 IST


இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் இன்று நடந்த இலங்கை வடக்கு மாகாணத் தேர்தலில், சிங்கள ராணுவத்தின் கெடுபிடிக்குள்ளே, ராணுவ உளவாளிகளின் உதவியோடு, வாக்குப்பதிவைக் கெடுக்கும் காரியங்கள் அரங்கேற்றப்பட்டன.

 

முன்னதாக, யாழ்ப்பாணத்தில் காலையில் வாக்களித்துவிட்டு சாவடியை விட்டு வெளியே வந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வலிகாமம் பகுதியில் வாக்களிக்க வந்தவர்களைத் தடுத்து, ராணுவ உளவாளிகள் திருப்பியனுப்பியதாகத் தெரிவித்திருந்தார். 

 

இந்த நிலையில், யாழ்.தெல்லிப்பளை, கொல்லங்கட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள சைவ தமிழ் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியின் முன்பு, சிங்கள ராணுவ உளவாளிச் சேவகன் ஒருவன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் பிடிபட்டான். அந்த இளைஞனிடம், ஏன் அங்கு நிற்கிறீர்கள் என மாவை கேட்டதற்கும் மற்ற கேள்விகளுக்கும் அவன் பதில்கூறாமல், கையிலிருந்த தொலைபேசி மூலம், யாரிடமோ சிங்களத்தில் பேசினான். மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், சத்தமிட்டுக்கொண்டே வந்தபோதும், அங்கிருந்த சிங்களப் போலீசார், அலட்சியமாக அவரின் முறையீட்டைப் பெற்று, அவனிடம் விசாரித்தனர்.

 

முன்னதாக, வாக்களிப்பதற்காக, மாவை அங்கு சென்றுள்ளார். அப்போது, சந்தேகத்துக்கு இடமாக நடமாடிக்கொண்டு இருந்த அந்த இளைஞனிடம் அடையாள அட்டையைக் கேட்டபோதே, அவன் மறுத்துள்ளான். 25 வயதுக்குள்ளான தோற்றத்தில் இருக்கும் அந்த இளைஞன், சிங்கள ராணுவத்தின் உளவாளியாகச் செயற்படவே அங்கு நிற்கமுடியும் என்று ஈழத்தமிழ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...