???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை 0 பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் 0 பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு! 0 பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு 0 ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி 0 தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் 0 மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கை தேர்தல்- தமிழ் எம்.பி. மீது துப்பாக்கிச்சூடு

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   21 , 2013  11:18:51 IST

இலங்கையில் இன்று மாகாணசபைக்குத் தேர்தல் நடைபெற்றபோது, யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பயணித்த வேன் மீது சிங்களப்படையினர் 15 முறை துப்பாக்கியால் சுட்டனர். நல்லவேளையாக, இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. 

 

யாழ். தென்மராச்சி, வரணி பிரதேசத்தில் சிங்கள ராணுவப் புலனாய்வாளர்கள் நடமாடுவதாக வந்த தகவலின்பேரில், சுரேஷ் பிரேமச்சந்திரன், தன் ஆதரவாளர்களுடன் அங்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஆள் ஒருவர், வரணி பிரதேசத்திலிருந்து இராணுவ முகாமிற்குள் ஓடியுள்ளார். 

 

அவனைப் பின் தொடர்ந்து, இரண்டு வேன்களில் சென்ற சுரேஷ் தரப்பினர், திரும்பும்வழியில் சிங்கள ராணுவத்தினர் அவர்களுடைய வேனை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தினர். இதில், வேன் கண்ணாடிகள் உடைந்து வேன் சேதடைந்துள்ளன. இத்தாக்குதலால், வாக்குப்பதிவு முடங்கியதோடு, அங்கிருந்த கடைககள் அனைத்தும் மூடப்பட்டன.

வரணி மகா வித்தியாலய தேர்தல் வாக்குச் சாவடிக்கு முன்பாக, சுரேஷ் பயணித்த வேனுக்கும் ராணுவமுகாமுக்கும் இடையில் 100 மீட்டர் தொலைவில் இந்த சூட்டுத் தாக்குதல் நடந்துள்ளது, குறிப்பிடத்தக்கது. படையினர், 15 – 20 முறை துப்பாக்கியால் சுடப்பட்டதாக அங்கிருந்தவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர். 

 

வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் திரும்பிச் செல்லுமாறு போலீசார் மிரட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...