???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜன.2 - பங்குச் சந்தை

Posted : புதன்கிழமை,   ஜனவரி   02 , 2013  05:36:56 IST

2013ஆம் ஆண்டின் முதல் நாளான நேற்று பங்குச் சந்தையில் காணப்பட்ட விறுவிறுப்பு இரண்டாம் நாளான இன்றும் தொடர்ந்தன. அமெரிக்காவின் நிதி சீரமைப்புத் திட்டத்தில் நிதானமான போக்கு கடைப்பிடிக்கப்படும் என்று வெளியான செய்தி முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. இன்றைய வர்த்தக நேர முடிவின்போது சென்செக்ஸ் 133 புள்ளிகள் அதிகரித்து 19714லும் நிப்டி 42 புள்ளிகள் அதிகரித்து 5993லும் முடிவடைந்தன.

கடந்த இரு வருட கால வர்த்தகத்தில் நிப்டி முதன்முறையாக 6000 என்ற எல்லையை இன்று தொட்டது. 2013ஆம் ஆண்டு பங்குச் சந்தைகளைப் பொருத்தவரை மிகச் சிறந்த ஆண்டாக அமையும் என்றே அனைவரும் நம்புகின்றனர். இந்த வருடத்தின் மார்ச் மாத இறுதிக்குள் நிப்டி புதிய உச்சத்தைத் தொடும் என்று மோதிலால் ஆஸ்வால் நிறுவனத்தைச் சார்ந்த வல்லுனர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். பிற நிறுவனங்களைச் சார்ந்த வல்லுனர்களும் இந்தக் கருத்தை ஆதரித்து உள்ளனர். பூஷன் ஷான்பாக் என்ற பங்கு வர்த்தக வல்லுநர் இன்னும் 18 முதல் 36 மாதங்களுக்கு சந்தை காளைகளின் பிடியில் இருக்கும் எனவும் 2015 ஆம் ஆண்டு இறுதிக்குள் நிப்டி 8000 என்ற எல்லையைத் தாண்டும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

இன்றைய வர்த்தகத்தில் பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசூகி , ONGC , BHEL மற்றும் ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்கள் விலைஉயர்ந்தும் விப்ரோ, ITC , M & M , Coal India போன்ற நிறுவனங்கள் விலை குறைந்தும் வர்த்தகமாயின.மும்பைப் பங்குச் சந்தையில் 1827 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் 1201 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...