![]() |
டிசம்பர் 15-க்குள் 2000 மினி கிளினிக் - முதல்வர் அறிவிப்புPosted : சனிக்கிழமை, நவம்பர் 28 , 2020 01:28:47 IST
தலா ஒரு மருத்துவர், செவிலியர், உதவியாளர் கொண்ட 2000 மினி கிளினிக் டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் தொடங்கப்படுமென முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அறிவித்திருக்கும் முதல்வர், “ஏழை, எளிய மக்களுக்காக தமிழகம் முழுவதும் தலா 1 மருத்துவர், 1 செவிலியர் மற்றும் 1 உதவியாளர் கொண்ட 2000 மினி கிளினிக் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முன்பே அறிவித்த நிலையில், வரும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் இந்த மினி கிளினிக் துவங்கப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
|
|