???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிப்.21 - பங்குச்சந்தை

Posted : வியாழக்கிழமை,   பிப்ரவரி   21 , 2013  06:41:34 IST

கடந்த மூன்று தினங்களாக உயர்வுடன் முடிவடைந்த இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று பாதாளச் சரிவுடன் முடிந்தன. உலக அளவில் அனைத்துச் சந்தைகளிலும் காணப்பட்ட சரிவு இந்தியப் பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. சென்செக்ஸ் 317 புள்ளிகள் சரிந்து 19325லும் நிப்டி 91 புள்ளிகள் சரிந்து 5852லும் முடிவடைந்தன. இது 2013ஆம் ஆண்டின் மிகவும் குறைந்த மதிப்பாகும்.

அமெரிக்காவின் Federal Reserve தனது கொள்கைகளில் மேலும் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதால் உலக அளவில் பணப் புழக்கம் குறையும் என்ற அச்சமே அனைத்து நாடுகளிலும் பங்குச் சந்தைகளின் சரிவிற்கு முக்கியக் காரணம் என்று கருதப் படுகிறது. இந்தியப் பங்குச்சந்தைகளில் கடந்த சில மாதங்களாகவே அதிகரித்து வந்த அந்நிய நிதி நிறுவன முதலீடுகள் குறையலாம் என்றும், பங்குகளை விற்பதன் மூலம் முதலீடுகள் வெளியில் எடுக்கப்படலாம் என்றும் அதனால் பங்குச்சந்தைகள் மேலும் சரிவைச் சந்திக்க வாய்ப்புகள் உள்ளன என்றும் தெரிகிறது.

இன்றைய வர்த்தகத்தில் அனைத்து துறைகளைச் சார்ந்த நிறுவனங்களின் பங்குகளும் விலை குறைந்தே முடிந்தன. முக்கியமாக உலோகத்துறை, வங்கித்துறை மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை நிறுவனங்களின் பங்குகள் பாதாள வீழ்ச்சியைச் சந்தித்தன.ஜிண்டால் ஸ்டீல், டாட்டா ஸ்டீல், ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், ICICI வங்கி மற்றும் ஹிண்டால்கோ நிறுவனங்கள் சரிவில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்தன.

மொத்தத்தில் 913 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும், 1916 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும், 132 நிறுவனப் பங்குகள் விலையில் பெரிய மாற்றங்கள் இல்லாமலும் முடிவடைந்தன. சீனாவின் பங்குச்சந்தை மூன்று சதவிகித சரிவுடனும் , ஜப்பான்,ஹாங்காங் மற்றும் தைவான் பங்குச் சந்தைகள் 1.5 முதல் 2 சதவிகிதம் வரை சரிந்தும் முடிவடைந்தன. மதிய நிலவரப்படி ஐரோப்பியப் பங்குச்சந்தையும் சரிவுடனேயே துவங்கியுள்ளது.


English Summary
Indian markets plunged, snapping three day winning streak, on Thursday tracking global selloff

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...