???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மார்ச்.20 - பங்குச்சந்தை

Posted : புதன்கிழமை,   மார்ச்   20 , 2013  09:24:11 IST

இந்த வாரத்தின் மூன்றாம் நாளான இன்றும் பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன. சென்செக்ஸ் 124 புள்ளிகள் குறைந்து 18884ல் முடிவடைந்தது. இது அதிகபட்சமாக 19028ஐயும் குறைந்தபட்சமாக 18836ஐயும் தொட்டது. நிப்டி 39 புள்ளிகள் குறைந்து 5694ல் முடிவடைந்தது. இது அதிக பட்சமாக 5745ஐயும், குறைந்தபட்சமாக 5682ஐயும் தொட்டது. சென்செக்ஸ் 19000க்கு கீழே குறைந்து முடிவடைந்ததும், நிப்டி 5700ஐத் தாண்டி முடிவடைந்ததும் இந்தியப் பங்குச்சந்தைகள் கரடிகளின் பிடியில் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

கடந்த இரண்டு நாட்களின் சரிவைக் கொஞ்சமாவது ஈடுகட்டும் என்ற முதலீட்டாளர்களின் நம்பிக்கையை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலிருந்து ஐந்து தி.மு.க. அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர் என்ற செய்தி குலைத்தது. இந்த செய்தியால் நேற்று பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு இன்றும் தொடர்ந்தது. இன்றைய வர்த்தகத்தில் ஹிந்துஸ்தான் யூனிலிவர், டாட்டா மோட்டார்ஸ், சிப்லா, TCS , டாட்டா பவர்ஸ் நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும், ஏர்டெல்,SBI ,NTPC , ICICI வங்கி மற்றும் ஹிண்டால்கோ நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் முடிவடைந்தன.

'தங்கத்தின் விலை சரிவதால் வராத கடன்களின் தொகை அதிகரிக்கலாம்' என்று மன்னப்புரம் பைனான்ஸ் நிறுவனம் அறிவித்ததைத் தொடர்ந்து ஒரே நாளில் அந்த நிறுவனப் பங்குகள் 12 சதவிகிதம் வரை குறைந்தன. 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ஏர்டெல் நிறுவன அதிபர் திரு.சுனில் மிட்டலுக்கு நீதிமன்றம் சம்மன் பிறப்பித்ததை அடுத்து கடந்த நான்கு நாட்களாக சரிந்து வந்த ஏர்டெல் நிறுவனப் பங்குகள் இன்றும் 3 சதவிகிதம் குறைந்தன. ரிலையன்ஸ் கம்யூனிகேசன், ஐடியா செல்லுலார் மற்றும் டாட்டா கம்யூனிகேசன் போன்ற இதர தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பங்குகளும் 2 முதல் 7 சதவிகிதம் வரை சரிந்தன.

இன்றைய வர்த்தகத்தில் 2126 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும்,761 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும், 118 நிறுவனங்களின் பங்குகள் விலையில் மாற்றங்கள் இல்லாமலும் முடிவடைந்தன. இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் இன்று சற்று உயர்வு காணப்பட்டது. டெபாசிட்டுகளுக்கு வரி விதிப்பது தொடர்பாக சைப்ரஸ் அரசு சாதகமான முடிவு எடுத்ததைத் தொடர்ந்து மூன்று நாட்களாக சரிந்து வந்த ஐரோப்பிய சந்தைகளும் மதிய நிலவரப்படி உயர்வுடனே தொடங்கியுள்ளன


English Summary
The Indian equity market further cracked on Wednesday. Selling pressure resumed after five DMK ministers submitted their resignations to the Prime Minister Manmohan Singh

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...