???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மார்ச்.21 - பங்குச்சந்தை

Posted : வியாழக்கிழமை,   மார்ச்   21 , 2013  08:36:00 IST

இன்று காலையில் வர்த்தக நேரத் துவக்கத்தில் சற்று உயர்வுடனே தொடங்கிய இந்தியப் பங்குச்சந்தைகள் பிற்பகுதியில் சரியத்துவங்கின. தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக சென்செக்ஸ் மற்றும் நிப்டி சரிவுடன் முடிந்துள்ளன. இன்று சென்செக்ஸ் 91 புள்ளிகள் குறைந்து 18792ல் முடிவடைந்தது.இது அதிகபட்சமாக 19082ஐயும் குறைந்தபட்சமாக 18756ஐயும் தொட்டது. நிப்டி 36 புள்ளிகள் குறைந்து 5659ல் முடிவடைந்தது. இது அதிகபட்சமாக 5757ஐயும் குறைந்த பட்சமாக 5647ஐயும் தொட்டது.

இன்றைய வர்த்தகத்தில் ரியாலிட்டி, பவர்,வாகனத்துறை, எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. ஏர்டெல், ICICI வங்கி, HDFC , ஜிண்டால் ஸ்டீல், விப்ரோ நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், பஜாஜ் ஆட்டோ,டாட்டா மோட்டார்ஸ், டாட்டா பவர்ஸ், HDFC வங்கி மற்றும் L &T நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் விற்பனையாகின.

ஏர்டெல் நிறுவனம் தனது 4G மொபைல் இணைய சேவையை இன்று சண்டிகாரில் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து அந்நிறுவனப் பங்குகள் 6 சதவிகிதம் வரை உயர்ந்து வர்த்தகமாயின. ஏர்டெல் நிறுவன அதிபர் திரு,சுனில் மிட்டலுக்கு நீதிமன்றம் சம்மன் பிறப்பித்ததைத் தொடர்ந்து சில நாட்களாக ஏர்டெல் நிறுவனப் பங்குகளின் விலை சரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது. சீனாவில் மாசுக் கட்டுப்பட்டு விதிமுறைகள் கடுமைப்படுத்தப்பட்டுள்ளதால் டாட்டா மோட்டர்சின் துணை நிறுவனமான Jaguar Land Rover நிறுவனத்தின் சொகுசு கார்கள் உற்பத்தி பாதிக்கப்படலாம் என்ற செய்தியைத் தொடர்ந்து டாட்டா மோட்டார்ஸ் நிறுவனப் பங்குகள் 4 சதவிகிதம் வரை விலை குறைந்தன.

இன்றைய வர்த்தகத்தில் 1922 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும்,946 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும், 119 நிறுவனப் பங்குகள் விலையில் மாற்றங்கள் இல்லாமலும் ,முடிவடைந்தன. இதர ஆசியப் பங்குச்சந்தைகளில் ஹாங்காங் தவிர இதர சந்தைகள் இன்று உயர்வுடன் முடிந்தன. மதிய நிலவரப்படி ஐரோப்பியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கியுள்ளன.


English Summary
Despite a positive start, the Indian equity market succumbed to intense selling towards the end recording its fifth straight dip

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...